வா வாத்தியார் படத்திற்காக தன் தாயாருடன் இணைந்து பாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!
அம்மாவுடன் இணைந்து 'வா வாத்தியார்' பட பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன் !
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”.
இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது.
இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய பாடல் வீடியோ வைரலாகி வருகிறது.
புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை தனது அம்மாவுடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து பாடிய பாடல் தான் இப்போது இணையம் முழுக்க ப...









