சட்டமும் நீதியும் இணைய தொடர் விமர்சனம்
சட்டமும் நீதியும் இணைய தொடர் விமர்சனம்
ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் 'சட்டமும் நீதியும்', திரைப்படத்தைவிட வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கும் தொடர் என தாராளமாகச் சொல்லலாம்.
நீதி மன்ற வளாகத்திலேயே ஒரு முதியவர் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்யும் முதல் காட்சியே கதைக்குள் நம்மை இழுத்துக்கொள்கிறது.
ஏன் அந்த நபர் தற்கொலை செய்து கொள்கிறார்?
அவருக்கு கிடைக்காமல் போன நீதி என்ன என்பது காட்சிகளாக விரியத் தொடங்குகிறது.
வழக்கறிஞரான 'பருத்தி வீரன்' சரவணன், கேஸ் எதுவும் கிடைக்காமல் நீதிமன்ற வளாகத்திலேயே டீக்கடைக்கு அருகில் நோட்டரி பப்ளிக் என்ற போர்டை வைத்துக்கொண்டு, சக வழக்கறிஞர்களின் ஏளனத்துக்கு ஆளாகிறார்.
கோர்ட்டில் மட்டும் இல்லை. வீட்டிலும் மகன்கூட மதிப்பதில்லை.
ஆனால் சட்டக்கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சரவணனின் திறமைகளை அறிந...
