Friday, October 2

Tag: SilambarasanTR

யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசன் இணைந்து நடத்தும் இசை நிகழ்ச்சி

யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசன் இணைந்து நடத்தும் இசை நிகழ்ச்சி

News
யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசன் டி.ஆர்.யை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தும் கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். இவர் பல நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி உலக மக்கள் அனைவரையும் இசையால் கவர்ந்து இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார் என்றால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். இந்த ரசிகர்களை உற்சாகம் படுத்தும் விதமாக இவருடன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசன் டி.ஆர்., இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருக்கிறார். திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசன் டி.ஆர். இருவரும் ஹை ஆன் யுவன் (High on U1) என்ற இசை நிகழ்ச்சிக்காக ஒன்று சேர்கிறார்கள். மலேசியாவில் ஜூலை 15 ஆம் தேதி ஹை ஆன் யுவன் என...
“‘பத்துதல’ ஸ்டுடியோ க்ரீனுக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைய வேண்டும்” – நடிகர் சிலம்பரசன்!

“‘பத்துதல’ ஸ்டுடியோ க்ரீனுக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைய வேண்டும்” – நடிகர் சிலம்பரசன்!

News
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘பத்துதல’ திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பு  நடந்தது. படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பேசியதாவது, “கோவிட் உள்ளிட்டப் பல தடைகளைத் தாண்டி இந்தப் படத்தை சிறப்பான ஒன்றாக இயக்குநர் கிருஷ்ணா கொடுத்திருக்கிறார். ’சில்லுன்னு ஒரு காதல்’ மூலம் எங்கள் பயணம் தொடங்கியது. இந்தப் படம் இன்றளவும் பல குடும்பங்களுக்குப் பிடித்த ஒன்று. அந்தப் படத்திற்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் கிருஷ்ணாவுடன் இணைவதில் மகிழ்ச்சி. படம் நிச்சயம் வெற்றியடையும். ரஹ்மான் சாருடன் எனக்கு இது மூன்றாவது படம். தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. சாயிஷாவுக்கு ஸ்பெஷல் நன்றி. தமிழ்நாட்டின் ரன்பீர் கபூர் என்று சொல்லும்...
சிலம்பரசன் நடிக்கும் “வெந்து தணிந்தது காடு”  படப்பிடிப்பு  நிறைவு!

சிலம்பரசன் நடிக்கும் “வெந்து தணிந்தது காடு”  படப்பிடிப்பு  நிறைவு!

News
Vels Film International Dr. ஐசரி K கணேஷ் வழங்க,  கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு”  படப்பிடிப்பு  நிறைவு! சிலம்பரசன் TR நடிக்கும், Vels Film International Dr. ஐசரி K கணேஷ் தயாரிப்பில் உருவாகும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றது. பிளாக்பஸ்டர் கூட்டணியான சிலம்பரசன் டி.ஆர்.-ஏ.ஆர்.ரஹ்மான்-கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்க நிலையில், இதன் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து போஸ்ட் புரொடக்‌சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படம் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கிறது, அவரது வாழ்க்கை மும்பைக்கு சென்ற ப...
“மாநாடு சிலம்பரசனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும்” – ஒய்’ஜி.மகேந்திரன்!

“மாநாடு சிலம்பரசனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும்” – ஒய்’ஜி.மகேந்திரன்!

News
சிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது மாநாடு திரைப்படம்.. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, வாகை சந்திர சேகர், எஸ் ஏ சந்திர சேகர், ஒய்.ஜி,மகேந்திரன், உதயா, பிரேம்ஜி, மனோஜ் கே. பாரதி, அஞ்சனா கீர்த்தி, கருணாகரன், மகத் ராகவேந்திரா, டேனி, அரவிந்த் ஆகாஷ் என நட்சரத்தேர்விலேயே பிரமிக்க வைக்கிறார் வெங்கட் பிரபு. குறிப்பாக இந்தப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்தால் தான், பொருத்தமாக இருக்கும் என அவரை ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர் இயக்குநர் வெங்கட் பிரபுவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும். நடிகர் திலகம் சிவாஜி ரஜினி, கமல் என ஒரே சமயத்தில் 3 ஜாம்பவான்களுடன் நகைச்சுவையில் கலக்கிய ஒய்.ஜி.மகேந்திரன், இப்போது சிலம்பரசன் கால...
‘மாநாடு’  படத்துக்காக 6 நிமிட காட்சியை ஒரே டேக்கில் நடித்து அசத்திய சிலம்பரசன்!

‘மாநாடு’ படத்துக்காக 6 நிமிட காட்சியை ஒரே டேக்கில் நடித்து அசத்திய சிலம்பரசன்!

News
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் படம் மாநாடு சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துவரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், ஒய்.ஜி. மகேந்திரன், வாகை சந்திர சேகர், எஸ் ஏ சந்திர சேகர், அஞ்சனா கீர்த்தி, உதயா, மனோஜ் கே. பாரதி, பிரேம்ஜி, கருணாகரன், மகத், டேனியல் போப், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். உமேஷ் ஜே குமார் கலையை கவனிக்க ஸ்டண்ட் சில்வா சண்டைப் பயிற்சி கையாள மதன் கார்க்கி பாடல்கள் எழுத நடனம் அமைக்கிறார் ராஜூ சுந்தரம். வாசுகி பாஸ்கர் ஆடை வடிவமைப்பு ஏரியாவை கவனித்துக் கொள்கிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். இப்படத்தின்...

சிலம்பரசனுக்கு அம்மா தந்த பரிசு!

News
இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின் வேலைகளை முடித்த கையோடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் நடிகர் சிலம்பரசன் டி.ஆர். ஒயாமல் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்த வேலையில் நடிகர் சிலம்பரசனின் தாய் திருமதி உஷா ராஜேந்தர் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்து மகிழ்வித்தார். நீண்ட நாளாக நடிகர் சிலம்பரசன் டி.ஆர் விருப்பப்பட்ட காரை அன்பு பரிசாக தனது மகனுக்கு அளித்தார். தனது தாயின் பாசமிகு பரிசை பெற்றுக்கொண்ட நடிகர் சிலம்பரசன் டி.ஆர் தற்போது தனது புதிய காரில் உலா வருகிறார்....