Wednesday, April 29

Tag: Sivakarthikeyan Productions

‘தாய் கிழவி’ படம் புதிய டிரெண்டை உருவாக்க வேண்டும்

‘தாய் கிழவி’ படம் புதிய டிரெண்டை உருவாக்க வேண்டும்

Uncategorized
'தாய் கிழவி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு! பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலை, “நல்ல கதைகள் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இயங்கி வருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம். இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் கதை மீது சிவகார்த்திகேயன் வைத்த நம்பிக்கையில் இருந்துதான் படம் தொடங்கியது. பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறோம். படத்தின் ரஃப் கட் பார்த்துவிட்டு எங்கள் அணியை சிவா பாராட்டினார். சிவகுமார் எவ்வளவு திறமையான இயக்குநர் என்பது இந்தப் படத்தின் மூலமும், அவருக்கு அடுத்து கிடைத்திருக்கும் ...
நல்ல கருத்து கலந்த நையாண்டி படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’!

நல்ல கருத்து கலந்த நையாண்டி படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’!

News
பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நடிகரை பற்றி புகழ்ந்து சொல்ல அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் தான் 'Boy Next Door". அவர்கள் மக்கள் மத்தியில் ஒருவராக அடையாளம் காணப்படும் ஒரு மந்திரத்தை கொண்டிருப்பர், ஆனால் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படக்குழுவில் உள்ள அத்தனை பேருமே "நம்ம வீட்டு பசங்க" என்ற அடைமொழிக்கு ஏற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் சின்னத்திரை மற்றும் Youtube என இரண்டிலும் தங்களது பகுத்தறிவுடன் கூடிய நகைச்சுவையால் பிரபலமானவர்கள். உண்மையில், இது தான் படத்திற்கு மிகப்பெரிய எனர்ஜியை மக்களிடையே உருவாக்குகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ரசிகர்கள் படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக உள்ளார். இந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர்...
நடிகர் சிவக்கார்த்திகேயன் தயாரிப்பில்  ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’

நடிகர் சிவக்கார்த்திகேயன் தயாரிப்பில் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’

News
தணிக்கை குழு உறுப்பினர்கள் 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' படத்துக்கு 'யு' சான்றிதழ் கொடுத்திருப்பது ஒட்டுமொத்த குழுவுக்கும் மகிழ்ச்சியான ஒரு செய்தி. நடிகர்கள் ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ராதாராவி மற்றும் நாஞ்சில் சம்பத் , அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ஆகியோர் முற்றிலும் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து வருகின்றனர். இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, "என்னைப் போன்ற ஒரு அறிமுக இயக்குனருக்கு, இது கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வது போல உள்ளது. குழுவில் உள்ள  ஒவ்வொருவருக்கும் மிக்க மகிழ்ச்சி. இயற்கையாகவே, நாங்கள் கதை, திரைக்கதை எழுதும்போதே குடும்ப ரசிகர்களுக்கான படமாக நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜாவை கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இரும்தோம். இப்போது, சென்சாரில் நல்ல ஒரு சாதகமான முடிவு கிடைத்திருப்பது படத்தின் மீதான நம்...
புதுமுகம் ஷிரின் காஞ்ச்வாலா

புதுமுகம் ஷிரின் காஞ்ச்வாலா

News
மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் தன் திறமைகளை வெளிப்படுத்திய ஷிரின் காஞ்ச்வாலா, தற்போது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் பேட்ச் ஒர்க் மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் வேளையில் இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவங்களை பற்றி மிகவும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.    இது குறித்து நடிகை ஷிரின் காஞ்ச்வாலா கூறும்போது, "ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக நான் விமான பணிப்பெண்ணாக பணி புரிந்திருக்கிறேன். சிவகார்த்திகேயன் புரொடக்சன் பேனரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சார் மற்றும் கார்த்திக் வேணுகோபாலன் ஆகிய இருவருக்கும் நன்றி. மொத்த ...

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் “தயாரிப்பு எண் 2”

News
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் "தயாரிப்பு எண் 2" படத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துமே கோலிவுட்டில் பரபரப்பான அலைகளை உருவாக்குகிறது. குறிப்பாக, 'பிளாக் ஷீப்' மூலம் மிக பிரபலமான பொழுதுபோக்கு கலைஞர்களினால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. ஆனாலும், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்து கொண்டே இருக்கிறது. நீண்ட காத்திருப்புக்கு விடையை அளித்துள்ளது படக்குழு. சமீபத்திய இசை சென்சேஷன் ஷபிர் இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.   "ஷபிர் இசையமைத்த ஆல்பங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், குறுகிய காலத்திலேயே அவர் ஒரு சென்சேஷனாக மாறியிருக்கிறார். மிக குறுகிய காலத்தில் வெற்றி பாடல்களை வழங்கி...
ஒரு பெண்ணின் கனவுகள் மற்றும் போராட்டங்களைச் சொல்லும் கனா

ஒரு பெண்ணின் கனவுகள் மற்றும் போராட்டங்களைச் சொல்லும் கனா

News
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் 'கனா' திரைப்படம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ஒரு தனித்துவமான திரைப்படம். இதற்கு முன்பு திரையில் பார்த்திராத சிறப்பு அம்சத்துடன் வெளியாக இருக்கிறது. இயக்குனர் அருண்ராஜா காமராஜ், வெற்றியை நோக்கிய ஒரு பெண்ணின் கனவுகள் மற்றும் போராட்டங்களை மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார். கூடுதலாக, ஒரு தந்தை தன் மகளின்  கனவுகளை நிறைவேற்றுவதில் அவளுக்கு பக்க பலமாக இருப்பதன்  முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட இந்த படத்தின் டிரெய்லர் 37 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிகப்பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது.    இது குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறும்போது, "எங்கள் எதிர்பார்ப்புகளை தாண்டி இந்த  டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மொத்த குழு...