Tag: Sivakarthikeyan
எளிய பூஜையுடன் துவங்கியது சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’!
பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது, மிகப்பெரிய அளவில் மக்களிடம் சென்று சேர்வது மற்றும் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் படங்களை கொடுப்பவரை தான் 'நட்சத்திரம்' என்று வரையறுக்கிறோம். அந்த வகையில், சிவகார்த்திகேயன் தனது அடுத்தடுத்த படங்களால் அவரது கேரியர் கிராஃபை மேலே நகர்த்தி செல்கிறார். அவரது குடும்ப பொழுதுபோக்கு படமான 'மிஸ்டர் லோக்கல்' மே 1ஆம் தேதி வெளியாகிறது. அதனை தொடர்ந்து இன்னும் பெயரிடப்படாத ஃபேண்டஸி படமான SK14 படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படமான 'ஹீரோ' இன்று காலை (மார்ச் 13) ஒரு எளிய பூஜையுடன் துவங்கியிருக்கிறது. இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க, KJR ஃபிலிம்ஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கிறார்.
தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே ராஜேஷ் கூறும்போது, "KJR ஸ்டுடியோ சார்பில் ...
ஞானவேல் ராஜா தயாரிக்கும் “மிஸ்டர் லோக்கல்”
ஒரு படத்தின் தலைப்பு என்பது ஏறத்தாழ ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும். குறிப்பாக சிவ கார்த்திகேயன் படங்களின் தலைப்பு மக்களை எளிதாக ஈர்க்கும் வகையில் இருக்கும். அதை போலவே இயக்குனர் ராஜேஷ் படங்களின் தலைப்பும் பரபரப்பு கூட்டும் தலைப்பாகவே இருக்கும். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்களும் அவ்வாறே சுவாரசியமான தலைப்பை கொண்ட படங்களாகவே இருக்கும். இவர்கள் மூவரும் இணைந்து பணிபுரியும் படம் என்னும் போது தலைப்பை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக வே இருக்கும். அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில் தற்போது தயாரிப்பில் இருக்கும் இவர்கள் இணையும் படத்துக்கு "மிஸ்டர் லோக்கல்" என தலைப்பு இடப்பட்டு இருக்கிறது. இணைய தளத்தில் இந்த தலைப்பு வெளி வந்த உடனே அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
" இந்த படத்துக்காக பல்வேறு தலைப்ப...
ஒரு பெண்ணின் கனவுகள் மற்றும் போராட்டங்களைச் சொல்லும் கனா
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் 'கனா' திரைப்படம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ஒரு தனித்துவமான திரைப்படம். இதற்கு முன்பு திரையில் பார்த்திராத சிறப்பு அம்சத்துடன் வெளியாக இருக்கிறது. இயக்குனர் அருண்ராஜா காமராஜ், வெற்றியை நோக்கிய ஒரு பெண்ணின் கனவுகள் மற்றும் போராட்டங்களை மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார். கூடுதலாக, ஒரு தந்தை தன் மகளின் கனவுகளை நிறைவேற்றுவதில் அவளுக்கு பக்க பலமாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட இந்த படத்தின் டிரெய்லர் 37 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிகப்பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது.
இது குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறும்போது, "எங்கள் எதிர்பார்ப்புகளை தாண்டி இந்த டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மொத்த குழு...
Seemaraja – Vaaren Vaaren Seemaraja Video Song
https://www.youtube.com/watch?v=yWezfWaUVlo&feature=youtu.be






