சொட்ட சொட்ட நனையுது _ விமர்சனம்
சொட்ட சொட்ட நனையுது _ விமர்சனம்
இளம் வயதிலேயே தலையில் வழுக்கை விழுந்து மனப் புழுக்கத்தில் இருக்கும் இளைஞர்களை பற்றி நகைச்சுவையுடன் சொல்லும் படம் சொட்ட சொட்ட நனையுது.
இளைஞன் நிஷாந்த் ரூசோவுக்கு தலையில் வழுக்கை இருப்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள பெண்கள் மறுத்து விடுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் எதிர் வீட்டில் வசிக்கும் வர்ஷினி அவரை திருமணம் செய்து கொள்ள முன் வருகிறார்.
விடிந்தால் திருமணம் என்ற சூழ்நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று மொபைல் மூலம் வர திருமணத்தை நிறுத்தி விடுகிறார் ரூசோ.
பின்னர் சென்னைக்கு வந்து தலை முடி வளர்வதற்கான நவீன சிகிச்சையை மேற்கொண்டு, ஸ்டைலான ஹேர் ஸ்டைலுடன் ஊருக்கு திரும்புகிறார். பின்னர் பெற்றோர்கள் ஏற்பாடு செய்தபடி ஷாலினியுடன் அவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது.
இந்தத் திருமணத்திலும் சில பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இவற்றையெல்லாம் கடந்து நிஷாந்த் ரூசோ திருமண...
