Sunday, September 27

சொட்ட சொட்ட நனையுது _ விமர்சனம்

Loading

சொட்ட சொட்ட நனையுது _ விமர்சனம்

இளம் வயதிலேயே தலையில் வழுக்கை விழுந்து மனப் புழுக்கத்தில் இருக்கும் இளைஞர்களை பற்றி நகைச்சுவையுடன் சொல்லும் படம் சொட்ட சொட்ட நனையுது.
இளைஞன் நிஷாந்த் ரூசோவுக்கு தலையில் வழுக்கை இருப்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள பெண்கள் மறுத்து விடுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் எதிர் வீட்டில் வசிக்கும் வர்ஷினி அவரை திருமணம் செய்து கொள்ள முன் வருகிறார்.
விடிந்தால் திருமணம் என்ற சூழ்நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று மொபைல் மூலம் வர திருமணத்தை நிறுத்தி விடுகிறார் ரூசோ.
பின்னர் சென்னைக்கு வந்து தலை முடி வளர்வதற்கான நவீன சிகிச்சையை மேற்கொண்டு, ஸ்டைலான ஹேர் ஸ்டைலுடன் ஊருக்கு திரும்புகிறார். பின்னர் பெற்றோர்கள் ஏற்பாடு செய்தபடி ஷாலினியுடன் அவருக்கு திருமணம்  நடக்க இருக்கிறது.
இந்தத் திருமணத்திலும் சில பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இவற்றையெல்லாம் கடந்து நிஷாந்த் ரூசோ திருமணம் நடைபெற்றதா இல்லையா என்பதுதான் சொட்ட சொட்ட நனையுது படத்தி் கதை. சொட்டை தலை காரணமாக ஏற்படும் அவமானங்களால் மனம் புழுங்குவதும், திருமணம் நடக்க இருக்கும் சூழலில் எதிர்பாராமல் அது நின்று விடும்போது அதிர்ச்சியை தாங்க முடியாமல் அல்லாடும் காட்சிகளிலும் திறம்பட நடித்திருக்கிறார் நிஷாந்த்.
பாடல் காட்சிகளிலும் திணறாமல் சரியான முறையில் நடன அசைவுகளை செய்து கைத்தட்டல் பெறுகிறார்.
வர்ஷினி, ஷாலினி இருவருமே தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்து கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.
இரண்டாம் பகுதியில் சில காட்சிகளிலே வந்தாலும் புகழ் தனது பாணி காமெடி மூலம் கவனம் ஈர்க்கிறர்.
ரெஞ்சித் உன்னி இசையில் உருவான இரண்டு பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.
ரயீஷ் ஒளிப்பதிவு படத்துக்கு பக்கபலம் என்று தான் சொல்ல வேண்டும்.
தலையில் சொட்டை விழுவது ஏதோ மிகப்பெரிய பாவம் போலவும்,  குற்றச் செயல் போலவும் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இருப்பதை இயக்குனர் நவீத் எஸ் பரீத் தவிர்த்து இருக்கலாம்.
வித்தியாசமான கதை களத்திற்காகவும் நகைச்சுவை காட்சிகளுக்காகவும் தாராளமாக இப்படத்தை கண்டு ரசிக்கலாம்.