தலைவன் தலைவி _ விமர்சனம்
தலைவன் தலைவி _ விமர்சனம்
குடும்பப் படங்களை இயக்குவதில் தனித்துவம் மிக்க இயக்குனர் பாண்டிராஜ், தனது பாணியிலிருந்து சற்றே விலகி நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி இருக்கும் படம்தான் 'தலைவன் தலைவி'.
தந்தை சரவணன், தாய் தீபா சங்கர், மற்றும் தம்பியுடன் இணைந்து ஹோட்டல் தொழில் ஈடுபட்டிருக்கிறார் விஜய் சேதுபதி.
அவருக்கு நித்யா மேனனுடன் திருமணம் நடந்து, குழந்தை ஒன்றும் பிறந்த பிறகு தம்பதிக்கிடையே ஏற்படும் பிரிவால் தாய் வீட்டில் செல்கிறார் நித்யா.
மருமகன் விஜய் சேதுபதிக்கு தெரியாமல் நித்யா மேனனின் குழந்தைக்கு மொட்டை அடிக்க அவரது குடும்பமே குலதெய்வம் கோயிலுக்கு செல்கிறது.
இந்தத் தகவல் தெரிந்து அவர்களுடன் சண்டை போடத் தயாராக விஜய் சேதுபதி கோவிலுக்கு வருகிறார்.
இதைத்தொடர்ந்து நடப்பது எல்லாம் சண்டை அல்ல... காமெடி கலாட்டா.
பாதி மொட்டை போட்ட தலையுடன் குழந்தை இருக்க, இரு த...
