Tuesday, September 1

Tag: Thangalaan

வட இந்திய மாநிலங்களிலும் கொண்டாடப்படும் தங்கலான்!

வட இந்திய மாநிலங்களிலும் கொண்டாடப்படும் தங்கலான்!

News
தமிழ்நாடு , ஆந்திராவை தொடர்ந்து வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் தங்கலான்! இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன் , பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தங்கலான் . ஜீவி பிரகாஷ் இசையில் , கிஷோர்குமார் ஒளிப்பதிவில் , மூர்த்தி கலை இயக்கத்தில் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது. தமிழ் ,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியான தங்கலான் படத்திற்கு ரசிகர்கள் , பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததோடு வெற்றிப்படமானது . தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டானதோடு உலகளவில் நூறு கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியில் செப்டம்பர் 6 ம் தேதி வட இந்தியா முழுவதும் வெளியானது. வட இந்திய மாநிலங்களில் வெளியான நாள் முதல் ஹவுஸ்புல் காட்சிகளாக மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர். வட இந்திய ஊடகங்கள் இயக்குனர் பா.இரஞ்சித்...
கோடி வசூலை நோக்கி ‘தங்கலான்’ பயணம்!

கோடி வசூலை நோக்கி ‘தங்கலான்’ பயணம்!

News
தங்கலான் - உலகளாவிய அளவில் ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி பயணம்! சீயான் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் எழுத்து-இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் K.E. ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான தங்கலான் திரைப்படம், வசூல் ரீதியில் வெற்றி அடைந்து, உலகளவில், ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி தற்போது நகர்ந்திருக்கிறது. தங்கலான் திரைப்படம், சீயான் விக்ரம் அவர்களுக்கு அவரது திரை வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முதல் நாள் வசூலை கொண்டு வந்தது. ரூபாய் 26 கோடிக்கும் மேல் முதல் நாள் வசூல் செய்து சாதனை படைத்த இப்படம், தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இப்படத்தின் இரண்டாவது வாரம், தமிழ்நாட்டில் பல புதிய திரைப்படங்கள் வெளியாகி இருந்த போதிலும், வசூலில் ஸ்டெடியாக இப்படம் சென்று கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் மற்றும் தெலங்கானாவில், பெரும் வரவேற்பை பெற்று இரண்டாவது வாரம் இப்படம் 141 தியேட்டர...
தனித்துவமான முத்திரையை பதித்த படைப்பு ‘தங்கலான்’!

தனித்துவமான முத்திரையை பதித்த படைப்பு ‘தங்கலான்’!

News
'சீயான்' விக்ரமின் 'தங்கலான்' படக் குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா! ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து, இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரைகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான 'தங்கலான்' திரைப்படம்... வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் தங்கலான் படத்திற்கு, ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் வழங்கிய ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக் குழுவினர் விழா ஒன்றினை ஒருங்கிணைத்திருந்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை செயல் அதி...
தங்கலான் _ விமர்சனம்

தங்கலான் _ விமர்சனம்

Uncategorized
தங்கலான் _ விமர்சனம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பீரியட் பிலிமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ப.ரஞ்சித். வெள்ளையர் காலத்தில் நடக்கிறது கதை. தங்க வயலில் வேலை செய்ய ஆட்களை தேடுகிறார் வெள்ளை அதிகாரி. ஊரில், ஜமீனிடம் அடிமையாக வாழும் நிலையிலிருந்து மீள.. ஒடுக்கப்பட்ட மக்கள் அங்கே செல்கிறார்கள். அங்கும் அவர்களது நிலை மாறவில்லை. தங்கலான் என்கிற அவர்களது தலைவன் அதன் பிறகு என்ன முடிவெடுக்கிறார் என்பதே கதை. நாயகன் தங்கலானாக அசத்தி இருக்கிறார் விக்ரம். மனைவி மீதான காதல், குழந்தைகள் மீதான பாசம், எதிர்கால சந்ததியினர் மீதான அக்கறை என வாழ்ந்திருக்கிறார் மனிதர். இவரது நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்வதானால் ஒவ்வொரு காட்சியையும் சொல்ல வேண்டும். அதி அற்புதம். விக்ரமின் புகழ் கிரீடத்தில் மற்றும் ஓர் ஒளிவீசும் வைரமாக ஜொலிக்கிறது தங்கலான்.  விக்ரமின் மனைவியாக வரும் பார்வதியும் கதாபாத்திர...
“சீயான் விக்ரம் உழைப்பு என்னை வியக்க வைக்கிறது”_ பா.ரஞ்சித்

“சீயான் விக்ரம் உழைப்பு என்னை வியக்க வைக்கிறது”_ பா.ரஞ்சித்

News
சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' பத்திரிகையாளர் சந்திப்பு! ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'தங்கலான்' திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்துவதற்காக படக் குழுவினர் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரூ, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ,சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணித்து ரசிகர்களை நேரில் சந்தித்து உரையாடினர். இதனைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது சீயான் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல், ஒளிப்பதிவாளர் ஏ. கிஷோர் குமார், கலை இயக்குநர் மூர்த்தி, இயக்குநர் பா. ரஞ்சித், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத...