தக்ஸ் – திரைப்பட விமர்சனம்
தக்ஸ் திரைப்பட விமர்சனம்
ஆழமான காதல் கதையை அழகியல் மதிப்பீடு மிக்க 'ஹே சினாமிகா' என்ற பெயரில் படமாக்கி இயக்குநராக அறிமுகமான டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, 'தக்ஸ்' என்ற தனது இரண்டாவது படத்தில் அடிதடி ஆக்ஷன் கதையை குமரி மாவட்ட பின்னணியில் உருவாக்கியிருக்கிறார்.
நாகர்கோவில் பகுதியில் பெரும் புள்ளியாக வலம் வரும் பி.எல்.தேனப்பனிடம் கணக்கு வழக்குகளை பராமரிக்கும் பணியைச் செய்து வருகிறார் நாயகன் ஹிர்து ஹாரூன். தேனப்பன் செய்த கொலைக்காக அவரைப் பழி வாங்கக் காத்திருக்கும் நண்பனுடன் சேர்ந்து தேனப்பனின் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தனது காதலியுடன் ஆஸ்த்ரேலியாவுக்கு செல்லத் திட்டமிடுகிறார் நாயகன்.
இதற்கிடையில் காதலிக்கு தொந்தரவு செய்த ஒருவனைக் கொலை செய்துவிட்டு சிறைக்குச் செல்கிறார். சிறையில் இருக்கும் பாபி சிம்ஹா, மூனீஸ் காந்த் உள்ளிட்ட வேறு சிலரும் தப்பிக்கத் திட்டமிடுகிறவர்கள்தான்.
இவர்...
