‘டைகர் 3’யின் ஆக்சன் காட்சிகளுக்காக 2 மாதங்கள் வரை என்னை தயார்படுத்தி கொண்டேன்” _கத்ரீனா கைப்!
“‘டைகர் 3’யின் ஆக்சன் காட்சிகளுக்காக 2 மாதங்கள் வரை என்னை தயார்படுத்தி கொண்டேன்” ; கத்ரீனா கைப்!
யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் வரிசை படங்களில் முதன் பெண் உளவாளியான, கத்ரீனா கைப் நடிக்கின்ற சோயா என்கிற கதாபாத்திரம் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவல் ஒவ்வொரு ஒரு அடியிலும் ஆணுக்கு சமமாக காட்டப்பட்டு வருகிறது.. சண்டை என வந்துவிட்டால் எந்த அளவுக்கும் இறங்கி ஒரு கை பார்க்கும் அளவுக்கு அவள் கடுமையான, புத்திசாலித்தனமான மற்றும் கொடுமையான உளவாளி.
கத்ரீனா சோயா கதாபாத்திரத்தை தானாகவே சொந்தமாக உருவாக்கியிருக்கிறார் என்பதுடன் தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு டைகர் படத்திலும் அவரது கதாபாத்திரத்தை தவறாமல் உச்சநிலைக்கு எடுத்து செல்கிறார்கள். நம்பமுடியாத சண்டை காட்சிகளை செய்துள்ளதற்காக கத்ரீனா கைப் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். மேலும் இதுவரை வெள்ளித்திரையில் வேறெந்த பெண்ணும் செய்திராத அளவுக்கு ஒத்தைக்கு ஒத்தை மோத...








