‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் 'தேடியே போறேன்...' பாடல் ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி.இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது!
விஜய் ஆண்டனியின் படங்களில் எப்போதும் அழகான மற்றும் மறக்க முடியாத பாடல்கள் இருக்கும். 'மழை பிடிக்காத மனிதன்' படம் அதன் தலைப்பைப் போலவே மனதைக் கவரும் மெல்லிசை மற்றும் பெப்பி பாடல்கள் என சுவாரஸ்யமான கலவையைக் கொண்டுள்ளது. கடந்த வாரம் வெளியான படத்தின் முதல் சிங்கிள் 'தீரா மழை...' நல்ல வரவேற்பைப் பெற்றதோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இசையமைப்பாளர் ஹரி டஃபுசியாவின் மற்றொரு மெல்லிசை பாடலான ‘தேடியே போறேன் …’ என்ற இரண்டாவது பாடல் இன்று பிரபல இசை இயக்குநர்களான ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி. இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது.
‘தீரா மழை...' பாடலுக்கு பாராட்டு கிடைத்தது போலவே, இந்த 'தேடியே போறேன்' பாடலுக்கும் இசை ஆர்வலர...