வித்தியாசமான படத்தலைப்புகளை வைக்கும் விஜய் ஆன்டனியின் புதிய படத்தின் பெயர் என்ன?

0

 274 total views,  1 views today

பிரசாந்த் நடித்த  ஜாம்பவான் , அர்ஜுன் நடித்த  வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து  சசிகுமார் ,நிக்கி கல்ராணி நடிப்பில் T.D ராஜா தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம்  ” ராஜ வம்சம் ” .இது  T. D ராஜாவின் மூன்றாவது  படமாகும் . தற்போது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்
இயக்கும் இப்படம் T .D ராஜாவின் நான்காவது தயாரிப்பாகும் .

அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் .

உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் .

படக்குழுவினர் கலந்துகொண்டு இப்படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது .

வித்தியாசமான படத்தலைப்புகளை வைக்கும் விஜய் ஆன்டனியின் புதிய படத்தின் பெயர் என்ன என்று திரையலகினரே ஆவலோடு எதிர்பார்திருக்கின்றனர்.

இதர நடிகை – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
தொழிநுட்பக்குழு : இயக்கம் – ஆனந்த கிருஷ்ணன் ,தயாரிப்பு – T D ராஜா,
இணைத்தயாரிப்பு – ராஜா சஞ்சய்,
இசை – ஜோகன்,
ஒளிப்பதிவு – N S உதயகுமார்,
மக்கள்தொடர்பு – ரியாஸ் கே அஹமது

Share.

Comments are closed.

CLOSE
CLOSE