Wednesday, October 29

Tag: vijay sethupathi

காதலர் தினத்திற்காக மீண்டும் வெளியாகும் ’96’ திரைப்படம்!

காதலர் தினத்திற்காக மீண்டும் வெளியாகும் ’96’ திரைப்படம்!

News
'ராம், ஜானு'வின் ‘96’ திரைப்படம் இந்த காதலர் தினத்திற்காக பிரமாண்ட திரை எண்ணிக்கையுடன் மீண்டும் வெளியிடப்பட உள்ளது! டைம்லெஸ் கிளாசிக் படங்கள் எப்போதும் திரைப்படப் பிரியர்களுக்கான உற்சாக டானிக். படம் வெளியாகி பல வருடங்கள் கடந்தாலும் இந்தப் படங்களை மீண்டும் பார்க்கும்போது அவர்களுக்கு முதல்முறை பார்க்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். குறிப்பாக, 'காதல் கதைகள்' பார்வையாளர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, அந்தக் கதைகளை மீண்டும் பார்வையாளர்களை பார்க்க வைக்கிறது. இந்த வரிசையில் ’ரோமியோ ஜூலியட்’, ‘ரோமன் ஹாலிடே’, ‘டைட்டானிக்’, ‘திவாலே துல்ஹன் லே ஜெயங்கே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போன்ற பல திரைப்படங்களை உதாரணமாகச் சொல்லலாம். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில், சி. பிரேம் குமார் இயக்கத்தில் அனைவரின் இதயங்களிலும் என்றும் சிம்மாசனம் இட்டு அமர்ந்தி...
மேரி கிறிஸ்மஸ் விமர்சனம்

மேரி கிறிஸ்மஸ் விமர்சனம்

Reviews
மேரி கிறிஸ்மஸ் விமர்சனம் 'பாஷி' இணைய தொடர் மூலம் அகில இந்திய அளவில் கவனம் ஈர்த்த விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் இன்னும் அதிக அளவில் இந்திய ரசிகர்களிடையே அவரை கொண்டு சேர்க்கும் என்பது உறுதி. கணவனுடன் ஒத்து வாழப் பிடிக்காமல் குழந்தையுடன் தனித்து வாழ்ந்து வரும் கத்ரீனா கைஃப், ஒரு கிறிஸ்மஸ் தினத்தன்று உணவு விடுதி ஒன்றில் விஜய் சேதுபதியை முதல் முறையாக சந்திக்கிறார்.  இருவருக்கும் இடையே ஏற்படும் பழக்கம் நெருக்கமாக, கத்ரீனா கைப் வீட்டுக்கு வருகிறார் விஜய் சேதுபதி. ஆனால் அங்கே அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது.  கத்ரீனா கைஃப் கணவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். கொலைப்பழி விஜய் சேதுபதி மீது விழுகிறது இந்த பழியில் இருந்து அவர் எப்படி தப்பித்தார்?  உண்மையில் கணவரை கொன்றது யார்?  என்ற மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் படம் தான் மேரி கிறிஸ்மஸ. ...
குய்கோ பட டிரைலரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

குய்கோ பட டிரைலரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

News
குய்கோ பட டிரைலரை வெளியிட்ட விஜய் சேதுபதி! எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் குய்கோ. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடிக்க, இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அருள் செழியன் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார். இப்படம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் டிரைலரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....
‘குரங்கு பொம்மை’ படப்புகழ் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி!

‘குரங்கு பொம்மை’ படப்புகழ் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி!

News
பேஷன் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘குரங்கு பொம்மை’ படப்புகழ் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 20’ படப்பிடிப்பு துவங்கியது பேஷன் ஸ்டுடியோஸ் இந்த வருடம் 2023-ல் பல படங்களுக்கான திட்டங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், தற்போது அதன் புதிய புராஜெக்ட் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘புரொடக்‌ஷன் நம்பர் 20’ எனத் தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இதில் ’மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ‘குரங்கு பொம்மை’ படப்புகழ் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் எளிய பூஜையுடன் தொடங்கியது. நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சில முன்னணி நடிகைகளிடம் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தப் படத்தி...

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகும் ‘மைக்கேல்’!

News
Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் தயாரிப்பில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் 'மைக்கேல்' ரொமான்ஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியாவின் பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது.., "படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக்குழு சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்." தயாரிப்பாளர் SR பிரபு பேசியதாவது., " சந்தீப் தான் மாநகரம் திரைப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். இந்த படத்தில் இருக்கும் அனைவருடனும் தனித்தனியாக நான் பணியாற்றி இரு...
சந்தீப் கிஷன்-விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘மைக்கேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

சந்தீப் கிஷன்-விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘மைக்கேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

News
சந்தீப் கிஷன் - 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் 'மைக்கேல்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு! நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் பான் இந்திய படைப்பான 'மைக்கேல்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் நட சிம்ஹம் நந்தமுரி பாலகிருஷ்ணா, தமிழில் முன்னணி நட்சத்திர பிரபலங்கள் ஜெயம் ரவி மற்றும் அனிருத் ரவிச்சந்தர், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரம் நிவின்பாலி ஆகியோர் இணைந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படம் 'மைக்கேல்'. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் மக்கள் செல்வன் வ...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு  விருந்து படைத்த பிரைம் வீடியோ!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து படைத்த பிரைம் வீடியோ!

News
பிரைம் வீடியோ, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமேசான் ப்ரைம் நிறுவனம், இந்தியா முழுவதும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஃபார்சி இணைய தொடரிலிருந்து விஜய் சேதுபதி கதாப்பாத்திர காணொளி வெளியிட்டுள்ளது. ஏமாற்றுவதில் வல்லவனாக இருக்கும் ஆர்டிஸ்ட் எனும் ஷாகித் கபூர் பாத்திரத்தை துரத்தி பிடிக்கும் மைக்கேல் எனும் காவலதிகாரி பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த நாட்டிலிருந்து கள்ளநோட்டுக் கும்பலை ஒழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அதற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் ஒரு காவல் அதிகாரியின் அதிரடியான வாழ்க்கையை அசத்தலாக காட்சிப்படுத்துகிறது இந்த வீடியோ காட்சிகள். கள்ள நோட்டு கும்பலில் பின்னால் இருக்கும் மனுசுக் (கே கே மேனன்) மற்றும் ஆர்டிஸ்ட் ( ஷாகித் கபூர் ) இருவரையும் பிடிக்க விஜய் சேதுபதியின் காவலதிகாரி ப...
விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமான ‘ஃபார்ஸி’ பிரைம் வீடியோவில் வெளியாகிறது!

விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமான ‘ஃபார்ஸி’ பிரைம் வீடியோவில் வெளியாகிறது!

News
பிரைம் வீடியோ ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ராஜ் & டிகேயின் ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் திரைப்படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடுகிறது! ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைகிறது . மேலும் இந்தத் தொடரில் கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர் , மற்றும் இது பிப்ரவரி 10 முதல் இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. வரம்புகள் இல்லாத வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள், டிவி ஒளிபரப்புக்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரைம...