Friday, October 23

Tag: vijaykanth

பிரேமலதா விஜயகாந்தை சந்தித்த ‘பயம் உன்னை விடாது’ படக் குழு!

பிரேமலதா விஜயகாந்தை சந்தித்த ‘பயம் உன்னை விடாது’ படக் குழு!

Uncategorized
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதத்துடன் “பயம் உன்னை விடாது” திரைப்படக் குழு – திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து மரியாதை! சென்னை : கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதமும் வழிகாட்டுதலும் துணையாக, உருவாகி வரும் *“பயம் உன்னை விடாது”* திரைப்படக் குழுவினர் சமீபத்தில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினர். இந்த சந்திப்பின் போது, திரைப்பட இயக்குநர் கி.மு.இளஞ்செழியன், நடிகர் கதிரவன் மற்றும் மக்கள் தொடர்பாளர் ஆண்டனி ஆகியோர் இணைந்து, திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்வின் போது, “பயம் உன்னை விடாது” திரைப்படத்தின் கதை, அதன் சமூகக் கருத்து மற்றும் தயாரிப்பு சார்ந்த அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது. திரைப்படக் குழுவின் முயற்சிகளை மனதார பாராட்டிய திருமதி பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் அவர...
நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்த்திற்கு நினைவஞ்சலி!

நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்த்திற்கு நினைவஞ்சலி!

News
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மாமனிதன் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்திற்கு நடைபெற்ற நினைவஞ்சலி! புரட்சி கலைஞர், கேப்டன் என திரையுலகினராலும், ரசிகர்களாலும், பொதுமக்களும் அன்புடன் அழைக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவில் முப்பது வருடங்களாக வெற்றிப்பயணம் நடத்திய அவர் மக்களுக்கு சேவை செய்ய அரசியலிலும் நுழைந்து அதிலும் நன்மதிப்பை பெற்றார். ஆனால் கடந்த பல வருட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட கேப்டன் விஜயகாந்த் கடந்த டிச-28 ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். திரையுலகில் பல நல்ல மாற்றங்களுக்கு வித்திட்ட அவர் தான் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டார். அந்த மாபெரும் மனிதரின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் காமாராஜர் அரங்கில் அவருக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற...
ஓய்வெடுங்கள் ‘கேப்டன்’

ஓய்வெடுங்கள் ‘கேப்டன்’

News
'கேப்டன்’ விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகத்திற்கு மிகப்பெரும் இழப்பு. ஒரு நடிகராக தனக்கென்று தனி முத்திரை பதித்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த மனிதநேயம் கொண்டவராக, தனது உறவுகளான திரைத் துறையினருக்கு சிறப்பான வகையில் உதவி புரிந்தவராக, நல்ல அரசியல்வாதியாக, குடும்ப தலைவனாக, அனைவருக்கும் சிறந்த நண்பராக என எல்லாவகையிலும் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். இது ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு. அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்! ஓய்வெடுங்கள் ‘கேப்டன்’ - Producer SR Prabhu....