Sunday, September 20

Tag: Vishnu Manchu

திரைப் பிரபலங்கள் பாராட்டும் ‘கண்ணப்பா’ திரைப்படம்!

திரைப் பிரபலங்கள் பாராட்டும் ‘கண்ணப்பா’ திரைப்படம்!

News
'கண்ணப்பா’ திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம்! - பிரபலங்கள் பாராட்டு! விஷ்ணு மஞ்சு நடிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் டாக்டர்.எம்.மோகன் பாபுவின் பிரமாண்ட தயாரிப்பில், மோகன்லால், அக்‌ஷய்குமார், சரத்குமார், பிரபாஸ், காஜல் அகர்வால் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சென்னையில் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில், இயக்குநர்கள் பி.வாசு, பொன்ராம், நடிகர் இயக்குநர் பிரபுதேவா, நடிகை ராதிகா, அரசியல் தலைவர் மற்றும் கல்வியாளர் ஏ.சி.சண்முகம், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் தியாகராஜன், இயக்குநர் நடிகர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படம் பார்த்தார்கள். படம் பார்த்த பிரபலங்கள் அ...
‘கண்ணப்பா’ திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

‘கண்ணப்பா’ திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

News
கண்ணப்பா’ திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்! ரஜினிகாந்தின் பாராட்டால் உற்சாகமடைந்த ‘கண்ணப்பா’ படக்குழு! தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்.எம்.மோகன் பாபு சென்னையில் சந்தித்துக் கொண்டனர். 1995 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி வெளியான ‘பெத்தராயுடு’ திரைப்படம் சக்திவாய்ந்த கதை சொல்லல், மறக்க முடியாத நடிப்பு மற்றும் இந்தியாவின் மிக முக்கியமான இரண்டு நட்சத்திரங்களின் திரை இருப்பு ஆகியவற்றால் தெலுங்கு திரையுலக வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது. ‘பெத்தராயுடு’ படத்தின் 30 வது வருடத்தின் நிறைவை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்.எம்.மோகன் பாபு சென்னையில், சந்தித்துக் கொண்டு தங்களது திரை பயணத்தை கொண்டாடினர். மே...
கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரேத்யக காட்சிகள் திரையிடல்! – விஷ்ணு மஞ்சுவை பாராட்டிய பத்திரிகையாளர்கள்!

கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரேத்யக காட்சிகள் திரையிடல்! – விஷ்ணு மஞ்சுவை பாராட்டிய பத்திரிகையாளர்கள்!

News
’கண்ணப்பா’ இந்திய சினிமாவில்மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் - நடிகர் விஷ்ணு மஞ்சு உறுதி! சரத்குமார், மதுபாலா போன்ற பெரிய நட்சத்திரங்களுக்கு இணையாக என்னை நடத்தினார்கள் - ‘கண்ணப்பா’ விழாவில் நடிகர் சம்பத்ராம் உருக்கம் எதையும் கேட்காமல் ‘கண்ணப்பா’ படத்தில் நடித்தது சரி என்று படம் உணர்த்தியது - நடிகை மதுபாலா மகிழ்ச்சி பேச்சு ‘கண்ணப்பா’ படத்தின் காட்சிகள் அடங்கிய ஹார்ட்டிரைவ் திருடப்பட்ட விவகாரம் - ‘கண்ணப்பா’ விழாவில் விஷ்ணு மஞ்சு விளக்கம் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரேத்யக காட்சிகள் திரையிடல்! - விஷ்ணு மஞ்சுவை பாராட்டிய பத்திரிகையாளர்கள் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’ இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார், சரத்...
கண்ணப்பா’ படத்தின் பாடல் வெளியானது!

கண்ணப்பா’ படத்தின் பாடல் வெளியானது!

News
விஷ்ணு மஞ்சு - ப்ரீத்தி முகுந்தனின் மாயாஜால காதல் கதையை விவரிக்கும் ’கண்ணப்பா’ படத்தின் பாடல் வெளியானது! ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது நாயகன் விஷ்ணு மஞ்சு - நாயகி ப்ரீத்தி முகுந்தனின் ஆத்மார்த்தமான காதல் கதையை விவரிக்கும் காதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த இனிமையான காதல் பாடல் மெல்லிசை ஷான் மற்றும் சாஹிதி சாகந்தி ஆகியோரல் பாடப்ப்ட்டுள்ளது. ஸ்டீபன் தேவஸ்ஸி இசையில், கிரீஷ் நகோடின் இதயப்பூர்வமான வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களின் மனங்களை மயக்கி வருகிறது. மனதை மயக்கும் இனிமையான குரல், மனதைத் தொடும் பாடல் வரிகள் மற்றும் கனவு உலகத்தை நேரில் பார்ப்பது போன்ற காட்சிகள் ஆகியவை ஒன்றிணைந்தது போன்ற உணர்வை இப்பாடல் ரசிகர்களிடம் உருவாக்கியுள்ளது. விஷ்ணு மஞ்சு மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் திரை இருப்பு மற்று...
‘நிறம் மாறும் உலகில் ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘நிறம் மாறும் உலகில் ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
பாரதிராஜா - நட்டி- ரியோ ராஜ் - சாண்டி- கூட்டணியில் உருவாகும் 'நிறம் மாறும் உலகில் ' படத்தின் படப்பிடிப்பு நிறைவு! இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகி வரும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தில் பாரதிராஜா, நட்டி என்கிற நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர் , விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், 'ஆடுகளம்' நரேன், மைம் கோபி , வடிவுக்கரசி , விக்னேஷ் காந்த், ரிஷிகாந்த்...
தற்போதைய தலைமுறையினர் அறிந்துக் கொள்ள வேண்டிய வரலாறு ‘கண்ணப்பா’!

தற்போதைய தலைமுறையினர் அறிந்துக் கொள்ள வேண்டிய வரலாறு ‘கண்ணப்பா’!

News
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’. இதில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்‌ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பரச்சூரி கோபால கிருஷ்ணா, ஈஸ்வர் ரெட்டி, ஜி.நாகேஸ்வர ரெட்டி, தோட்டா பிரசாத் ஆகியோர் கதை எழுத, விஷ்ணு மஞ்சு திரைக்கதை எழுதியிருக்கிறார். முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிரு...
ஆதரவற்ற கலைஞர்களின் நலனுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கிய நடிகர் விஷ்ணு மஞ்சு!

ஆதரவற்ற கலைஞர்களின் நலனுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கிய நடிகர் விஷ்ணு மஞ்சு!

News
MAA தலைவர் நடிகர் விஷ்ணு மஞ்சு தனது மகள் அய்ரா வித்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற கலைஞர்களின் நலனுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷ்ணு மஞ்சு, தெலுங்கு திரையுலக நடிகர்கள் சங்கமான ‘மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன்ஸ்’ (Movie Artists Association - MAA)-ன் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், ஆக்ஸ்ட் 9 ஆம் தேதி விஷ்ணு மஞ்சுவின் மகள் அய்ரா வித்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு, MAA சங்கத்தில் உள்ள ஆதரவற்ற கலைஞர்களின் நலனுக்காக ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருடைய இந்த குறிப்பிடத்தக்க பங்களிப்பு, நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் கலைஞர்களுக்கு உதவுவதற்கும், அவர்களுக்கு தேவையான ஆதரவையும், கவனிப்பையும் உறுதி செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், விஷ்ணுவின் தொலைநோக்கு தலைமைய...
“’கண்ணப்பா’ படத்தில் நடித்தது ஒரு பெரிய யாகத்தில் பங்கேற்றதுபோல் இருந்தது” _ நடிகை மதுபாலா

“’கண்ணப்பா’ படத்தில் நடித்தது ஒரு பெரிய யாகத்தில் பங்கேற்றதுபோல் இருந்தது” _ நடிகை மதுபாலா

News
”‘கண்ணப்பா’ காவியம் உருவாவதற்கு காரணம் சிவபெருமான் தான்” - டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர்.மோகன் பாபு நெகிழ்ச்சி விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான 'கண்ணப்பா' படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான டாக்டர்.மோகன் பாபு தயாரிக்க, முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகனான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடிக்க, மோகன் லால், பிரபாஷ், அக்‌ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (ஜூன் 14) பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் டாக்டர்.மோகன் பாபு பேசுகையில், “’கண்ணப்பா’ எந்த தலைமுறையினருக்கும் புதியவர். மகா கவி துர்ஜதி இதை எப்படி பக்தி சிரத்தையுடன் ...
கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற ‘கண்ணப்பா’ படக்குழு!

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற ‘கண்ணப்பா’ படக்குழு!

News
  கேன்ஸ் ரெட் கார்பெட்டில் ஜொலித்த நடிகர் விஷ்ணு மஞ்சு! - 77 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற ‘கண்ணப்பா’ படக்குழு! உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட ‘கண்ணப்பா’ படக்குழு! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’ஹாரிசன் : அன் அமெரிக்கன் சாகா’ (Horizon: An American Saga) திரைப்படத்தின் பிரீமியர் காட்சி கேன்ஸ் திரைப்பட விழாவில் நேற்று நடைபெற்றது. இதில், இந்திய திரையுலகின் மதிப்பிற்குரிய நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை அலங்கரித்தனர். டாக்டர் எம்.மோகன் பாபு, இந்திய சினிமாவின் மிகப்பெரிய காவியத் திரைப்படமாக உருவாகும் ‘கண்ணப்பா’-வின் நாயகன் விஷ்ணு மஞ்சு மற்றும் அவரது மனைவி விரானிகா மற்றும் ‘கண்ணப்பா’ படத்தின் நடன இயக்குநர் பிரபு தேவா ஆகியோரின் வருகை, பிரமாண்ட நிகழ்ச்சிக்கு கூடுதல் வலு சேர்க்கும் விதத்தில் அமைந்தது. அட்லியர் விரானிகா வடிவமைத்த தனிச்சிறப்ப...
மஹாசிவராத்திரியில் வெளியாகும் ‘கண்ணப்பா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மஹாசிவராத்திரியில் வெளியாகும் ‘கண்ணப்பா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

News
மஹாசிவராத்திரியில் வெளியாகும் 'கண்ணப்பா' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஷ்ணு மஞ்சுவின் மாபெரும் இந்திய காவியமாக உருவாகும் 'கண்ணப்பா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் பிரமாண்ட இந்திய காவிய திரைப்படமாக உருவாகி வரும் 'கண்ணப்பா' திரைப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் இந்திய சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளாகியுள்ளது. மஹாசிவராத்திரியான புனித நாளான இன்று 'கண்ணப்பா'- வின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவது, படத்திற்கு சிவபெருமானின் அருள் கிடைத்ததற்கு சமமாகும். சிவபெருமானின் தீவிர பக்தர் மற்றும் மாபெரும் போர் வீரனனின் வீரமிக்க வாழ்க்கை படைப்பான கண்ணப்பாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் வெளியீடும் மிகப்பெரிய அடையாளமாக மாறியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பக்த...