வித் லவ் _ விமர்சனம்
வித் லவ் _ விமர்சனம்
விண்ணிலிருந்து மண்ணுக்கு வரும் முதல் மழைத்துளிபோல், பள்ளியில் படிக்கும்போது பதின் பருவத்தில் ஏற்படும் முதல் காதலை கவிதைபோல் திரையில் வடித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மதன்.
'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த் கலகலப்பான நாயகனாக நம்மை கவர்ந்திழுத்து நெஞ்சில் நிறைகிறார்.
ஆர்ப்பாட்டம் இல்லாத எளிமையான அழகு தோற்றம் கொண்ட நாயகி அனஸ்வரா ராஜன் தனித்துவம் மிக்க வித்தியாசமான வேடத்தில் வந்து, தம் அசத்தலான நடிப்பால் நம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார்.
'வித் லவ்' படத்தின் கதை கரு என்னவென்று பார்ப்போமா?
திருமணத்தில் ஈடுபாடு காட்டாத அபிஷன் ஜீவிந்த், தன் அக்காவின் வற்புறுத்தலுக்காகவே அனஸ்வரா ராஜனை சந்திக்க செல்கிறார்.
இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது யதேச்சையாக தெரிய வர பழைய விஷயங்களை பேச ஆரம்பிக்கின்றனர்.
பள்ளியில் படிக்கும் போது தனக...
