![]()
தந்த்ரா _ விமர்சனம்
நட்சத்திரங்கள்:
அன்பு மயில்சாமி,
லொள்ளு சபா சுவாமிநாதன்,
சீதா தர்ஷன்,
சசிகுமார் சுப்பிரமணியம்,
மீனா, ஜாக்,
பிருந்தா கிருஷ்ணன்
மற்றும் நரேஷ்
தயாரிப்பு மற்றும் இயக்கம்:
வேதமணி
இணை தயாரிப்பு:
சுஷ்மா வேதமணி
ஒளிப்பதிவு:
ஹேய்ஃபிஸ் எம். இஸ்மாயில்
இசை:
கணேஷ் சந்திரசேகர்
கலை இயக்கம்:
மணிமோகன் ராஜதுரை
மக்கள் தொடர்பு:
மணிகண்டன்
காதல், திகில், சென்டிமென்ட் மூன்றும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட சுவையான திரைப்படமாக உருவாகி இருக்கிறது ‘தந்த்ரா’.
நிலழ்கள் ரவி பொறுப்பில்லாமல் சுற்றித் திரியும் தனது மகன் அன்பு மயில்சாமியை மனைவியின் சகோதரர்களான லொள்ளு சபா சுவாமிநாதன் மற்றும் ஜாவா சுந்தரேசன் இருக்கும் ஊருக்கு அனுப்பி வைக்கிறார்.
அங்கேயும் மாமனுடன் சேர்ந்து மது அருந்தும் அன்பு மயில்சாமி ஒரு பெண்ணை காதலிக்கிறார்.
ஒரு கட்டத்தில் தன் காதலியை சூழ்ந்து இருக்கும் ஆபத்தை உணர்ந்ததும் அதிர்ச்சி அடைகிறார் அன்பு.
இது ஒரு புறம் இருக்க பழைய கதை ஒன்று பிளாஷ்பேக்கில் ஆரம்பமாகிறது.
பிளாஷ் பேக் காட்சிகளில் வரும் கதை படத்துக்கு சுவாரசியத்தை அதிகப்படுத்தி படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது.
காரணம் பிளாஷ்பேக் கதை ஒரு புதையல் ரகசியத்தை தன்னில் புதைத்து வைத்திருக்கிறது.
இந்தப் புதையலை அடைய வேண்டும் என்பதற்காக ஒரு பெண் மந்திரவாதி திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார்.
இவரால் புதையலை எடுக்க முடிந்ததா?
அன்பு மயில்சாமியின் காதல் திருமணத்தில் முடிந்ததா என்பதை எல்லாம் சுவாரஸ்யமான காட்சிகள் மூலம் படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வேதமணி.
திகில் படங்களுக்கு பின்னணி இசை என்பது மிகவும் முக்கியமான அம்சம். அந்த வகையில் இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர் தன் பணியை வெகு சிறப்பாக செய்து பார்வையாளர்களை நன்றாகவே பயமுறுத்தி இருக்கிறார்.
சிஜி காட்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பல காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது.
பூமியில் புதைக்கப்பட்டிருக்கும் புதையல் வெளியே வருவதும் பின்னர் அது மீண்டும் பூமிக்குள் புதைவதும் சிறப்பான தொழில்நுட்பத்தில் நன்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது
என்றாலும் மேலும் பல சிஜி காட்சிகளை இன்னும் மெனக்கட்டு உருவாக்கி இருந்தால் படத்தின் பலம் கூடியிருக்கும்.
சஸ்பென்ஸ் திகில் பட ரசிகர்களை வெகுவாக கவரும் படம் ‘தந்த்ரா’.


