Wednesday, October 7

டீன்ஸ் _ விமர்சனம்

Loading

டீன்ஸ் _ விமர்சனம்

வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற புதுமைப்பித்தன் பார்த்திபன், இந்த முறை சயின்ஸ் பிக்சன் பக்கம் வந்து இருக்கிறார்.

ஓர்அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் – ஒரே பள்ளியில் படிக்கும் 12 சிறுவர்கள், நண்பர்கள். இந்த டீன் ஏஜ் விடலைகளுக்கு, தங்களை பெற்றோர் பெரிய மனிதராக மதிப்பதில்லை என்று ஆதங்கம்.

ஏதாவது சாகசம் செய்ய வேண்டும் என திட்டமிடுகிறார்கள். சிறுமி ஒருத்தி, தனது பாட்டியின் கிராமத்தில் பேய் இருப்பதாக சொல்ல… பேயை சந்திக்க கிளம்புகின்றனர்.

அப்போது அசம்பாவித அமானுஸ்ய சம்பவர்கள் நடக்கின்றன.. சிறுவர்கள் ஒவ்வொருவராக தொலைந்து போகிறார்கள்… அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

13 சிறுவர்களும் (ஓவராக பேசினாலும்) சிறப்பாக நடித்து உள்ளனர். வழக்கமாக, பார்த்திபன் அட்ராசிட்டிகளை எதிர்பார்த்து செல்லும் ரசிகர்களுக்குத்தான் பெரிய ஏமாற்றம். ரொம்பவே அடக்கிவாசித்து இருக்கிறார்.
யோகிபாபு இரண்டு காட்சிகள் மட்டும் வருகிறார்.. போகிறார். அவ்வளவுதான்.
டி.இமான் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவாளர்தான் பாவம். பொட்டல் காடு என்பதைத் தவிர வேறு லொகேசன் இல்லாததால், விதவிதமாக கேமரா கோணங்கள் வைத்து காட்சிகளை ரசிக்க வைக்கிறார்.
ரோவர், ஏலியன் என்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வைத்து படம் காட்டுகிறார்கள். நேர்த்தியாக இல்லை.

மலைப்பாம்பு வயிற்றை சிறுவர்கள் கிழிப்பது, ஆயிரக்கணக்கான ஆடு,மாடுகள் வட்டமாக சுற்றி வருவது போன்ற காட்சிகள் கவனத்தை ஈர்க்கின்றன.

மொத்தத்தில் இந்த டீன்ஸ் படத்துக்கு  இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது .