https://x.com/rparthiepan/status/1812409168894325217
Friends
சத்தியமா சொல்றேன்
TEENZ -க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா
நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான் ‘ஓ’ன்னு சந்தோஷத்தில அழுவுறது உங்களுக்கு கேக்க வாய்ப்பே இல்லே. இது போதாது இன்னும் ஆதரவு தந்து பலரும் பாக்க உதவி செஞ்சி என்னை சந்தோஷத்தில சாகடிங்க. அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு science fiction & fantasy thought ல் எடுக்கப் பட்ட இப்படம் பள்ளிகளும் கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும்.
நன்றி :பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு
வரம் : வரவிருக்கும் தூய்யையான வெற்றி.
நனைந்த இமைகளோடு
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்