Saturday, June 14

எதிர்பார்ப்புகளை எகிற வைத்த ‘தக் லைஃப்’ ட்ரெய்லர்’!

Loading

ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லர் என்பது அந்த படம் வெளிவரும் போது அதை தவறாமல் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியது.

ஆனால் இதையும் தாண்டி, 
மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் சிலம்பரசன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தக் லைஃப்’ டிரைலர்,  படம் குறித்தான எதிர்பார்ப்புகளை எகிற வைத்து, எப்போது படம் திரைக்கு வரும் என்று ஆவலுடன் காத்திருக்க வைத்துவிட்டது.

உலக நாயகன் விண்வெளி நாயகனாக பரிணாமம் பெற்று,  பேன் இந்தியா படங்களாக இருந்த நமது படங்களை பேன் வோர்ல்ட் படங்களாக ‘தக் லைஃப்’ மூலம் மாற்றுகிறார்.

“நீ என் உயிரை காப்பாத்துனவன்… எமன் கிட்ட இருந்து என்னை மீட்டெடுத்தவன்… என்ற கமலின் வசனத்துடன் தொடங்கும் ட்ரைலர்   “இது எமனுக்கும் எனக்கும் நடக்கும் கதை… ” என்ற கமலின் வசனத்துடன் முடிகிறது.

“இனிமேல் இங்கே நான்தான் ரங்கராய சக்திவேல்…” என்று சிலம்பரசன் அழுத்தம் திருத்தமாக உரக்கச் சொல்வது கமலுடன் ஏற்படும் முரண்பாட்டைச் சொல்லி படம் பார்க்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது.

இயக்குனர் மணிரத்தினம் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் காம்போ எப்போதுமே ஸ்பெஷல் என்பது தக்கலை படத்திற்கு அமைந்த ஒரு கூடுதல் சிறப்பு.

ஆக மொத்தத்தில் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி உலக திரையரங்குகளில எல்லாம் திருவிழா கொண்டாட்டம் தான்.