வித்தியாசமான கதைக்களன் மற்றும் காட்சியமைப்புகள் மூலம் ஜுவி படத்தில் கவனம் ஈர்த்த பாபு தமிழ், தற்போது ‘க்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். மூடர்கூடம் இயக்குநர் நவீன், தர்மராஜ் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இப்படத்தில் யோகேஷ் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் பெயரே ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருப்பதாலும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட உளவியல் த்ரில்லர் வகைப்படமாக இருப்பதாலும் க் படத்திற்கு இப்போதிருந்தே எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது.