Sunday, September 20

பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!

Loading

தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது. இந்நிகழ்வில் திரு பூச்சி முருகன், வீட்டு வசதி வாரிய தலைவர் மற்றும், நடிகர் புகழ், நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்..

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க துணை தலைவர் ராதா பாண்டியன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்..சங்க தலைவர் கவிதா..சங்கத்திற்கான அலுவலகம், மருத்துவ காப்பீடு போன்ற கோரிக்கைகளை பூச்சி முருகன் அவர்களிடம் வைத்தார்..நாற்காலி செய்தி கார்த்தி நன்றி உரை வழங்கினார்.. இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்க பட்டது..

இந்த மருத்துவ
முகாமை துவக்கி வைத்த வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் பேசும்போது… இங்கு வருகை தந்துள்ள நடிகர் புகழை, விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ் என்று சொன்னார…
நடிகை அபிராமி வெங்கடாச்சலம் பேசிய போது, எங்க அம்மா அவங்களுடைய ஹெல்த்தை உண்மையாக சரியாக கவனித்துக் கொள்ள மாட்டார்கள், ஒரு நாள் திடீரென்று அவர்களுக்கு ஆர்த்ரிடிஸ் பிரச்சனை ஏற்பட்டது, அன்று முதல் அவர் மிகவும் மனம் உடைந்து போனார், அதன் காரணமாக வீட்டில் இருக்கும் ஒருவருக்கு ஏதாவது ஒன்றென்றால் அந்த வீடு என்ன ஆகும் என்று எனக்கு நன்றாகவே தெரியும், இது போன்ற மருத்துவ முகாம் பத்திரிகையாளர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நான் உணர்கிறேன். இதில் கலந்துகொண்ட மருத்துவர்களுக்கும் நன்றி, பூச்சி முருகன் சார் பேசியதுபோல் ஹெல்த் நல்லா இருந்தா எல்லாமே நல்லா இருக்கும், பூச்சி முருகன் சார் மற்றும் எனது நண்பன் புகழ் ஆகியோருடன் இந்த மேடையை பகிர்ந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, எனது அடுத்தடுத்த படங்கள் மூலமாக உங்களையெல்லாம் மகிழ்விப்பேன் உங்களுடைய பேராதரவு என்றும் எனக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் உள்ளது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன், பங்குபெற அழைத்தமைக்கு நன்றி எனக் கூறினார்.
நடிகர் புகழ் பேசியதாவது பத்திரிகையாளர்கள் என்றாலே ஒரு பயம்தான் எனக்கு, யாராவது ஏதாவது கேள்வி கேட்டுட்டா எனக்கு படபடன்னு வந்துரும் சும்மா அதுவும் மைக்க கொடுத்தாலே மயக்கம் வந்துரும் அப்படி இருக்க கவிதா அக்கா, தங்கம் நம்ம பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக ஒரு மருத்துவ முகாம் நடத்தணும்னு கூப்பிட்டாங்க சரிக்கா வரேன் என்றேன், ஏன்னா ஒரு விஷயத்தை மக்களிடம் எப்படி சேர்க்க வேண்டும் என்பதில் பத்திரிக்கையாளர்கள் மிகவும் போராடுகிறார்கள், நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள், தற்பொழுது ரிலீசாகிய எனது அயோத்தி படத்தைக் கூட நல்ல முறையில் எழுதி இருந்தார்கள் ஆனால் யாருக்கும் என்னால் நன்றி கூற இயலவில்லை அதனால் இன்று எல்லோருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் என்னைப் போன்று வளர்ந்து வருபவர்களுக்கு துணை நிற்கிறீர்கள் அதற்கு மிகுந்த நன்றி, அடுத்து ஆகஸ்ட் 16, 1947 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் அதற்கும் உங்களுடைய சப்போர்ட் தேவை, அவர்களுக்கு என்றுமே ஒரு சகோதரனாய் இருப்பேன் மீண்டும் பத்திரிகையாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் எனக் கூறினார்…