சொல்லப்படாத ஆயிரம் கதைகள் மக்களிடம் இருக்கின்றன – இயக்குநர் அதியன் ஆதிரை!

0

 273 total views,  1 views today

மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் மற்றும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை இணைந்து “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படத்திற்கும், அதன் இயக்குநர் அதியன் ஆதிரைக்கும் பாராட்டு விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்வினை நடத்தினார்கள்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் அதியன் ஆதிரையிடம் பல சுவாரஸ்யமான மற்றும் ஆழ்ந்த கருத்தியல் தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

போர் குறித்தும், அதன் விளைவுகள் குறித்துமான அதியனின் புரிந்துணர்வு வந்திருந்தோரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மேலும், இந்திய சமூக அமைப்பின் சிக்கல்கள் குறித்தும் கேட்கப்பட்ட தெளிவான கேள்விகளுக்கு மிக எளிமையாக பதிலளித்தது அனைவரையும் கவர்ந்தது.

“சினிமாவில் கதைப்பஞ்சம் நிலவுவதாக கூறுகிறார்களே, இந்நேரத்தில் திரைக்கு வந்திருக்கும் நீங்கள் இதை எப்படி எதிர்கொள்வீர்கள்? நிஜமாகவே கதைப்பஞ்சம் என்பது இருக்கிறதா?” என்ற கேள்விக்கு,

“இங்கே ஒரு தரப்பினரின் கதை மட்டும் தான் இத்தனை ஆண்டுகாலம் பேசப்பட்டு வருகிறது. அதனால் அவர்களுக்கு வேண்டுமானால் கதைகள் தீர்ந்து போயிருக்கலாம். ஆனால் சொல்லப்படாமல் ஆயிரம் கதைகள் எளிய மக்களான எங்களிடம் இருக்கிறது. எங்களிடம் கதைகளுக்கு பஞ்சமில்லை” என்று நெத்தியடி அடித்தார்.

Share.

Comments are closed.