வெள்ளைப் பூக்கள் படக்குழு – ஓர் அறிமுகம்

0

 659 total views,  1 views today


விவேக் இளங்கோவன்: இயக்குனர்

உத்யோகரீதியாக மென்பொருள் பொறியாளராக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், விவேக் நாடகத்துறையில் அனுபவமிக்கவராக, ஒரு இயக்குனராக, ஒரு எழுத்தாளராக தன்னை பதிவு செய்வதில் பேரார்வம் கொண்டவர். இண்டஸ் குழுமத்தின் பல்வேறு நாடக மற்றும் திரைப்பட தயாரிப்புகளில் இயக்குனர் குழுவில் பங்குபெற்றிருக்கிறார். அவரது குறும்படங்களான ‘ஓடம்’ மற்றும் ‘நவம்’ சர்வதேவ அளவில் பல விருதுகளை வென்றிருப்பது அவரது ஆளுமைக்கு சான்றாக அமைகிறது.

ஜெரால்ட் பீட்டர்: ஒளிப்பதிவாளர்

உத்யோகரீதியாக மென்பொருள் பொறியாளராக / வணிக ஆய்வாளராக பணிபுரிந்தாலும், ஜெரால்ட் நாடகம் மற்றும் நாட்டியத்தில் அனுபவமும், ஈடுபாடுமிக்கவராக, ஒரு ஒளிப்பதிவாளராக, தன்னை அடையாளப்படுத்தி கொள்வதில் பேரார்வம் கொண்டவர். ‘ஓடம்’ மற்றும் ‘நவம்’ உள்ளிட்ட குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு குழுவை தலைமையேற்று நடத்தி, அவற்றை பல்வேறு சர்வதேச விருதுகளுக்கு தகுதி பெறச் செய்ததில் இவரது பங்கு அளப்பரியது.

இராம்கோபால் கிருஷ்ணராஜூ: இசை அமைப்பாளர்

மென் பொருள் பொறியாளராக அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், பாரம்பரிய இசையில் தேர்ச்சி பெற்ற ஓர் இசையமைப்பாளர். தமிழக அரசால் ‘கலை இளமணி’ விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டவர். பல்வேறு இண்டஸ் குழும நாடகங்களுக்கும், குறும்படங்களுக்கும் இசை அமைத்திருக்கும் இவர், ‘ஓடம்’ மற்றும் ‘நவம்’ குறும்படங்களுக்கும் இவருடைய இசை மிகப் பெரிய பலமாக அமைந்தது எனலாம்.

திகா சேகரன்: தயாரிப்பாளர்

ஒரு அனுபவமிக்க தொழிட்நுட்ப நிர்வாகியும் மற்றும் முன்னாள் மைக்ரோசாப்ட் / ஸ்கைப் இயக்குனர். இண்டஸ் குழுமத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இக்குழுமத்தின் பல்வேறு படைப்புகளுக்கு இவரது பங்கு அளப்பரியது. கலை, படைப்புத்திறன், மற்றும் ஒத்த கருத்துடைய மாந்தர்களோடு சேர்ந்து பணியாற்றுவது இவரது பேரார்வம்.

வருண் குமார்: தயாரிப்பாளர்

மென்பொருள் பொறியாளரான வருண் டென்ட் கோட்டாவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். திரைப்படத்தின் மீதான இவரது பேரார்வம் முறையாக, சட்டரீதியாக நல்ல உயர் தரமான திரைப்படங்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டுமென்பதே. அமெரிக்காவில் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் விநியோக உரிமை பெற்றவராகவும் இருக்கிறார்.

அஜய் சம்பத்: தயாரிப்பாளர்

அஜய் உத்யோகரீதியாக ஒரு தரவு விஞ்ஞானியாக இருந்த போதும், இண்டஸ் தயாரிப்பு குழுமத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகவே தன்னை நிலைநிறுத்தியுள்ளார். பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற ‘ஒடம்’ மற்றும் ‘நவம்’ குறும்படத்தின் பிரதான தயாரிப்பாளரும் இவரே. படைப்பாற்றலை நிஜமாக, நிதர்சனமாக மடைமாற்றுவது இவரது விசித்திரமான திறமைகளுள் ஒன்று.

விவேக்: நடிகர்

இந்திய திரைப்பட நடிகரான பத்மஸ்ரீ விவேக் 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். இவர் ஒரு சமூக ஆர்வலரும் கூட. சத்யபாமா பல்கலைகழகம் திரைத்துறையின் மூலம் சமுதாய பங்களிப்பிற்காக இவருக்கு ‘கௌரவ டாக்டர்’ பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

சார்லி: நடிகர்

சார்லி, ஏறத்தாழ 670க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்திருக்கும் ஒரு இந்திய நடிகர். நடிப்பு திறனுக்காகவும், பிறர் பாணியில் பிரதிபலிப்பு திறமைகளுக்காகவும் போற்றபடுகிறார்.

பூஜா தேவரியா: நடிகை

இயக்குனர் செல்வராகவனின் ‘மயக்கமென்ன’ திரைப்பட நாயகி. ‘ஸ்ட்ரே பாக்டரி’ நிறுவனத்துடன் இணைந்து விரிவாக பணியாற்றியிருக்கிறார். ‘இறைவி’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.

தேவ்: நடிகர்

‘வாயை மூடி பேசவும்’ மற்றும் ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படங்களில் இவரது நடிப்பு விமர்சனரீதியாக வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது. இவர் ‘மேட் பாய்ஸ் கிரியேடிவ்ஸ்’ என்ற விளம்பர, குறும்பட, மற்றும் பெரு நிறுவன காணொளி தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாண்மை பங்குதாரராகவும் இருக்கிறார்.

பெய்ஜ் ஹெண்டர்சன்: நடிகை

நடிகை, தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட ஹாலிவுட் நடிகையான இவர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தனது இருப்பிடமாக கொண்டிருக்கிறார். ‘ஸ்வெல்ட் டாக் ப்ரொடக்ஷன்ஸ்’ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையாக கொண்டு இயங்கும் நாடக நிறுவனமான ‘லிமினல் ஸ்பேஸ் பிளேயர்ஸ்’ நிறுவனத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.

பிரவீன் KLகே எல்: படத்தொகுப்பாளர்

‘ஆரண்ய காண்டம்’ என்ற தமிழ் திரைப்படத்திற்காக இந்திய அரசின் தேசிய விருதை பெற்றவர். நான்கு மொழிகளில் ஏறத்தாழ 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். மேலும் ‘சரோஜா’ திரைப்படத்திற்காக, கடந்த 2008 ஆண்டு தமிழக அரசின் ‘சிறந்த படத்தொகுப்பாளர்’ விருதையும் வென்றிருக்கிறார்.

குனால் ராஜன்: ஒலி பொறியாளர்

இவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றும் சிறந்த ஒலி பொறியாளர்களில் ஒருவர். விஸ்வரூபம், தூங்காவனம், பேட்ட, உத்தமவில்லன், மெர்க்குரி உள்ளிட்ட முன்னணி திரைப்படங்களில் பணியாற்றியவர். மேலும், ‘ரேஸ் டு விட்ச் மவுண்டைன்’ மற்றும் ‘பேன்டாஸ்டிக் 4’ உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களிலும் பணியாற்றிய அனுபவமிக்கவர்.

பாலாஜி கோபால்: கலரிஸ்ட்

பாலாஜி, விருதுகள் பல வென்ற ஒரு சிறந்த இந்திய கலரிஸ்ட் மற்றும் டிஜிட்டல் திரைப்பட வடிவமைப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 60க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர். லிங்கா, மெட்ராஸ், வேலைக்காரன், லென்ஸ், ஆண்டவன் கட்டளை, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் இவரது பணி சிறப்பித்து போற்றப்படுகிறது.

மதன் கார்க்கி: பாடலாசிரியர்

மதன் கார்க்கி வைரமுத்து ஒரு இந்திய பாடலாசிரியர், திரை எழுத்தாளர், ஆராய்ச்சி இணைப்பாளர், மென்பொருள் பொறியாளர், மற்றும் தொழிலதிபர். மாபெரும் வெற்றி படங்களான எந்திரன்,2.0, பாகுபலி தொடர், துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படங்களில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

Crew Details:
Producer – Dhigha Sekaran, Varun, Ajay Sampath
Director – Vivek Elangovan
Director of Photography – Jerald Peter
Music – Ramgopal Krishnaraju
Editor – Praveen KL
Lyrics – Madhan Karky
Sound Design – Kunal Rajan
Colorist – Balaji Gopal
Public Relations – Nikil Murukan

 

Share.

Comments are closed.