31 total views, 1 views today


KJS மீடியா புரோடக்சன்ஸ் சார்பில் கலசா j. செல்வம் தயாரித்து இயக்கும் கொத்தங்காடு பங்களா என்ற திரைப்படத்தின் படத்தலைப்பு போஸ்டரை இசையமைப்பாளரும் நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி வெளியிட்டார்.
அப்போது இந்தப் படத்தின் கதை மற்றும் ஷூட்டிங் நடைபெறும் இடத்தை பற்றி விரிவாக கேட்டார்
தனக்கு சிறு வயதில் இருந்தே பேய்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் என்றும் அதற்காக, தான் நிறைய முறை முயற்சித்ததாகவும் கூறினார்
விஜய் ஆண்டனி அப்படி ஏதாவது பேயுடன் பழக வாய்ப்பு கிடைத்தால் தான் கண்டிப்பாக பழகுவேன் என்று நாயகன் விது பாலாஜியிடம் கூறினார்
அதற்கு இயக்குனர் j செல்வமும் கலசா பாபுவும் நாங்கள் சூட்டிங் செய்யும் இடத்தில் உண்மையில் பேய் இருப்பதாக கூற,நான் சிறு வயதிலேயே
ஓஜா(Ouija board) போர்டு மூலமாக பலமுறை ஆவியுடன் பேச முயற்சித்திருக்கிறேன் இதுவரை பலனளிக்கவில்லை …
எனவே நான் உங்கள் கண்டிப்பாக சூட்டிங் ஸ்பாட்டுக்கு கண்டிப்பாக வருவேன் என படக்குழுவினர்களுக்கு உறுதியளித்தார்..