விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி, கள்ளக்குறிச்சி விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள்

0

 463 total views,  1 views today

புதுச்சேரி விஜய் மக்கள் இயக்கத்தின்  நலத்திட்ட உதவிகள் !!    

தளபதி விஜயின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக திருபுவனை தொகுதியில் கிளை மன்ற தலைவர்கள் திரு.புஷ்பராஜ், ஆனந்தராஜ், மணிகண்டன், ஸ்ரீதர் மற்றும் திருமதி. சிவரஞ்சனி ஆகியோர் ஏற்பாட்டில் இன்று 5 புதிய கிளை மன்றங்களை அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு. புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் திறந்து வைத்து நலதிட்ட உதவிகளான புடவை 345 நபருக்கு, ஸ்கூல் பேக் 145 நபருக்கு, மதிய உணவு 545 நபருக்கு, மரசெடிகள் 245 நபருக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில செயலாளர் திரு. G.சரவணன், திருபுவனை தொகுதி தலைவர் திரு. கிருஷ்ணா, இளைஞரணி தலைவர் திரு. ராஜா, மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கதிர், கலைச்செல்வன், சுதாகர், காந்திஜி, வெற்றிவேல், பிரபுதேவா, சக்திவேல், திலீப்குமார்,
திருமதி. சங்கீதா, கௌதமி மற்றும் தளபதியின் ரசிகர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

 

 

கள்ளக்குறிச்சி விஜய் மக்கள் இயக்கம்

தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .

இந்த  நலத்திட்ட விழா கள்ளக்குறிச்சி தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவர்  பிரகாஷ்  அவர்களால் நடத்தப்பட்டது . மேலும்  தளபதி விஜய் மக்கள் இயக்க  மாநில  பொறுப்பாளர்   திரு. புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் திறந்து வைத்து நலதிட்ட உதவிகளான

தையல் இயந்திரம்  3 பேருக்கு ,ஹெல்மட்   200 பேருக்கு ,அரிசி 5 கிலோ – 700  பேருக்கு ,புடவை  500 பேருக்கு,
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு  காக்கி துணி -150  பேருக்கு ,தொழிலார்களுக்கு  பச்சை நிற  துணி  100 பேருக்கு
பூச்சிதெளிப்பான்  இயந்திரம்  15 பேருக்கு,  சில்வர் குடங்கள் 300 பேருக்கு  1300 பொதுமக்களுக்கு   அன்னதானம்
 ஆகியவை வழங்கப்பட்டது . இந்த  நிகழ்ச்சிக்கு விழுப்புரம் விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் பரணிபாலாஜி கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார் .  

Share.

Comments are closed.