![]()
தோழனாக என் தோளில் கை வைத்து நிற்பவர் ரோஜா பூ ரவிக்கைக்காரி திரைப்பட கதாசிரியர், கல்தூண் கிருஷ்ணா என்ற பெயரில் திரையுலகுக்கு அறிமுகமாகி , பின்னர் திறமை என்ற படத்தின் மூலம் இயக்குனராக முத்திரை பதித்தவர் பின்னர் பல படங்களில் விஜய் கிருஷ்ணராஜ் என்ற பெயரில் நடிகராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் தற்போது,ஆனந்தம் உள்ளிட்ட பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்துவரும் விஜய் கிருஷ்ணராஜ் அவர்கள
சென்னை பாரிமுனை பச்சையப்பன் உயர்நிலை பள்ளியில் நான் படிக்கும் போது எனக்கு உயிரியல்(Biology) பாட ஆசிரியர்.
9 , 10, 11 ஆம் வகுப்புகளில் நான் படித்த நேரத்தை விட இவரது நாடக வசனங்களை பிரதி எடுத்து தரும் copywriter பணிகளை செய்துதான் அதிகம். சில வருடங்களுக்கு அவரோடு தொடர்பு இல்லை. 2016ல்என்னுடைய தந்தையாரின் 90 வது ஆண்டு விழாவிற்கு எனது கிராமத்திற்கு வந்து வாழ்த்திச் சென்றார். அது முதல் மீண்டும் அவரோடு தொடர்பு இருந்து வருகிறது. இன்று அவரை ,அவர் எழுதும் புத்தகம் தொடர்பாக அவரோடு பேசினேன்.
__மூத்த பத்திரிகையாளர் விடாரண்யம்

