கதிருக்காக களம் இறங்கிய விக்ரம் வேதா படக்குழு!

0

Loading


விஜய்சேதுபதி மாதவன் நடிப்பில் வெற்றிபெற்ற ‘விக்ரம்வேதா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் தம்பியாக நடித்திருந்தவர் நடிகர் கதிர். பலரின் பாராட்டுக்களை பெற்றிருப்பார். விக்ரம் வேதா வெற்றிக்கு பிறகு கதிர்
‘பரியேறும்பெருமாள்’ படத்தில் நடித்திருந்தார் அதிலும் சிறந்த நடிகர் என பலராலும் பாராட்டப்பட்டவர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் அறிமுக இயக்குனர் குமரன் இயக்கிய ‘ஜடா’ படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது.
யோகிபாபுவும், கதிரும் இந்த படத்தில் கால்பந்தாட்ட வீரர்களாக நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் டீசரை விக்ரம்வேதா திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் மாதவன், விஜய்சேதுபதி, ஷரத்தா, வரலட்சுமி, இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி, தயாரிப்பாளர் சசி உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிடுகிறார்கள்.

சென்னை கால்பந்தாட்ட இளைஞனாக கதிர் , யோகிபாபு, மற்றும் ஆடுகளம் கிஷோர், லிஜீஸ் நடித்திருக்கிறார்கள், முக்கியமாக கதாபாத்திரத்தில் ஓவியர் ஸ்ரீதர் நடித்திருக்கிறார்.

ஆக்‌ஷன், மற்றும் திரில் கலந்த கால்பந்தாட்ட விளையாட்டின் இன்னொரு பக்கத்தை சுவாரசியமான திரைக்கதையோடு
விரைவில் டிரைலர், மற்றும் பாடல்வெளியீட்டோடு படம் வெளியாகிறது.

Share.

Comments are closed.