Tuesday, December 10

விஷால் எம்.ஜி.ஆராக முடியுமா?

Loading

“வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.C மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த “ஆக்‌ஷன்” திரைப்படம். 

இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.C கூறியது…

விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம். 
விஷால்-  நான் இருவரும் “ஆக்‌ஷன்”படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளோம். நான் M.G.R ரின் தீவிர ரசிகர்  “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன்.தற்போது நடிகர் விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது.  எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும் , ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னையில் ஆக்‌ஷன் படமாக்கப்பட்டது.அதேபோல் இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே “ஆக்‌ஷன்” காட்சிகள் அதிகமான திரைப்படம் இது தான். இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன. 

தொடர்ச்சியாக பேய் படங்கள், காமெடி படங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும் படியான படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள். ஆனால் எனக்கு ஆக்சன் படம் செய்யதான் ஆசை.

 நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பதில் தீவிரமாக இருப்பேன்.  ஒரு படத்தை இயக்கி ரிலீஸ் ஆவதற்குள் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிடுவது எனது வழக்கம்.  எனக்கு , அனைத்து ஜானரிலும் படம் இயக்க ஆசை. “முறைமாமன்” படத்தின் இயக்குனாராக அறிமுகமானபோது அது ஒரு ரிமேக் படம் ஆனால்  அப்டத்தை வேறுவிதமாக கூறியிருந்தேன். “உள்ளத்தை அள்ளித்தா”, “மேட்டுக்குடி” என்று காதல் கலந்த காமெடி படத்தை இயக்கியதால் என்னை காமெடிபடம் செய்யும் இயக்குநராக்கிவிட்டார்கள். ஆனால் நான் எல்லா பாணியிலும் படம் செய்துள்ளேன்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “அருணாச்சலம்” என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கினேன். அப்படம் முழுக்கமுழுக்க காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இருந்தது. 

இப்படம் முழுக்க முழுக்க சண்டை காட்சி நிரம்பிய திரைப்படம் என்பதால் விஷால் நடித்து வரும் இப்படத்திற்கு “ஆக்‌ஷன்” என்றே  பெயர் வைத்துவிட்டோம். ஒரு படத்திற்கு வெகு முக்கியமானது டைட்டில் தான். படத்தின் மையத்தை அதில் சொல்லிவிட்டால் எதிர்பார்த்து வரும் ரசிகன் ஏமாற மாட்டான். அதுமட்டுமல்லாமல், தற்போது தமிழ் படங்களை இந்தி ரசிகர்களும் தெலுங்கு ரசிகர்களும் ஆதரித்து வருவதனால் இந்த தலைப்பு அணைத்து மொழிகளிலும் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று திட்டமிட்டு  வைத்துள்ளோம். 

இந்தக் கதைக்கு நல்ல உடல்வாகுடன் டூப் போடாம சண்டைக் காட்சிகளில் நடிக்க ஒரு கதாநாயகன் தேவைப்பட்டதால் நடிகர் விஷால் சரியாக இருப்பார் என்று படக்குழுவினருக்குத் தோன்றியது. மேலும் இப்படத்தில் சுபாஷ் என்கின்ற கதாப்பாத்திரத்தில் மிலிட்டரி ஆபீஸராக விஷால் நடிச்சிருக்கார். இவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மற்றும் அகான்ஸா பூரி என்பவர்  பக்கா ரெளடித்தனம் செய்யும் கதாப்பாதிரத்தில் நடித்துள்ளார். இவர்களைத் தவிர, அரசியல்வாதியாக பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனா டூயல் ரோல், ராம்கி, யோகி பாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரும் முயற்சிகளில் இருக்கிறது ஆக்‌ஷன் திரைப்படம். 

இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது .கதை , இயக்கம்: சுந்தர்.சி . 
திரைக்கதை: சுபா, வெங்கட் ராகவன் & சுந்தர்.சி. 
இசை: ஹிப் ஹாப் தமிழா. 
ஒளிப்பதிவு: டியூட்லீ DUDLEE 
எடிட்டிங்: ஸ்ரீகாந்த். 
வசனம்: பத்ரி. 
கலை: துரைராஜ். 
ஸ்டண்ட்: அன்பறிவ். 
நடனம் ; பிருந்தா, தினேஷ். 
பாடல்கள்: பா. விஜய் , ஹிப் ஹாப் தமிழா. 
தயாரிப்பு மேற்பார்வை: P. பால கோபி ஆகியோர் பணிபுரிந்துள்ளார்கள்.தயாரிப்பு: ட்ரைடென்ட் ரவீந்திரன்.