Sunday, November 29

Author: admin

செம்பியன் மாதேவி _ விமர்சனம்

செம்பியன் மாதேவி _ விமர்சனம்

Reviews
செம்பியன் மாதேவி _ விமர்சனம் கிராமத்து இளைஞனும், பெண்ணும் காதலிக்க.. சாதி காரணமாக ஏற்படும் பிரச்சினைகளை சொல்கிறது செம்பியன் மாதேவி திரைப்படம். செம்பியன் என்கிற சிறிய கிராமத்தைக் கதைக்களமாகக் கொண்டு விரிகிறது காட்சிகள். நாயகன் வீராவுக்குச் சொந்தமான கோழிப்பண்ணை இருக்கிறது. அதில் முதியவர் ஒருவர் வேலை பார்க்கிறார். அவரது மகள் மாதேவியை காதலிக்கிறார் வீரா. சாதி பிரச்சினை காரணமாக, ஆரம்பத்தில் காதலை மறுக்கும் மாதேவி, பிறகு நாயகனின் தூய்மையான அன்பை உணர்ந்து காதலிக்கத் துவங்குகிறார். இருவரும் காதல் வானில் மிதக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஈருடல் ஓருடலாக.. நாயகி கர்ப்பமாகிறார். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறார். ஆனால் நாயகன் மறுத்துவிடுகிறார். அவர் ஏன் மறுத்தார்? அதன் பிறகு என்ன ஆனது என்பதே செம்பியன் மாதேவி படத்தின் கதை. வீராவாக வரும் நாயகன் லோகு பத்மநாபன், நிஜமான கிராமத்து ...
தங்கலான்’ படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்!

தங்கலான்’ படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்!

News
'தங்கலான்' படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்! சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'தங்கலான்'. சீயான் விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை அனைவரும் வியந்து பார்த்து ரசித்து பாராட்டுகிறார்கள். இந்த தருணத்தில் சீயான் விக்ரம் 'தங்கலான்' படத்தின் வெற்றிக்காக படத்தில் கடினமாக பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநர்கள் , அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார். இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்திற்கு வருகை தந்த 500-க்கும் மேற்பட்டவர்களை சீயான் விக்ரம் வரவேற்றார். பின்னர் படத்தில் கடுமையாக உழை...
மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர்!

மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர்!

News
மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர்! Shark 9 pictures சார்பில் சிவா கில்லரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜாவின் இயக்கத்தில் விமல், நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'போகுமிடம் வெகு தூரமில்லை'. இப்படத்தில் விமலுடன் கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், தீபா சங்கர், சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓட்டிக்கொண்டு இருக்கிறது. பொதுமக்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். பதற வைக்கும் இடைவேளை காட்சியும், பரபர என்று செல்லும் திரைக்கதையும் ரசிகர்களை கவர்ந்து இருப்பதால் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. மனித உணர்வுகளை அழகாகவும் அழுத்தமாகவும் இயக்குனர் பேசி இருப்பதாக ரசிகர்கள் பொது மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கையை அப்படியே படமாக்கி இருப்பதால் இப்படம...
“‘ஜெய்பீம்’ போல ‘கெவி’ படமும் முதல்வரின் கவனத்திற்கு செல்ல வேண்டும்” _இயக்குநர் அமீர்

“‘ஜெய்பீம்’ போல ‘கெவி’ படமும் முதல்வரின் கவனத்திற்கு செல்ல வேண்டும்” _இயக்குநர் அமீர்

News
“விருதுக்கான படங்களை திரையரங்குகளுக்கு கொண்டுவந்து போட்டி போடக்கூடாது” ; வெளிப்படையாகப் பேசி அதிர வைத்த இயக்குநர் அமீர்! ARTUPTRIANGLES FILM KAMPANY சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன், உமர் பரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியன் ஜி இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். ஒரு சிறப்பு பாடலை தேனிசைத் தென்றல் தேவா பாடியுள்ளார். ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தைச் சுற்றி, அந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்பட...
நடிகர் பிஜிலி ரமேஷ் மறைவிற்கு “சாலா” படக்குழு சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்.

நடிகர் பிஜிலி ரமேஷ் மறைவிற்கு “சாலா” படக்குழு சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்.

News
நடிகர் பிஜிலி ரமேஷ் மறைவிற்கு "சாலா" படக்குழு சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்... நடிகர் பிஜிலி ரமேஷ் இறப்பு மன வேதனை அளிக்கிறது... திரைத்துறையில் நன்கு வளர்ந்து வரும் வேளையில் அவருக்கு இப்படி நேராமல் இருந்திருக்கலாம்... அவர் கடைசியாக நடித்த படம் "சாலா", அதில் அவர் கடைசியாக பேசிய வசனம் "நீ விக்கற... அதனாலதான் நான் குடிக்கிறேன், கொரோனா நேரத்துல ஆறு மாசம் கட மூடி தான் இருந்தது நான் குடிக்கவே இல்லையே" இந்த வசனத்தை அவர் பேசி நடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்-டில் என்னிடம் "சார்... இந்த டயலாக்கு உண்மைக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு சார்... நானும் இந்த குடியை விட தான் போராடிட்டு இருக்கேன் முடியல" என சொன்னார்... குடியினால் உயிரை இழந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான குடிமகன்களின் உண்மையான குற்றச்சாற்று "கடைய மூடுங்க" என்பதாகத்தான் இருக்கும்... சிறுநீரக செயலிழந்து மிகச் சிரமத்துடன் அவர் வாழ்ந்து கொண்டிருந்...
ஓடிடி தளத்தில் முதலிடத்தில் இருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம்!

ஓடிடி தளத்தில் முதலிடத்தில் இருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம்!

News
வெளியான மூன்றே வாரங்களில் ஓடிடி தளத்தில் முதலிடத்தில் இருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம்! மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வெப்பன்'. சயின்ஸ் ஃபிக்‌ஷன்- சூப்பர் ஹியூமன் ஜானரில் உருவான இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. திரையரங்குகளில் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்ற இந்தத் திரைப்படம் ஓடிடி தளத்திலும் வெளியான மூன்று வாரங்களிலேயே அதிக அளவு பார்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது என்பதைப் படக்குழு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது. இதுகுறித்தான மகிழ்ச்சியை தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் பகிர்ந்து கொண்டதாவது, “சூப்பர் ஹூயூமன் கான்செப்ட் பலருக்கும் பிடித்த ஒன்று. குறிப்பாக ஓடிடி தளத்தில் இன்னும் அதிகமான பார்வையாளர்களை சென்று சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. தியே...
நடிகை எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து!

நடிகை எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து!

News
நடிகை எமி ஜாக்சன் - எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து! மதராசப்பட்டினம்’ படப்புகழ் நடிகி எமி ஜாக்சன் - ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலியில் இருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் நடைபெற்றிருக்கிறது. இந்தத் திருமணத்தில் இயக்குநர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். இதுதொடர்பாக இயக்குநர் விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்துச் செய்தி, ‘அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துக்கள்! இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது!’ எனத் தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்...
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘கோலி சோடா – தி ரைசிங்’ வெப் சீரிஸ்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘கோலி சோடா – தி ரைசிங்’ வெப் சீரிஸ்!

News
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'கோலி சோடா - தி ரைசிங்' வெப் சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது ! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ், 'கோலி சோடா - தி ரைசிங்' வெப் சீரிஸின், அதிரடியான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தயாரிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், இயக்குநர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் உருவாக்கியுள்ள இந்த சீரிஸில் நடிகர்கள் ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, சேரன், R K விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோருடன் சீதா, ஸ்வேதா, சுஜாதா, இம்மான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன் மற்றும் மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ...
அவ்ராம் மஞ்சுவின் ஃபர்ஸ்ட் லுகை வெளியிட்ட ‘கண்ணப்பா’ குழு!

அவ்ராம் மஞ்சுவின் ஃபர்ஸ்ட் லுகை வெளியிட்ட ‘கண்ணப்பா’ குழு!

Uncategorized
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கண்ணப்பாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்கும் அவ்ராம் மஞ்சுவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது! கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்காக குழந்தை தின்னடு கதாபாத்திரத்தில் நடிக்கும் அவ்ராம் மஞ்சுவின் ஃபர்ஸ்ட் லுகை வெளியிட்ட ‘கண்ணப்பா’ குழு! விஷ்ணு மஞ்சுவின் மகனும், பழம்பெரும் நடிகர் மோகன் பாபுவின் பேரனுமான அவ்ராம் மஞ்சு, மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் வரிசையில் முன்னிலையில் இருக்கும் ’கண்ணப்பா’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இதன் மூலம் மஞ்சு குடும்பத்தின் பாரம்பரியத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, குழந்தை கண்ணப்பா அல்லது தின்னடுவாக நடிக்கும் அவ்ராமின் ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. கண்ணப்பா, சிவபெருமானின் மதிப்பிற்குரிய பக்தரான பக்த கண்ணப்பாவின் கதையின் பிரமாண்டமான திரை படைப்பாக உருவ...
நண்பனுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘சேவகர்’!

நண்பனுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘சேவகர்’!

News
நண்பனுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள படம் 'சேவகர்'! முழுக்க முழுக்க ஒரு மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழின் மீது நம்பிக்கை வைத்து உருவாக்கி உள்ள திரைப்படம் தான் 'சேவகர்' இது ஓர் அரசியல் த்ரில்லராக உருவாகியுள்ளது. 'சேவகர்'படத்தில் பிரஜின், ஷகானா , போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன்,மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி, ரூபா, சுனில், பாலு, ஷாஜி கிருஷ்ணா, சாய் சங்கர், ஜிஷ்னு ஜித் ,மனோ,ஜமீன்குமார்,ஷர்புதீன்,சந்துரு,ராஜ்குமார் நடித்துள்ளனர். இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இசை ஆர் டி மோகன். ஒளிப்பதிவு பிரதீப் நாயர், படத்தொகுப்பு ரஞ்சித், கலை இயக்கம் ஸ்ரீகுமார் ,நடனம் ரேவதி ராவ், பாடல்கள் ராஜேஷ் முருகன், வேலன் ராஜ், அன்பழகன் .,சவுண்ட் இன்ஜினியர் கதிர்.தயாரிப்பு மேற்பார்வை சதீஷ் பாலக்காடு. சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ்,தயாரித்துள்ளார்...