Sunday, November 29

Author: admin

யீன் உதான் பற்றிய ஆவணப்படம்!

யீன் உதான் பற்றிய ஆவணப்படம்!

News
கயாக் ஃபில்ம்ஸ் ஆஷிக் ஜோயல் இயக்கத்தில், EFL குளோபல் தயாரிப்பில், 'மீண்டும் நம்பிக்கையை கண்டறிதல்: யீன் உதான் மூலம் பயணம்'! விருது பெற்ற அரசு சாரா நிறுவனமான யீன் உதான் பற்றிய இந்த ஆவணப்படம், தமிழ்நாட்டின் பழமையான தோபிகாட், வறுமையின் சங்கிலியிலிருந்து விடுபடும் இளம் மாணவர்களின் போராட்டத்தையும் கனவுகளையும் காட்டுகிறது. இது அவர்களின் குடும்பங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் தாக்கத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கைவிடப்பட்ட குழந்தைகள், இளைஞர்கள், பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன், திருமதி வேதிகா அகர்வால் 2017 இல் யீன் உதான் நிறுவப்பட்டது. யீன் உதானின் ஆவணப்படத்தின் திரையிடல் தி-நகரில் உள்ள ஏஜிஎஸ் சினிமாஸில் நடைபெற்றது. திருமதி ஆண்டாள் அகோரம், திருமதி அர்ச்சனா கல்பாத்தி, மற்றும் செல்வி ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரால் இந்நிகழ்வு சாத்தியமாகியது. இந்நி...
இயக்குநராக மீண்டும் களம் இறங்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்!

இயக்குநராக மீண்டும் களம் இறங்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்!

News
இயக்குநராக மீண்டும் களம் இறங்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்! 'கே ஜி எஃப்' , ' சலார்' போன்ற பிரம்மாண்டமான வெற்றி படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், 'வீர சந்திரஹாசா' எனும் திரைப்படத்தினை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாகும். அத்துடன் இந்த திரைப்படம் அவரது கலையுலக பயணத்தில் முக்கிய அடையாளமாகவும் இருக்கும். இயக்குநர் ரவி பஸ்ரூரின் திரைப்படங்கள் அவற்றின் புதுமையான மற்றும் யதார்த்தமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றவை. மேலும் அவரது இயக்கத்தில் உருவாகும் 'வீர சந்திரஹாசா' - பாரம்பரியத்தை குறிப்பிடத்தக்க வகையில் அதன் எல்லைகளை மேலும் விரிவடைய செய்யும் என்கிறார். 'வீர சந்திரஹாசா'வை வேறு படைப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்துவது கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய கலை வடிவமான ...
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் திரைப்படம்!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் திரைப்படம்!

News
சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம்! வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். 1950கள் முதல் மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித் குமார், தனுஷ் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்த வெற்றி படங்களை தயாரித்த...
வாழை _ விமர்சனம்

வாழை _ விமர்சனம்

Reviews
வாழை _ விமர்சனம் Vaazhai Movie Review தனது பள்ளிப் பருவத்தில் நடந்த சம்பவங்களை அழகான திரைமொழியில் அற்புதமாகச்  சொல்லி இருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமம். இங்கு, விவசாய கூலி வேலை குடும்பம். குடும்பத் தலைவர் மறைந்துவிட்ட நிலையில், தாய் மற்றும் மூத்த சகோதரியுடன் வாழ்கிறான் சிறுவன் சிவனைந்தன். அம்மாவும், அக்காவும் லாரியில் சென்று, வாழைத் தோட்டங்களில், அறுக்கப்பட்ட வாழைத் தார்களை தலையில் சுமந்து வந்து சேர்க்கும் கூலி வேலை செய்கின்றனர். சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை தினங்களில் சிவனைந்தனும் செல்கிறான். அவனுக்கு அந்த வேலை பிடிப்பதில்லை. அத்தனை கடினம். தவிர சிறுவன் என்பதால் விளையாடும் ஆர்வம் இருக்கும் அல்லவா... ஒரு சனிக்கிழமை அன்று தாய்க்கு தெரியாமல், வாழைத்தோட்ட வேலைக்கு டிமிக்கி கொடுக்கிறான் சிறுவன் சிவனைந்தன். ஆனால் அக்காவிடம் மட்டும் சொல்லி அனுமத...
இசை ரசிகர்களிடம் வரவேற்பைக் குவிக்கும்  “சொன்னாரு நைனா” பாடல் !

இசை ரசிகர்களிடம் வரவேற்பைக் குவிக்கும் “சொன்னாரு நைனா” பாடல் !

News
இசை ரசிகர்களிடம் வரவேற்பைக் குவிக்கும் மிஸ் யூ படத்தின் “சொன்னாரு நைனா” பாடல் ! ???? - https://youtu.be/LYB61D3bQZg ‘7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் N.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் இளமை துள்ளலுடன் துறுதுறுப்பான ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மிஸ் யூ”. இப்படத்திலிருந்து வெளியான “சொன்னாரு நைனா” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, இணையமெங்கும் வைரலாகி வருகிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், நடிகர் சித்தார்த் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இக்கூட்டணியின் வித்தியாசமான குரலில், ரோகேஷ் வரிகளில், தரை லோக்கல் கானாவாக, கேட்டவுடன் உற்சாகத்தை விதைக்கும் வகையில் அமைந்துள்ளது இப்பாடல். துள்ளலான நடனத்திற்கு ஏற்றவாறு, இன்றைய இசை ரசிகர்களையும், இணைய ...
மீனவர்களைப் பற்றி சொல்லப்படாத விசயங்களை சொல்லும் காதல் கதை ‘குப்பன்’ !

மீனவர்களைப் பற்றி சொல்லப்படாத விசயங்களை சொல்லும் காதல் கதை ‘குப்பன்’ !

News
மீனவர்களைப் பற்றி சொல்லப்படாத விசயங்களை சொல்லும் காதல் கதை ‘குப்பன்’ ! தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சரண்ராஜ், வில்லன், குணச்சித்திரம், கதாநாயகன் என்று பல்வேறு வேடங்களில் நடித்திருப்பதோடு, ’அண்ணன் தங்கச்சி’, ‘எதார்த பிரேம கதா’ போன்ற படங்கள் மூலம் இயக்குநராகவும் கவனம் ஈர்த்தவர், தற்போது ‘குப்பன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் சரண்ராஜின் இளையமகன் தேவ் நாயகனாக அறிமுகமாகிறார். மற்றொரு நாயகனாக ஆதிராம் அறிமுகமாகிறார். நாயகியாக அறிமுக நடிகை சுஷ்மிதா நடிக்க, மற்றொரு நாயகியாக பிரியா அருணாச்சலம் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் சரண்ராஜ் நடித்திருக்கிறார். சோனி ஸ்ரீ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி என்.ஒய்.சரண்ராஜ் இயக்க, அறிமுக இசையமைப்பாளர் எஸ்.ஜி.இளை இ...
நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் ‘கெவி’!

நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் ‘கெவி’!

News
நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் 'கெவி'! கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள 'வெள்ளக்கெவி' கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி நிஜமான சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி (ARTUPTRIANGLES FILM KAMPANY) சார்பில் தயாராகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கியுள்ளார். கதாநாயகனாக நடிகர் ஆதவன் அறிமுகமாகிறார். ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் நடிகை ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் ஃபரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியம் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளனர். சமீபத்தில் இப்படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதி இசையமை...
சாலா _ விமர்சனம்

சாலா _ விமர்சனம்

Reviews
சாலா _ விமர்சனம் சென்னையின் டெரர் ஏரியாவாகவே, திரைப்படங்களில் காண்பிக்கப்படும் வடசென்னை ஏரியாதான் இந்தப் படத்தின் கதைக்களமும். இங்கு பல வருடங்களாக பிரபலமாக விளங்கி வருகிறது பார்வதி பார். இதை நடத்தும் தாதாவுக்கு, குடும்பம் இல்லை. ஒரு சமயம், தன்னைக் காப்பாற்றும் சிறுவனை தத்தெடுத்து வளர்க்கிறார். அந்த சிறுவன்தான் சாலா. வளர்ந்த பிறகும் தனக்கு ஆதரவளித்த பார்வதி பார் உரிமையாளர் அருள்தாஸ் மீது அதே பாசத்துடன் இருக்கிறார் சாலா. மதுக்கூடத்தை  கவனித்துக்கொள்கிறார். இந்நிலையில் பார் குறித்து பிரச்சினை ஏற்பட.. வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்று பார் மூடப்படுகிறது. அதைக் கைப்பற்ற இன்னொரு தாதா டீம் முயற்சிக்கிறது. இதனால் மோதல் ஏற்படுகிறது. இன்னொரு புறம் மதுவை எதிர்த்துப் போராடும் மலர் டீச்சரை காதலிக்கிறார் சாலா. அவர்கள் காதல் என்ன ஆனது... மலர் டீச்சரின் எண்ணம் நிறைவேறியதா, பார் பிரச்சினை எப்ப...
போகுமிடம் வெகு தூரமில்லை _ விமர்சனம்

போகுமிடம் வெகு தூரமில்லை _ விமர்சனம்

News, Reviews
போகுமிடம் வெகு தூரமில்லை _ விமர்சனம் அடுத்தவருக்கு உதவுவதே உன்னதமான வாழ்க்கை என்பதை உள்ளம் நெகிழச்சொல்லும் படம் போகுமிடம் வெகு தூரம் இல்லை மனைவியை பிரசவத்துக்காக, மருத்துவமனையில் சேர்த்துவிட்டு குழந்தையின் பிறப்புக்காக திக் திக் என்ற மனநிலையுடன் காத்திருக்கிறார் விமல். இந்நிலையில், பிரசவ செலவுக்காக வைத்திருந்த பணத்தை யாருக்கோ உதவியாக மனைவி கொடுத்ததும், பணம் வாங்கியவர் உரிய நேரத்தில் திரும்பக் கொடுக்காததும் அவருக்குத் தெரிய வருகிறது. அதிர்ந்து போகிறார் விமல்.  அமரர் ஊர்தி ஓட்டுநரான அவருக்கு, சென்னையில் இருந்து ஓர் உடலை, நெல்லைக்குக் கொண்டு செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. பணம் கிடைக்குமே என்று ஒப்புக்கொள்கிறார். இறந்து போனவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகன் ஆடுகளம் நரேன், இரண்டாவது மனைவியின் மகன் பவன். இவர்களுக்குள், தந்தையான் உடலுக்கு யார் இறுதிச் சடங்கு செய்வது என்பதில...
ரோபோவை மையமாக வைத்து உருவான குறும்படம் ‘மெட்டா பியூட்டி’!

ரோபோவை மையமாக வைத்து உருவான குறும்படம் ‘மெட்டா பியூட்டி’!

News
ரோபோவை மையமாக வைத்து உருவாகியிருக்கும் குறும்படம் மெட்டா பியூட்டி சமீப காலமாக தமிழ் சினிமாவில் சைன்ஸ் பிக்சன் கதைகள் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது அதில் பல படங்கள் வெற்றியடைந்துள்ளது.அந்தவகையில் விரைவில் வெளியாக இருக்கும் ஒரு குறும்படம் மெட்டா பியூட்டி இந்த படத்தின் இயக்குனர் ராஜா எம் முத்தையா. படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ஒரு ரோபர்ட் ஆக திவ்யலெட்சுமி என்ற நடிகையும், அதை உருவாக்கும் விஞ்ஞானியாக அர்ச்சனா உன்னிகிருஷ்ணன் அவர்களும் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயராஜ், இளங்கோ சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.குறிப்பாக இந்த ரோபர்ட்யை மையமாக வைத்து தான் இந்த கதை உருவாகியுள்ளது. அடுத்த நூற்றாண்டில் இவ்வுலகை கலக்க இருக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு அங்கமான ரோபோட்டை கதை மூலமாக வைத்து உருவாகி இருக்கும், ஒரு பெண்ணியம் சார்ந்த (பாலியல் வன்புணர்வுக்கு எதிரான) ஒரு விழிப்புணர்வு பைலட் படமான #Meta_...