Sunday, November 29

Author: admin

2 புதிய படங்களில் நடிக்கிறார் லியோ ஹம்சவிர்தன்!

2 புதிய படங்களில் நடிக்கிறார் லியோ ஹம்சவிர்தன்!

News
கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்! 'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஹம்சவிர்தன், தனது பெயரை லியோ ஹம்சவிர்தன் என மாற்றிக் கொண்டுள்ளார். லியோ ஹம்சவிர்தன் கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை சமீபத்தில் புதுச்சேரியில் மணந்தார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. நிமிஷாவின் சொந்த ஊரான வயநாட்டில் மே மாதம் 18ம் தேதி திருமண வரவேற்பு விமரிசையாக நடைபெற்றது. இரு வீட்டு பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆசியோடும் வாழ்த்துகளோடும் இந்த காதல் திருமணம் நடந்தேறியது. நடிகர் லியோ ஹம்சவிர்தன் உடனான திருமணத்தை தொடர்ந்து நிமிஷா இனி நிமிஷா லியோ ஹம்சவிர்தன் என்று அழைக்கப்படுவார். இரண்டு புது படங்களில் நடிக்க லியோ ஹம்சவிர்தன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த திரைப்படங்களின் முன் தயாரி...
யோகி பாபு நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

யோகி பாபு நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
யோகி பாபு நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அர்ஜுன் தாஸ் - காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'போர் ' எனும் திரைப்படத்தைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் யோகி பாபுவுடன் மேகா தாமஸ், ஜாஸிக், அஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இயக்குநர் ஜெய் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 2' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. குற்றாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த வ...
லாரா படம் வாங்கித் தந்த வாய்ப்பு : தயாரிப்பாளர் கார்த்திகேசன் மகிழ்ச்சி!

லாரா படம் வாங்கித் தந்த வாய்ப்பு : தயாரிப்பாளர் கார்த்திகேசன் மகிழ்ச்சி!

News
லாரா படம் வாங்கித் தந்த வாய்ப்பு : தயாரிப்பாளர் கார்த்திகேசன் மகிழ்ச்சி! ஒரு படத்தில் தயாரிப்பாளர் நடிக்கிறார் என்றால் பெரும்பாலும் அந்தக் கதாபாத்திரம் அந்தப் படத்தின் கதையில் வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்கும் - ஆனால் எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிக்கப்பட்ட 'லாரா ' படத்தில் அதன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் ஒரு காவல் ஆய்வாளர் பாத்திரத்தில் நடித்திருந்தார். விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் அந்தப் படம் வெற்றி பெற்றது. டெண்ட் கொட்டா' ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் ஊடக விமர்சனங்களில் தயாரிப்பாளர் கார்த்திகேசன் நடித்த கதாபாத்திரம் பற்றியும் அவரது இயல்பான நடிப்பைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்கள். அந்த அளவுக்குப் பாத்திரத்துக்கு ஏற்ப இயல்பாக நடித்து இருந்தார் .அதைப் பார்த்து திருமலை புரொடக்ஷன்ஸ் தயாரிப்...
ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘சூர்யா 46’ படத்தின் பூஜை!

ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘சூர்யா 46’ படத்தின் பூஜை!

News
சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான '#சூர்யா 46 ' படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது! ரசிகர்களுக்கு அற்புதமான புதிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்கு ஏற்ற வகையில் களம் அமைத்து , சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், 'புரொடக்ஷன் நம்பர் 33 - #சூர்யா 46 ' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இது தமிழ் - தெலுங்கு என இரு மொழி திரைப்படத்தின் பணிகள் தொடங்குவதை குறிக்கிறது. சூர்யா- வெங்கி அட்லூரி கூட்டணியில் தொடங்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கிலும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் சூர்யாவின் கதாபாத்திர தேர்வு மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை தொடர்ந்து படைப்பு எல்லைகளை கடந்து வருகிறது. அவரது நடிப்பில் 46 ஆவது படமான ' #சூர்யா 46...
“என் வாழ்வை மாற்றிய படம்  ‘மையல்’”- நடிகர் சேது!

“என் வாழ்வை மாற்றிய படம் ‘மையல்’”- நடிகர் சேது!

News
”‘மையல்’என் வாழ்வை மாற்றிய படம்”- நடிகர் சேது! கதை சார்ந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து தங்கள் திறமையை வெளிப்படுத்தும் நடிகர்களை தமிழ் சினிமா எப்போதும் ரெட் கார்பெட் கொண்டுதான் வரவேற்கும். அவர்களை பெரிய நட்சத்திரமாகவும் அங்கீகரிக்கும். பல தலைமுறைகள் தாண்டியும் இது தொடர்ந்து வருகிறது. ‘மைனா’ உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சேது தற்போது ‘மையல்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படம் மே 23 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. இதுகுறித்து நடிகர் சேது பகிர்ந்து கொண்டதாவது, “என்னுடைய சினிமா கரியர் மற்றும் தனிப்பட்ட வாழ்வை மாற்றிய படம் ‘மையல்’. என்னுடைய முழு திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கும் கதாபாத்திரத்திற்காக பல வருடங்களாக நான் காத்திருந்திருக்கிறேன். அது ‘மையல்’ படத்தில் நடந்திருக்கிறது. இந்த வாய்ப்பிற்காக அனுபமா விக்ரம் சிங் ம...

அனல் மழை பட இசை வெளியீட்டு விழா !!

News
அனல் மழை பட இசை வெளியீட்டு விழா ! சாய் பொன்னியம்மன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் அ அய்யனாரப்பன் இயக்கத்தில், ஒரு அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அனல் மழை”. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. இயக்குனர் அய்யனாரப்பன் பேசியதாவது, இந்த நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இந்த மேடை ஏற எனக்கு 40 வருடங்கள் ஆகியது, பல படங்களில் பணி புரிந்திருக்கிறேன் , இப்போது முதன் முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளேன் அதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மோகனுக்கு மிகவும் நன்றி, எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, படத்தின் டிரெய்லர் பார்த்து படத்தின் கதையை புரிந்து கொள்ள முடியாது, படம் பார்த்து படத்தை பற்றி சொல்லுங்கள், கண்டிப...
நடிப்பு , இசை , இயக்கம் என முத்திரை பதிக்கும் தமிழ் கதாநாயகி மேக்னா!

நடிப்பு , இசை , இயக்கம் என முத்திரை பதிக்கும் தமிழ் கதாநாயகி மேக்னா!

News
"13/13 லக்கி நன்" படத்தில் கதா நாயகியாக நடித்திருப்பவர் மேக்னா. இந்தப்படத்தின் இசைவெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் எஸ்வி சேகர், தம்பி ராமையா, நடிகர் நட்டி, தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குனர் கண்ணன், ஜெய்குமார், கலை இயக்குனர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் படத்தை பாராட்டி பேசினார்கள், இயக்குனர் தம்பி ராமையா பேசும்பொழுது பல வருடங்களுக்குப்பிறகு தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகி படத்தின் இயக்குனராக , இசையமைப்பாளராக ,தயாரிப்பாளராக வருகிறார். அவரை நாம் வரவேற்கவேண்டும். திரைப்படத்துறையில் யார்வேண்டுமானாலும் உழைப்பும், திறமையும், அற்பணிப்பும் இருந்தால் ஜெயிக்கலாம் என்றார். படத்தின் இயக்குனர் மேக்னா பேசும்பொழுது இந்தப்படம் திரில்லர் படம் , மலேசியாவிலும், தமிழ் நாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து இப்போது த...
விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடிகராக அறிமுகமாகும்இசை நாயகன் ‘பால் டப்பா’!

விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடிகராக அறிமுகமாகும்இசை நாயகன் ‘பால் டப்பா’!

News
விஜய் மில்டன் இயக்கும் இருமொழித் திரைப்படமான ப்ரொடக்‌ஷன் நம்பர் 5 படத்தில் இசை நாயகன் 'பால் டப்பா' நடிகராக அறிமுகமாகிறார்! புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான ( தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள) ப்ரொடக்‌ஷன் நம்பர் 5 படத்தின் முக்கியமான அப்டேட்டை பெருமையுடன் அறிவிக்கிறது, ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன் தயாரிப்பு நிறுவனம். எதார்த்தமான வாழ்க்கை சார்ந்த இந்த படைப்பில், ஏற்கனவே இருக்கும் முன்னணி நடிப்பு குழுவினருடன் இணைவது யாரென்று கேட்டால், அதுதான் தற்போதைய இசை உலகில் கவனம் பெற்று வரும் நட்சத்திரம் 'பால் டப்பா' – இவர் இந்த திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமாகிறார். சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிஷ், அவரின் மேடைப்பெயரான 'பால் டப்பா' வின் மூலம் அனைவரிடத்திலும் மிகவும் பரிச்சயமாக உள்ளார். இவர் ஒரு பன்முக கலைஞர் – ரேப்பர், பாடகர், பாடலா...

டி டி நெக்ஸ்ட் லெவல் _ விமர்சனம்

Reviews
டி டி நெக்ஸ்ட் லெவல் _ விமர்சனம் ஒரே மாதிரியான காமெடி கம் பேய் படங்களை பார்த்து சலித்தவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட டி டி நெக்ஸ்ட் லெவல் படம் வேறு லெவல் நகைச்சுவை அனுபவத்தை தரும் என்பதில் ஐயமில்லை. திரைப்படங்களை தாறுமாறாக விமர்சனம் செய்பவர்களை தனக்குச் சொந்தமான திரையரங்குக்கு வரவழைத்து கொலை செய்கிறார் பேயாக உலவும் செல்வராகவன். புதிய படம் ஒன்றின் பிரீமியர் ஷோவுக்கு youtube சினிமா விமர்சகரான சந்தானத்தை குடும்பத்துடன் வரச் சொல்லி அழைப்பு அனுப்புகிறார் செல்வ ராகவன். குறிப்பிட்ட அந்த இடத்துக்கு சென்ற சந்தானம், ஆள் அரவமற்ற அமானுஷ்ய அமைதியுடன் அந்த அரங்கம் இருப்பதைக் கண்டு பயத்துடன் திரும்பி விடுகிறார். ஆனால் அவரது அப்பா நிழல்கள் ரவி, அம்மா கஸ்தூரி, மற்றும் தங்கை யாஷிகா ஆனந்த் ஆகியோர் பிரீமியர் ஷோ பார்ப்பதற்கு அந்தத் திரையரங்குக்கு சென்று செல்வராகவனிடம் மாட்டிக் கொள்...
எதிர்பார்ப்புகளை எகிற வைத்த ‘தக் லைஃப்’ ட்ரெய்லர்’!

எதிர்பார்ப்புகளை எகிற வைத்த ‘தக் லைஃப்’ ட்ரெய்லர்’!

News
https://www.youtube.com/watch?v=96kAbj3IF3k ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லர் என்பது அந்த படம் வெளிவரும் போது அதை தவறாமல் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் இதையும் தாண்டி,  மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் சிலம்பரசன் நடிப்பில் வெளியாக இருக்கும் 'தக் லைஃப்' டிரைலர்,  படம் குறித்தான எதிர்பார்ப்புகளை எகிற வைத்து, எப்போது படம் திரைக்கு வரும் என்று ஆவலுடன் காத்திருக்க வைத்துவிட்டது. உலக நாயகன் விண்வெளி நாயகனாக பரிணாமம் பெற்று,  பேன் இந்தியா படங்களாக இருந்த நமது படங்களை பேன் வோர்ல்ட் படங்களாக 'தக் லைஃப்' மூலம் மாற்றுகிறார். "நீ என் உயிரை காப்பாத்துனவன்... எமன் கிட்ட இருந்து என்னை மீட்டெடுத்தவன்... என்ற கமலின் வசனத்துடன் தொடங்கும் ட்ரைலர்   "இது எமனுக்கும் எனக்கும் நடக்கும் கதை... " என்ற கமலின் வசனத்துடன் முடிகிறது. "இனிமேல் இங்கே நான்தான் ரங்கராய சக்திவேல்..."...