Sunday, November 29

Author: admin

டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும் புதிய படம் இம்மாதம் 24ஆம் தேதி அறிவிப்பு!

டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும் புதிய படம் இம்மாதம் 24ஆம் தேதி அறிவிப்பு!

News
கன்னடத் திரையுலகின் முடிசூடா மன்னன், வசூல் சக்கரவர்த்தி டாக்டர் ராஜ்குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ( ஏப்ரல் 24 ) புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகிறது! கன்னடத் திரையுலகில் தன்னிகரற்ற வசூல் மன்னனாகத் திகழும் 'கருநாட சக்கரவர்த்தி' டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கிறார். இந்தப் படத்தை சாகர், கிருஷ்ணகுமார், சூரஜ் சர்மா ஆகியோர் இணைந்து ஷ்ரிதிக் மோஷன் பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கிறார்கள். இது இந்த நிறுவனத்தின் முதல் படமாகும். மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை பாலாஜி மாதவன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தமிழில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். பிரபல இயக்குநர் பி.வாசு அவர்களின் தங்கை மகனான பாலாஜி மாதவன், இயக்குநர் மிஷ்கின், நடிகர் இயக்குநர் ஆர்.மாதவன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். படத்தின் தலைப்பை விரைவிலேயே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தனித்துவமான கதையம்சம் கொண்ட படமா...
ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 24 முதல் “எம்புரான்” ஸ்ட்ரீமாகிறது !!

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 24 முதல் “எம்புரான்” ஸ்ட்ரீமாகிறது !!

News
ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் ஏப்ரல் 24 முதல், ப்ளாக்பஸ்டர் “எம்புரான்” திரைப்படம் ஸ்ட்ரீமாகிறது !! ப்ளாக்பஸ்டர் “எம்புரான்” திரைப்படம் வரும் ஏப்ரல் 24 முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிறது !! மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான “எம்புரான்” வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது. நடிகர், இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மோகன்லால் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிருத்விராஜ் சுகுமாரன், டொவினோ தாமஸ் இணைந்து நடிக்க, மேலு...
பிரமாண்டமான முறையில் நடைபெற்ற ‘விட்ஃபா’ முதல் மாநாடு!

பிரமாண்டமான முறையில் நடைபெற்ற ‘விட்ஃபா’ முதல் மாநாடு!

News
’விட்ஃபா’ அமைப்பும், அதன் நோக்கமும் திரையுலகத்திற்கு நன்மை செய்யும் - பிரபலங்கள் பாராட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு ‘வேர்ல்ட் இண்டர்நேஷ்னல் தமிழ் பிலிம் அசோசியேஷன்ஸ் - விட்ஃபா’. (World International Tamil Film Association - WITFA) சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் முதல் மாநாடு, சென்னையில் உள்ள பிரசாத் லேபில், ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்வில், விட்ஃபா அமைப்பின் தேசிய கீத பாடல் மற்றும் விட்ஃபா மூலம் தயாரிக்கப்படும் முதல் திரைப்படமான ’Expired மருந்து’-வின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன், இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஆகியோர் கலந்...
ஜப்பானில் நெப்போலியன் இல்லத்திற்கு வருகை தந்த கனிமொழி!!

ஜப்பானில் நெப்போலியன் இல்லத்திற்கு வருகை தந்த கனிமொழி!!

News
நான் பெரிதும் மதிக்கக்கூடிய எனது அரசியல் குரு, தலைவர் கலைஞர் அவர்களின் மகள் திருமதி கனிமொழி அவர்கள், ஒரு வாரகாலம் ஜப்பானுக்கு வருகைதந்துள்ளார்..! நான்கு நாட்களுக்கு முன்பாக ஜப்பானின் இந்திய தூதுவர் திரு சிபி ஜார்ஜ் அவர்கள் கொடுத்த விருந்தில் , தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் திரு ரேவந்த் ரெட்டி அவர்களும், கனிமொழி அவர்களும் நானும், கலந்து கொண்டோம்..! இன்று ஏப்ரல் 21 திங்கள் கிழமை, திருமதி கனிமொழி அவர்கள், ஜப்பானில் நாங்கள் வசிக்கும் எங்கள் இல்லத்திற்கு வருகைதந்து தனுஷையும் அக்‌ஷயாவையும் வாழ்த்தினார்கள்…! சிலமணிநேரம் தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி பழைய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டோம்..! மகிழ்வோடும், மனநிறைவோடும் அவர்களை வழி அனுப்பி வைத்தோம்..! இன்று இரவு இந்தியா திரும்புகிறார்கள்..! __நடிகர் நெப்போலியன்...
மே 9ம் தேதி திரைக்கு வரும் ‘நிழற்குடை’!

மே 9ம் தேதி திரைக்கு வரும் ‘நிழற்குடை’!

News
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் வரும் மே மாதம் 9 ம் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி,நீலிமாஇசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார், இப்படத்தைப்பற்றி இயக்குநர் சிவா ஆறுமுகம் கூறும் போது பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள் ஆனால் என் படத்தில் நடித்துள்ள குழந்தைகள் இருவருமே தேவயானிக்கு ஈடு கொடுத்து இயல்பாக நடித்துள்ளார்கள் என்றவர் மற்றொரு விசயத்தை பகிர்கிறார், நான் முதன் முதலா...
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் தயாரிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கும் N.T.R.!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் தயாரிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கும் N.T.R.!

News
'மேன் ஆஃப் மாஸ்’ நடிகர் என்.டி.ஆர். நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ’என்.டி.ஆர்.நீல்’ படத்தின் படப்பிடிப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி இணைகிறார் என்.டி.ஆர்.!* ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தனித்துவமான இயக்குநர் எனப் பெயர் பெற்ற பிரஷாந்த் நீலுடன் தன்னுடைய அடுத்தப் படத்திற்காகக் கைக்கோத்துள்ளார் நடிகர் என்.டி.ஆர். இந்தப் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘என்.டி.ஆர்.நீல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமாகத் தொடங்கியது. இதன் படப்பிடிப்பில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி என்.டி.ஆர். இணைகிறார். படப்பிட...
‘குபேரா’வின் முதல் பாடலான போய்வா நண்பா வெளியானது!

‘குபேரா’வின் முதல் பாடலான போய்வா நண்பா வெளியானது!

News
'குபேரா'வின் முதல் பாடலான போய்வா நண்பா வெளியிடப்பட்டது: மூன்று தேசிய விருது வென்றவர்களால் உருவான ஒரு சக்தி மிக்க இசை விருந்தாக இந்த பாடல் அமைந்துள்ளது! நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இருமொழி திரைப்படமான 'குபேரா'வின் முதல் பாடல் - போய்வா நண்பா - இப்போது வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல் மிக்க அதிர்வலைகள், பலவிதமான நடன அமைப்பு மற்றும் துடிப்பான காட்சிகளால் நிரம்பிய இந்த துள்ளலான பாடல் ஏற்கனவே பரபரப்பான ஒரு பாடலாக கொண்டாடப்படுகிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா, தனுஷ் மற்றும் 'ராக்ஸ்டார்' இசைமேதை தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட திறமைமிக்க மூவரும் இணைந்து 'போய்வா நண்பா'வை உண்மையிலேயே சிறப்பான பாடலாக மாற்றியுள்ளனர். விவேகாவின் ஈர்க்கும் விதமான பாடல் வரிகள் மற்றும் DSP-யின் அதிர்வுமிக்க இசைக்கு தனுஷ் தனது வித்தியாசமான க...
சூரி ஹீரோவாக நடிக்கும் “மண்டாடி”

சூரி ஹீரோவாக நடிக்கும் “மண்டாடி”

News
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் “மண்டாடி”.சூரி ஹீரோவாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் Sports Action Drama படமாக உருவாகிறது! பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், திரு எல்ரெட் குமார் தலைமையில், தனது 16வது தயாரிப்பு முயற்சியாக “மண்டாடி” எனும் புதிய திரைப்படத்தை உருவாக்குவதை பெருமையுடன் அறிவிக்கிறது. உணர்வும் உறுதியும் கலந்த, ஆழமான கதையுடன் கூடிய இந்த விளையாட்டு ஆக்‌ஷன் டிராமா திரைப்படம், பாரம்பரிய சூழலோடு எதிர்பார்ப்புகளை தூண்டும் படமாக அமையவிருக்கிறது. “செல்ஃபி” என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இப்படத்தையும் எழுதி இயக்குகிறார். கடந்த படத்தைவிட பெரிய களம் மற்றும் ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்த படத்தில் களம் இறங்கி இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்கவுள்ளார். கதையம்சம் கொண...
நாங்கள்_ விமர்சனம்

நாங்கள்_ விமர்சனம்

Reviews
நாங்கள்_ விமர்சனம் தாயைப் பிரிந்து தந்தையுடன் வசிக்கும் மூன்று டீன் ஏஜ் சிறுவர்களின் கதைதான் நாங்கள். தந்தை மிக மிக கண்டிப்பு காட்டுபவர். கண்டிப்பு என்றால் மிக மிகக் கடுமையான கண்டிப்பு. சில சமயங்களில் இவர் என்ன சைக்கோவா என்று நினைக்கத் தோன்றும் வகையில் நடந்து கொள்பவர். கிட்டத்தட்ட அடிமைகள் போலவே தன் மூன்று மகன்களையும் நடத்துகிறார் அந்த தந்தை. அப்பா இல்லாத போது மகிழ்ச்சி ஆட்டம் போடும் சிறுவர்கள் அப்பா வரும் அரவம் கேட்டதுமே அப்படியே மாறி பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுகிறார்கள். ஊட்டியில் தந்தை நடத்தி வரும் தனியார் பள்ளியிலேயே மகன்கள் மூவரும் படிக்கின்றனர். ஒரு கட்டத்தில் தந்தையின் அராஜகம் பொறுக்க முடியாமல் தாய் வீட்டுக்கு செல்கின்றனர் மூவரும். தாயாரின் அப்பா அதாவது இவர்களுடைய தாத்தா மூவரையும் வேறு பள்ளியில் சேர்ப்பதற்கு முயற்சி செய்கிறார். ஆனால் சில பொருளாதாரப் பிரச்சினைகளால் அந்தப் ப...
டென் ஹவர்ஸ் _ விமர்சனம்

டென் ஹவர்ஸ் _ விமர்சனம்

Reviews
டென் ஹவர்ஸ் _ விமர்சனம் ஆத்தூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் சிபிராஜ், சபரிமலைக்கு விரதம் இருந்து புறப்படும் நாளன்று ஒரு பெண்ணை காணவில்லை என்று புகார் வருகிறது. காணாமல் போன பெண்ணை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் சிபிராஜ். அந்த இரவு 10 மணி நேரத்தில் ஓடும் பேருந்தில் ஒரு கொலை நடக்கிறது. இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார்? குற்றவாளியை சிபிராஜ் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் டென் ஹவர்ஸ் படத்தின் கதை. நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு புலன் விசாரணையை துவங்கும் இன்ஸ்பெக்டர் சிபிராஜின் மிடுக்கு, கம்பீரம் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு கணம் சேர்க்கிறது. மொத்த படம் முழுவதும் சிபிராஜின் ஆட்சி தான். சிபிராஜுடன் வரும் சப்-இன்ஸ்பெக்டர் கஜராஜ் படத்தின் இரண்டாவது கதாநாயகன் என்று சொன்னால் மிகையாகாது.தன் பாத்திரத்தை உணர்ந்து அழகாக நடித்து கவ...