‘வேம்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'வேம்பு'.
'வேம்பு'. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் 'மெட்ராஸ்' , 'தங்கலான்', கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மணிகண்டன் முரளி இசை அமைத்துள்ளார். குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் சீனுராமசாமி, தங்கர்பச்சான் , நித்திலன் சாமிநாதன், மடோன் அஷ்வின், நடிகர் யோகிபாபு, நடிகை துஷாரா விஜயன் ஆகியோர் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இப்படம் குறித்து அதன் இயக்குநர் ஜஸ்டின் பிரபு கூறுகையில்,
"பெண் என்றாலே ஏதாவது குறை ...







