Sunday, November 29

Author: admin

‘காதல் என்பது பொதுவுடமை’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

‘காதல் என்பது பொதுவுடமை’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

Uncategorized
'காதல் என்பது பொதுவுடமை' படத்தின் டிரெய்லர் வெளியானது! பிப்ரவரி 14 ல் திரைப்படம் வெளியாகிறது. BOFTA G. தனஞ்ஜெயன் வெளியிடுகிறார். இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'காதல் என்பது பொதுவுடமை' . மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக இருக்கும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசும் படமாக உருவாகியுள்ளது 'காதல் என்பது பொதுவுடமை' நடிகர் வினித் பல வருடங்களுக்குப்பிறகு இந்தபடத்தில் நடித்திருக்கிறார். ரோகிணி, லிஜோமோல் , வினித் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படம் சர்வதேச திரைப்படவிழாக்களிலும் சிறந்த வரவேற்பையும் , அனைவரும் பார்க்க வேண்டிப ஒரு முக்ககிய படம் என்ற பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இன்று வெளியான படத...
பிப்ரவரி 28 அன்று திரையரங்குகளில் வெளியாகும் ‘அகத்தியா’!

பிப்ரவரி 28 அன்று திரையரங்குகளில் வெளியாகும் ‘அகத்தியா’!

News
"ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் திரைப்படமான அகத்தியா, வரும் பிப்ரவரி 28, 2025 அன்று பிரமாண்டமாக , திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு" ஜனவரி 30 2025 : மிகவும் எதிர்பாக்கப்பட்ட ஃபேன்டஸி-ஹாரர் த்ரில்லர், திரைப்படம் ‘அகத்தியா’ , ஜனவரி 31 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , தற்போது பிப்ரவரி 28 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்பட குழுவினர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் விரிவான VFX வேலைகளை மேம்படுத்துவதில் தயாரிப்பு குழு கவனம் செலுத்துவதால் தாமதம் ஏற்படுகிறது, இது பார்வையாளர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும், அதுமட்டுமின்றி இது ஒரு புதுவிதமான அனுபவத்தை உறுதி செய்யும். உலகத் தரம் வாய்ந்த சினிமா காட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தாமதம், என பட குழுவினர்கள் தெரிவித்துள்ளனர் . நட்சத்திர பட்டாளம் மற்றும் Pan - India விவரங்கள் : பா.வி...
ட்ரெண்டிங்கில் இருக்கும் அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் ‘ஒன்ஸ்மோர்’ பட பாடல்!

ட்ரெண்டிங்கில் இருக்கும் அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் ‘ஒன்ஸ்மோர்’ பட பாடல்!

News
தமிழில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப்! தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பான் இந்திய இசையமைப்பாளரான ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் உருவாகி, 'ஒன்ஸ்மோர்' எனும் படத்தில் இடம்பெற்ற ''வா கண்ணம்மா..' எனும் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன் ஆயிரக் கணக்கிலான ' ரீல்ஸ் 'களிலும் இடம் பிடித்து புதிய மைல்கல் பயணத்தை தொடங்கி இருக்கிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஒன்ஸ்மோர் ' எனும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் , அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ்கமல் கவனித்திருக்கிறார். இளமை துள்ளலுடன் கூ...
கவனத்தை ஈர்க்கும் ஸ்ருதிஹாசனின் ‘தி ஐ ‘( The Eye) பட ஃபர்ஸ்ட் லுக்!

கவனத்தை ஈர்க்கும் ஸ்ருதிஹாசனின் ‘தி ஐ ‘( The Eye) பட ஃபர்ஸ்ட் லுக்!

News
கவனத்தை ஈர்க்கும் ஸ்ருதிஹாசனின் 'தி ஐ '( The Eye) பட ஃபர்ஸ்ட் லுக்! இசைக்கலைஞர்- பாடகி - பாடலாசிரியர்- தனித்துவமான திறமை மிக்க நடிகை- என பன்முக ஆளுமையான ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் தி ஐ ( The Eye) எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதற்கு உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது. ஹாலிவுட் இயக்குநர் டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தி ஐ ' ( The Eye) எனும் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன், மார்க் ரௌலி, லிண்டா மார்லோவ், பெரு கவாலியேரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜேம்ஸ் செக்வின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் ஸ்விட்சர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் டயானா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் இயக்குநரான டாட்னே...
அரசியல் திரில்லர் படமாக உருவாகும்ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’!

அரசியல் திரில்லர் படமாக உருவாகும்ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’!

News
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் 'டாடா' இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' அரசியல் திரில்லர் திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது! *தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால், ரவி மோகன் ஜோடியாக அறிமுகமாகிறார்* பல வெற்றிப் படங்களையும் 'மத்தகம்' இணையத் தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'அகிலன்' மற்றும் 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ளது. சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் 'கராத்தே பாபு' படத்தை 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகி வரும் இதில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாக இவர்களுடன் ...
புதிய வெப் சீரிஸ்  “மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்”!

புதிய வெப் சீரிஸ்  “மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்”!

News
இந்த காதலர் தினத்தன்று, **ஆஹா தமிழ்** அதன் புதிய வெப் சீரிஸ்  **"மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்"** மூலம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காதலைக் கொண்டுவருகிறது! மதுரை பையனுக்கும் சென்னைப் பெண்ணுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகளை ஆராயும் ஒரு மனதைக் கவரும் வெப் சீரிஸ் ஆக தயாரிக்கப்பட்டுள்ளது. பிரபல இணைய மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஏஞ்செலின் இந்த தொடரின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவருக்கு இணையாக தொடரின் நாயகனாக கண்ணா ரவி நடிக்கின்றார் .இவர்களுடன் ரேணுகா , குரேஷி, ஷ்யாமா ஷர்மி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். விக்னேஷ் பழனிவேல் இயக்கும் இந்த வெப் சீரிஸ் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வரும் பிப்ரவரி 14 அன்று வெளியாகவுள்ளது .காதலை கொண்டாடும் இந்த தொடரை காதலர் தினத்தன்று ஆஹா ஓடிடி தளத்தில் காணத்தவறாதீர்கள். **Celebrate Valentine’s Day with Love, Laughter,...
புகழ் பெற்ற அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினரானார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்!

புகழ் பெற்ற அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினரானார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்!

News
*பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராக ஏற்பு *சர்வதேச புகழ் பெற்ற, உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் அமைப்பான அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராக பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்! அமெரிக்கர் அல்லாத, வெளிநாட்டில் வசிக்கும் ஒளிப்பதிவாளர்கள் இந்த அங்கீகாரத்தைப் பெறுவது என்பது மிக மிகக் கடினமான ஒன்றாகும். பல ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர்கள் ஒரு ஒளிப்பதிவாளரின் படங்களை பார்த்து அந்த ஒளிப்பதிவின் தரத்தை சோதித்து அதைப்பற்றி ஆலோசித்து அதற்குப் பிறகு தான் கூட்டாக இந்த அங்கீகாரத்தை வழங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய பெருமைகளை ஏற்கனவே பெற்றுள்ள ரவிவர்மன், பெரிதும் மதிக்கப்படும் ஏ எஸ் சி உறுப்பினராக ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து திரையுலகினர் மற்றும் பல்வேறு...
ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’ படம்!

ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’ படம்!

News
விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ரொமாண்டிக் திரில்லர் "தருணம்" படம், ஜனவரி 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ! ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது. தேஜாவு திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ஒரு அருமையான காதல் கதை மூலம் மகிழ்விக்கவுள்ளார். வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால், ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. தமிழ்த்திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன், பெரும் பொருட்செலவில் இப்...
பாடகி சித்ரா பங்குபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

பாடகி சித்ரா பங்குபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

News
இ லவுன்ஜ் மற்றும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் இணைந்து வழங்கும் பிரபல பாடகி சித்ரா பங்குபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி! *சென்னை நந்தனம் ஒ ய்எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 8 அன்று ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது* இந்நிகழ்ச்சியை முன்னிட்டு குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி சித்ரா. "சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா" பாடல் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற நிலையில், இவர் சின்னக்குயில் சித்ரா என்றே மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் முதன் முறையாகத் தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில், இந்த இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த பத்திரிக்கை சந்திப்பு நிகழ்வினில்.... *E Lounge Events சார்பில் வெங்கட் பேசியதாவது...* இந...
ZEE5 ல்  “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள்!

ZEE5 ல் “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள்!

News
பெரு வெற்றி பெற்ற "தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்" படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள், ZEE5 ல் ஸ்ட்ரீமாகவுள்ளது !! ~ ஜனவரி 24 அன்று ப்ரீமியரான "தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்" படத்தினை, தமிழ் மற்றும் தெலுங்கில் புதிய பார்வையாளர்களுக்கு வழங்கும் விதமாகப் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாகவுள்ளது ~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, "சபர்மதி ரிப்போர்ட்ஸ்" படத்தினை, பார்வையாளர்கள் எளிதாக ரசிக்கும் வகையில், அவர்களின் உள்ளூர் மொழியில் கொண்டு வருகிறது. இயக்குநர் தீரஜ் சர்னா இயக்கத்தில், விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா மற்றும் ரித்தி டோக்ரா ஆகியோரின் நடிப்பில், 24 ஜனவரி 2025 அன்று திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம், இந்தியாவின் மிகவும் வேதனையான மற்றும் சர்ச்சைக்குரிய சோகங்களில் ஒன்றான 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை, பின் களமாகக் கொண்ட அரசியல் டிரா...