Sunday, November 29

Author: admin

ZEE5 தளத்தில் மலையாள ப்ளாக்பஸ்டர் “ஐடென்டிட்டி”!

ZEE5 தளத்தில் மலையாள ப்ளாக்பஸ்டர் “ஐடென்டிட்டி”!

News
ZEE5 வழங்கும், டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா கிருஷ்ணன் நடிப்பில், இதயத்தை அதிர வைக்கும் திரில்லர் “ஐடென்டிட்டி” ! அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்கத்தில், டோவினோ தாமஸ், த்ரிஷா கிருஷ்ணன், வினய் ராய், அஜு வர்கீஸ் மற்றும் மந்திரா பேடி நடிப்பில், ஆக்‌ஷன் கலந்த உளவியல் திரில்லராக உருவாகியுள்ள படம் “ஐடென்டிட்டி”. இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, ஜனவரி 31, 2025 அன்று ZEE5 ஒரிஜினல் சைக்கலாஜிக்கல் த்ரில்லரான 'ஐடென்டிட்டி’ திரைப்படத்தினை, ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக ஸ்ட் ரீம் செய்யவுள்ளது. உளவியல் திரில்லராக ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் இப்படத்தினை, தொலைநோக்கு படைப்பாளிகளான அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்கியுள்ளனர். பழிவாங்கலைச் சுற்றி, குற்றத்திற்கான நீதியின் முக்கியத்துவத்தைச் சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளத...

புதுமையான சினிமா அனுபவத்தை தரும் வகையில் உருவான ‘அகத்தியா’!

News
“அகத்தியா” படத்தின் 3 வது சிங்கிள் “செம்மண்ணு தானே” கல்ச்சுரல் பாடல் வெளியானது! பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் ஃபேன்டஸி-ஹாரர்- திரில்லர் படமான “அகத்தியா” படத்தின் மூன்றாவது சிங்கிள், “செம்மண்ணு தானே”, பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. புகழ்மிகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் பாடல், நம் மண்ணின் கலாச்சாரம் மற்றும் மருத்துவ செழுமையைக் கொண்டாடும் தலைசிறந்த படைப்பாக, ரசிகர்களையும், விமர்சகர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. பாடலின் ஆழமான வேரூன்றிய கருப்பொருள்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன், இந்தப் பாடல் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான “அகத்தியா” படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. பான்-இந்திய பிரம்மாண்ட படைப்பான “அகத்தியா” படம், பிப்ரவரி 28, 2025 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியிடப்படுக...
மோகன்லால் பிருத்விராஜ் சுகுமாரன் இணையும் ‘L2: எம்புரான்’!

மோகன்லால் பிருத்விராஜ் சுகுமாரன் இணையும் ‘L2: எம்புரான்’!

News
சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், தயாரிப்பில் உருவாகியுள்ள, முதல் மலையாளத் திரைப்படம் "L2: எம்புரான்" பட டீஸர் வெளியீடு! தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ், மிகவும் எதிர்பார்க்கப்படும் “L2E எம்புரான்” திரைப்படம் மூலம், மலையாளத் திரையுலகில் கால் பதித்துள்ளது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் "தி கம்ப்ளீட் ஆக்டர்" மோகன்லால் நாயகனாக நடித்துள்ளார். பெரும் வெற்றிப் படங்களான லூசிஃபர் மற்றும் ப்ரோ டாடிக்குப் பிறகு, இயக்குநர் மற்றும் நடிகராக அவர்களின் கூட்டணியில், உருவாகியுள்ள மூன்றாவது படம் என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2019 ல் வெளியான லூசிஃபர் படம், இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து, பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகமாக, “L2E எம்புரான்” ஒரு பிரம்மாண்ட சினிமா அனுப...
பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி உருவான Bad Girl திரைப்படம்!

பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி உருவான Bad Girl திரைப்படம்!

News
அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், 'TeeJay' அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (26.1.2025) சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தானு, இயக்குனர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த Bad Girl படத்தின் டீசரை பார்த்தபின் விருந்தினர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை...

சசிகுமார் – ராஜு முருகன் இணையும் ‘ மை லார்ட்’!

News
சசிகுமார் - ராஜு முருகன் இணையும் ' மை லார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! *ஆர்யா - அனுராக் காஷ்யப் - கிரீஷ் ஜகர்லமுடி - ராஜ் பி. ஷெட்டி - லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- இணைந்து வெளியிட்ட சசிகுமாரின் 'மை லார்ட் ' பட ஃபர்ஸ்ட் லுக்* தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர்யா - பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் - கன்னட திரைப்பட இயக்குநர் ராஜ் பி. ஷெட்டி - தெலுங்கு திரைப்பட இயக்குநர் கிரீஷ் ஜகர்லமுடி - மலையாள திரைப்பட இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- ஆகிய ஐந்து மொழி திரை ஆளுமைகள் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். முன்ன...
தமிழ் சினிமாவின் சொந்த மண்ணை கைப்பற்றும் டென்கோட்டா!

தமிழ் சினிமாவின் சொந்த மண்ணை கைப்பற்றும் டென்கோட்டா!

News
தமிழ் சினிமாவின் சொந்த மண்ணை கைப்பற்றும் டென்கோட்டா – உலகத்தரம் இந்தியாவில்! சென்னை, ஜனவரி 24, 2025 – தமிழ் சினிமாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய ஓடிடி தளம் டென்கோட்டா, தற்போது இந்தியாவில் தங்களின் சேவையை தொடங்கியுள்ளது. 10 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தமிழ் பேசும் மக்களுக்கு தரமான சினிமா அனுபவங்களை வழங்கி வந்த டென்கோட்டா, இப்போது தமிழ் சினிமாவின் சொந்த மண்ணில் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது. தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, உலகத்தரம் வாய்ந்த டால்பி அட்மாஸ் டெக்னாலஜியை கொண்டு பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபத்தை வழங்குவது டென்கோட்டாவின் தனித்துவம். தற்போது, இந்திய பார்வையாளர்களுக்கும் இந்த தரமான அனுபவம் கிடைக்க உள்ளது. “தமிழ் சினிமாவை உலகமெங்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இன்று, தமிழர்களின் சொந்த நாட்டில் டென்கோட்டாவை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த பெர...
வெற்றி மாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் “BAD GIRL” !

வெற்றி மாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் “BAD GIRL” !

News
அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றி மாறன் இணைந்து வழங்கும் "BAD GIRL" தயாரிப்பு: காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள வெற்றி மாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அமித் திரிவேதி முதல்முறையாக தமிழில் அறிமுகமாகி 6 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். வெற்றி மாறனுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் "BAD GIRL" படக்கதையை எழுதி இயக்கியுள்ளார். குறிப்பாக இவர் விசாரணை மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் வெற்றி மாறனுடன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது . Coming of Age Family Drama "BAD GIRL" படமானது வரும் 2025 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 9 வரை ராட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 54 வது பதிப்பில் நடைபெறும் Tiger Competition போட்டியின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்...
நன்றி தெரிவிக்கும் அஜித்குமார்!

நன்றி தெரிவிக்கும் அஜித்குமார்!

News
குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன். எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், என் நண்பர்கள் உட்ப அனைவருக்கும் எனது நன்றி. உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த உதவியது...

குழந்தைகள் முன்னேற்ற கழகம் _ விமர்சனம்

Reviews
  குழந்தைகள் முன்னேற்ற கழகம் _ விமர்சனம் Cast: Yogi Babu, Senthil, Saravanan, Mayil Samy, Lissy Antony, Subbu Panchu, Imaya Varman, Advaith Jai Masthan, Vaigha Rose, Ashmitha Singh, Chitra Lakshmanan, Harika Pedada Directed By : N.Shankar Dayal Music By : 'Sathaga Paravaigal' Shankar Produced By : Meenakshi Amman Movies - Arunkumar Sammantham and N.Sangkar Dayal ஓர் அரசியல்வாதியின் மகனும்,  அந்த அரசியல்வாதியின் சின்ன வீட்டு மகனும் ஒரே பள்ளியில் ஒன்றாக படிக்கிறார்கள். இருவருக்குமே தந்தையைப் போல் அரசியலில் புகழ் பெற வேண்டும் என்ற ஆசை. அப்பாவைப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ குதர்க்க புத்தி,  சதி வேலை என்று இருவரும் வளர்கிறார்கள். இப்படிச் செல்கிறது குழந்தைகள் முன்னேற்ற கழகம் படத்தின் கதை... மகன்கள் இருவருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆன அப்பா வேடத்தில் நடித்திருக்க...

வல்லான் _ விமர்சனம்

Reviews
வல்லான் _ விமர்சனம் மிகப்பெரும் செல்வந்தர் ஒருவரின் மருமகன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. உயிர் காவல் துறை அதிகாரி ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சுந்தர் சியை இந்த வழக்கை புலன்விசாரணை செய்யும்படி கேட்டுக்கொள்கிறார். சுந்தர் சியும் துப்பு துலக்கிக் கொண்டிருக்கும்போதே,  இந்த வழக்கு. தொடர்பான செய்திகளை வெளியிட்டுக்  கொண்டிருக்கும் ஒரு பெண்ணும் மரணமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். துப்பு எதுவும் கிடைக்காமல் காவல்துறையும் சுந்தர் சி யின் திணறிக் கொண்டிருக்க,  மற்றொரு பெண்ணின் சடலமும் கிடைக்கிறது. அந்தப் பெண்ணின் சடலத்துக்கு அருகில் மற்றொரு பெண்ணின் பிணமும் கிடைக்கிறது. இறந்து கிடக்கும் பெண்ணின் அடையாளத்துடன் தனது காதலி தான்யா ஹோப்  அடையாளமும் ஒத்துப்போக இறந்து கிடப்பது தனது காதலிதானோ என்று எண்ணி சுந்தர் சி க...