Sunday, November 29

Author: admin

ஹீரோ அவதாரம் எடுக்கும் ராஜபுத்திரன் தயாரிப்பாளர் கே.எம்.சபி !

ஹீரோ அவதாரம் எடுக்கும் ராஜபுத்திரன் தயாரிப்பாளர் கே.எம்.சபி !

News
'உம்மா தர்ரேன்...” பாடல் மூலம் பிரலமான 'ராஜபுத்திரன்' கே.எம்.சபி !., விரைவில் ஹீரோ அவதாரம் எடுக்கிறார் ! சினிமா என்ற கடலில் முத்தெடுப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே என்றாலும், அந்த ஒரு சிலர் மக்களின் கவனத்தை சட்டென்று தன் பக்கம் திருப்பும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள். விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் இதற்கு சான்று. தற்போது இவர்களின் வரிசையில் நம்பிக்கை நட்சத்திரமாக ஒரு பாடல் மூலமாகவே தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்திருக்கிறார் இளைஞர் கே.எம்.சபி. ‘ராஜபுத்திரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இளம் தயாரிப்பாளராக 21 வயதில் அறிமுகமாகியிருக்கும் கே.எம்.சபி, அப்படத்தில் இடம்பெற்றுள்ள “உம்மா தர்ரேன்...” என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருப்பதோடு, சில காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார். துள்ளல் நடனம், கவர்ந்திழுக்கும் உடல் மொழி மற்றும் எக்ஸ்பிரஷன்ஸ் மூலம் அந்த ஒற்றை பாட்டில் ர...
டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும்பிரபாஸின் ‘தி ராஜா சாப்’!

டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும்பிரபாஸின் ‘தி ராஜா சாப்’!

News
பிரபாஸின் 'தி ராஜா சாப்' 2025 டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது! *பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டீசர் ஜூன் 16ஆம் தேதியன்று வெளியாகிறது* கடந்த பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சலசலப்பு மற்றும் ஊகங்களுக்கு 'தி ராஜா சாப்' படத்தின் தயாரிப்பாளர்கள் உற்சாகத்துடன் பதிலளித்திருக்கிறார்கள். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்றும், ஜூன் 16ஆம் தேதியன்று இப்படத்தின் டீசர் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். இது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தையும் , சிலிர்ப்பூட்டும் அனுபவத்தையும் வழங்கும் என படக்குழு உறுதியளிக்கிறது. இதனால் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு நிறைவடைந்திருக்கிறது. 'இதுவரை அறியப்படாத பிரதேசத்தில் அடியெடுத்து வைக்கும் பிரபாஸ்' - என 'தி ராஜா சாப்' படத்தினை தலைப்புச் செய்தியாக்க...
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேகரிக்கப்பட்ட இசை பாடல்கள்

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேகரிக்கப்பட்ட இசை பாடல்கள்

News
'சையாரா இசை ஆல்பத்தில் உள்ள பாடல்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நான் சேகரித்த பாடல்கள்' இதில் என் எண்ணங்கள் மற்றும் மெல்லிசைகள் உள்ளது!’ - மோஹித் சூரி* யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் மோஹித் சூரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சையாரா .இப்படத்தின் டீசர் வெளியான பிறகு 2025ம் ஆண்டின் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கும் படமாக மாறியுள்ளது. காலத்தால் அழியாத காதல் படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் ,மோஹித் சூரி கூட்டணி சையாரா திரைப்படம் மூலமாக அறிமுக நடிகர்களை வைத்து ஒரு அழகான காதல் கதையை உருவாக்குவதற்காக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இன்று இப்படத்திலிருந்து 'சையாரா ' என்ற தலைப்புப் பாடலை வெளியிட்டுள்ளனர் . மேலும், மோஹித் சூரி , இந்த இசை ஆல்பத்தில் உள்ள பாடல்கள் 'எண்ணங்கள் மற்றும் மெல்லிசைகள்’ இருப்பதாக கூறியுள்ளார் . இதற்காக அவர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கவனமாக சேகரித்து தொகுத்து...
குயின் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும், “காதி” திரைப்படம்!

குயின் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும், “காதி” திரைப்படம்!

News
*Anushka's Ghaati Movie Tamil and English P குயின் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும், “காதி”படம், ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது! UV கிரியேஷன்ஸ், ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்க, குயின் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், கிரியேட்டிவ் இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவாகியுள்ள பான் இந்தியா பிரமாண்ட படைப்பான  “காதி” (GHAATI) – ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி “காதி” படத்தில் மிரட்டலான அதிரடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  அவரது பிறந்தநாளில் வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரத்தை  அறிமுகப்படுத்தும் கிளிம்ப்ஸ் வீடியோ, திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்தது. UV கிரியேஷன்ஸ்  வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜாகர்லமுடி ஆகியோர் இணைந்து  தயாரிக்கின்றனர். வேத...
நாசர் நடிக்கும் ‘கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’!

நாசர் நடிக்கும் ‘கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’!

News
இசைஞானி இளையராஜா இசையில், நாசர் நடிக்கும் ‘கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’ தந்தை - மகன் கதை! கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயரான படங்களுக்கு எப்பவும் மக்களிடத்தில் மதிப்பு அதிகம் இருக்கும். அன்று தொடங்கி இன்று, லப்பர் பந்து, குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் வரை மாபெரும் ஹிட் படங்களாக மக்கள் கொண்டாடுகிறார்கள். அந்த வகை படமாக ‘கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’ உருவாகி வருகிறது. படத்தை பற்றி தயாரிப்பாளர்கள் குறிப்பிடும் போது.. “கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’ படத்திற்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசை அமைக்கிறார். அவரின் பிறந்த நாளான இன்றைய மகிழ்வான தருணத்தில், எங்களது திரைப்படத் தலைப்பின் அறிவிப்பு முன்னோட்டக் காட்சியை (வீடியோ) வெளியடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம் தந்தை - மகன் உறவு பற்றிய நெகிழ்ச்சி மிகுந்த இக்கதையின் நாயகனாக நாசர் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக...
புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’!

புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’!

News
E 5 என்டர்டெயின்மென்ட் சார்பில், தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில், இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. வரும் ஜூன்-5 ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது.. இந்தநிலையில் இந்தப்படத்தின் சிறப்பு திரையிடல் காட்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று பார்த்தார்.. படம் பார்த்துவிட்டு தொல். திருமாவளவன் பேசும்போது, “பேரன்பும் பெருங்கோபமும் என்கிற இந்த ...
ராஜ புத்திரன்_ விமர்சனம்

ராஜ புத்திரன்_ விமர்சனம்

Reviews
ராஜ புத்திரன்_ விமர்சனம் கிராமத்து மக்கள் அனைவரும் மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கும் பிரபு, தனது மகன் வெற்றியை உயிருக்குயிராக நேசித்து வளர்த்து வருகிறார். மழை பொய்த்ததால் ஊரில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. ஆயினும் தன் மகன் வெற்றியை வேறு எங்கும் வேலைக்கு அனுப்ப பிரபு விரும்பவில்லை. இந்த சூழலில் தான் காதலிக்கும் கிருஷ்ண பிரியாவை மணந்து கொள்கிறார் வெற்றி. வெளிநாடுகளில் வேலை செய்து தாய் நாட்டில் உள்ள தங்கள் வீட்டுக்கு பலரும் அனுப்பும் பணத்தை சட்ட விரோதமாக அவர்களது வீடுகளில் சேர்க்கும் தொழிலை கோமல் குமாரும் அவரது அடியாட்களும் செய்து வருகின்றனர். வெற்றி இவர்களிடம் வேலைக்கு சேர்கிறார். ஒரு நாள் பணத்தை குறிப்பிட்டவர்களிடம் கொண்டுபோய் சேர்க்க செல்லும்போது அந்தப் பணம் திருட்டு போகிறது. வெற்றியுடன் பணி புரியும் வேறு சிலரும் பணத்தை டெலிவரி செய்ய போகும்போது திருட்டு போகிறது. பணம் இவ்...
இளையராஜாவின் 82ஆவது பிறந்தநாள் விழா!

இளையராஜாவின் 82ஆவது பிறந்தநாள் விழா!

News
இன்று காலையில் இசைஞானி இளையராஜா தனது 82வது பிறந்தநாளை கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய ஸ்டுடியோவில் கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர். தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இசைஞானியின் 1417வது படமான "நினைவெல்லாம் நீயடா" படத்தை இயக்கிய ஆதிராஜன், இளையராஜாவின் அழகிய ஓவியத்தை பரிசளித்து மகிழ்ந்தார். அவருடன் கோல்டன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிர்வாக இயக்குனர் பி.பாக்யராஜ், பிரசிடென்சி கல்லூரி விரிவுரையாளர் பி. அம்புலிராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்....
‘குபேரா’ இசை வெளியீட்டு விழாவில் அரங்கத்தை ஒளிர செய்த நட்சத்திரங்கள்!

‘குபேரா’ இசை வெளியீட்டு விழாவில் அரங்கத்தை ஒளிர செய்த நட்சத்திரங்கள்!

News
'குபேரா' இசை வெளியீடானது நட்சத்திரங்கள் நிறைந்த இரவாக அரங்கத்தை ஒளிரச் செய்தது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான 'குபேரா'வின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்த பிரமுகர்களால் நிரம்பி வழிந்ததால் சென்னை ஒரு பிரகாசமான மாலைப்பொழுதைக் கண்டது. இந்நிகழ்ச்சியில் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா, இயக்குனர் சேகர் கம்முலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர்கள் சுனில் நாரங் மற்றும் ஜான்வி நாரங், பரத் நாரங், சிம்ரன் நாரங், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, தயாரிப்பு வடிவமைப்பாளர் தோட்டா தரணி மற்றும் பாடலாசிரியர்கள் விவேகா, சந்திரபோஸ் மற்றும் நந்தா கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் உற்சாகத்தையும் பகிர்ந்து கொண்டனர். *நடிகை ரஷ்மிகா மந்தனா* ரசிகர்களின் அதீத ஆரவாரங்களுக்கு...
‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

News
உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்திற்கு ஆனந்த் மணி பொறு...