Sunday, November 29

Author: Raja Senthilnathan

கமாண்டோவின் லவ் ஸ்டோரி” படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

கமாண்டோவின் லவ் ஸ்டோரி” படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
"கமாண்டோவின் லவ் ஸ்டோரி" படப்பிடிப்பின் இறுதி நாளில் 'கடா வெட்டி', படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்தார் கதையின் நாயகன் வீர அன்பரசு! "கமாண்டோவின் லவ் ஸ்டோரி" படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்! தயாரிப்பாளர் அனுராதா அன்பரசு அனைவருக்கும் பிரியாணி விருந்து பரிமாறினார்! கதையின் நாயகனும், இயக்குனருமான வீர அன்பரசு, படப்பிடிப்புக்கு ஒத்துழைத்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் பாராட்டி, பரிசளித்து, நன்றி தெரிவித்தார்! சமீபத்தில், கங்கை அமரன் இசைக்கரங்களால் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது! கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் விரைவில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது!    ...
பான்-இந்திய ஆக்சன் திரில்லராக உருவாகும்“கட்டாளன்”!

பான்-இந்திய ஆக்சன் திரில்லராக உருவாகும்“கட்டாளன்”!

News
‘மார்கோ’வின் வெற்றிக்குப் பின், Cubes Entertainment புதிய பான்-இந்திய பிரம்மாண்ட படைப்பான ‘கட்டாளன்’  படத்தை கோலாகலமாகத்  தொடங்கியது !! “மார்கோ” எனும் ஆக்சன், த்ரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகம்மது,  தனது Cubes Entertainment தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், அடுத்ததாக, அறிமுக இயக்குநர் ஷெரீஃப் முகமது இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மிக பிரம்மாண்டமான  அதிரடி ஆக்சன் படமான  “கட்டாளன்”  படத்தினை தயாரிக்கிறார்.  இப்படம் இன்று கொச்சியில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரம்மாண்ட பூஜையுடன், கோலாகலமாக துவங்கியது. இவ்விழாவின் முக்கிய சிறப்பாக, ‘பாகுபலி’ படத்தில் நடித்துப் புகழ்பெற்ற சிறக்கல் காளிதாசன் யானை கலந்து கொண்டது. அதோடு, ஆடம்பர கார்களும், மோட்டார் பைக்குகளும் வ...
அக்ஷய் குமார் – சைஃப் அலி கான் இணையும் ‘ஹைவான்’ ஷூட்டிங் தொடக்கம்!

அக்ஷய் குமார் – சைஃப் அலி கான் இணையும் ‘ஹைவான்’ ஷூட்டிங் தொடக்கம்!

News
கே.வி.என். புரொடக்ஷன்ஸ் - தெஸ்பியன் பிலிம்ஸ் இணையும் ஹைவான் படப்பிடிப்பு தொடக்கம்! இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹைவான் என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படம் தொடர்பான புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், ஹைவான் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர். திரையுலகின் உச்சத்தில் இருக்கும் இரு பிரபலங்கள் இணையும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஹைவான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை அக்ஷய் குமார்...
எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காதல் கவிதையாக உருவாகும் ’18 மைல்ஸ்’!

எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காதல் கவிதையாக உருவாகும் ’18 மைல்ஸ்’!

News
நடிகர் அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காதல் கவிதையாக உருவாகிறது ’18 மைல்ஸ்’! பதினெட்டு மைல்களுக்கு அப்பாலும் வானம் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கை வெவ்வேறானது. முடிவில்லாத கடல், அமைதி, தொலைவு, சொல்லப்படாத காதல் எனப் பல விஷயங்கள் இதில் இருக்கிறது. இவற்றை எல்லாம் பேசும் கடலோர காதல் கதை ’18 மைல்ஸ்’ என்கிறது குழு. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் உருவான இந்த உணர்வு உங்கள் மனங்களை ஊடுருவி ஆன்மாவைத் தொடும். சித்து குமார் இசையமைப்பில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல்கள் எழுதியுள்ளார். கே எழில் அரசுவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கவிதையாக விரியும். நாஷின் படத்தொகுப்பும் எம். தேவேந்திரனின் கலை வடிவமைப்பும் நம் உணர்வுகளை தாலாட்டும். இவற்றை எல்லாம் தாண்டி நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னாவுக்கு இடையி...
திருவண்ணாமலை பின்னணியில் ஸ்பிரிச்சுவல் திரில்லர் படம்!

திருவண்ணாமலை பின்னணியில் ஸ்பிரிச்சுவல் திரில்லர் படம்!

News
'பன் பட்டர் ஜாம்’ தயாரிப்பாளரின் புதிய த்ரில்லர் படம்* *திருவண்ணாமலை பின்னணியில் ஸ்பிரிச்சுவல் திரில்லர் படத்தை உருவாக்க தயாராகி வரும் ‘பன் பட்டர் ஜாம்’ தயாரிப்பாளர்* *தெலுங்கில் இன்று வெளியாகும் ‘பன் பட்டர் ஜாம்’* கடந்த ஜூலை மாதம் ரொமான்டிக் காமெடி படமாக வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் இன்று தெலுங்கில் அந்தப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.. பிக்பாஸ் புகழ் ராஜூ ஜெயமோகன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியிருந்தார். ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக இந்த படத்தை சுரேஷ் சுப்பிரமணியன் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த ‘எண்ணித் துணிக’ என்கிற படத்தை தயாரித்தவர். திருச்சியில் பிறந்து தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வரும் சுரேஷ் சுப்பிரமணியன் ஹாலிவுட் பட தயாரிப்பு ...
சிரஞ்சீவி புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம்!

சிரஞ்சீவி புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம்!

News
  மெகாஸ்டார் சிரஞ்சீவி, பிளாக்பஸ்டர் இயக்குநர் பாபி கொல்லி, முன்னணி தயாரிப்பு நிறுவனம் KVN Productions  இணையும் – #ChiruBobby2 படம் மெகா கான்செப்ட் போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டது! பிளாக்பஸ்டர் கூட்டணியான மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் வெற்றி இயக்குநர் பாபி கொல்லியின் கூட்டணி மீது மிகப்பெரிய  எதிர்பார்ப்பு நிலவுகிறது. மெகாஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு,  இருவரும் இணையும் இந்த மெகா-ப்ராஜெக்ட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக  ‘வால்டர் வீரய்யா’ படத்தில் விண்டேஜ் மெகாஸ்டார் அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்து இந்தக்  கூட்டணி வசூல் சாதனை படைத்தது.  இந்த புதிய திரைப்படத்தினை KVN Productions தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. மெகாஸ்டாரை ஒரு  மாஸான கதாப்பாத்திரத்தில் காட்டும் திறன் கொண்ட இயக்குநரான பாபி, இந்த புதிய படத்துக்கு “The blade that set t...
‘குற்றம் கடிதல் 2’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

‘குற்றம் கடிதல் 2’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

News
JSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு; தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய JSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, திட்டமிட்டிருந்த நாட்களை விட மூன்று நாட்கள் முன்பாகவே, கோடைக்கானலில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இயக்குநர் எஸ்.கே.ஜீவா கூறியதாவது, “கோடைக்கானலில் ஏற்பட்ட சவாலான காலநிலையையும் மீறி, திட்டத்திற்கு முன்னதாகவே முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். இது எங்கள் குழுவின் ஒருங்கிணைந்த உழைப்பாலும், தயாரிப்பு அணியின் தளராத ஒத்துழைப்பாலும் சாத்தியமாகியது. தயாரிப்பாளரும், கதாநாயகனுமான JSK சதீஷ்குமார் அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்திருந்தார், ஒரு காட்சியில் எந்தவித உதவியுமின்றி இயல்பாகக் கண்ணீர் விட்டபோது, அங்கே இருந்த முழுக் குழுவினரிடமிருந்தும...
விஜய் சேதுபதி வெளியிட்ட ” ரூம் பாய் ” படத்தின் முதல் பார்வை!

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ரூம் பாய் ” படத்தின் முதல் பார்வை!

News
இன்வெஸ்டிகேஷன் திரில்லரக உருவாகி இருக்கும் படம் " ரூம் பாய் " திரைப்பட கல்லூரி மாணவர் ஜெகன் ராயன் இயக்கியுள்ளார்! ACM சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்திருக்கும் படத்திற்கு " ரூம் பாய் " என்று பெயரிட்டுள்ளனர். C.நிகில் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹர்ஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், youtube புகழ்காத்து கருப்பு, சாதனா, இன்ஸ்டா புகழ் கவிதா விஜயன் மற்றும் கற்பகம் உட்பட பலர் நடித்துள்ளனர். சி.பாரதி ராஜன் Dft இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடலாசிரியர் சூரியமூர்த்தி வரிகளுக்கு வேலன் சகாதேவன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை D.V. மீனாட்சி சுந்தர் செய்திருக்கிறார். நடனம் - தினா ஸ்டண்ட் - கார்த்திக் வர்ம...
‘பருத்திவீரன்’ சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் !

‘பருத்திவீரன்’ சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் !

News
நடிகர் 'பருத்திவீரன்' சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் ! ஒரு காலத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் சரவணன். மறுபிரவேச வாய்ப்பாக அமைந்த 'பருத்திவீரன்' படத்திற்குப் பிறகு அந்தப் பாத்திரத்தின் வெற்றியால் பெயரே 'பருத்திவீரன்' சரவணன் என்றானது. அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்தார்; நடித்தும் வருகிறார். எதிர்மறை மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வரும் அவர், தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டு பயணித்து வருகிறார். அண்மையில் வெளியான 'சட்டமும் நீதியும்' இணையத் தொடர் சரவணன் வாழ்க்கையில் அமைந்த ஒரு மைல் கல் எனலாம். அந்த அளவுக்குத் தனது பண்பட்ட நடிப்பை அதில் வெளிப்படுத்தி இருந்தார். நடிகர் சரவணன் ஒரு விநாயகர் கோவிலை சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டம், வட்டக்காடு என்கிற ஊரில் கட்டி இருக்கிறார் . தனது தோட்டத்தில் எழுந்து அருள்பாலிக்கும் விநாயகராக அதை வணங்கி வந்தவர், தற...
இந்திரா_ விமர்சனம்

இந்திரா_ விமர்சனம்

Reviews
இந்திரா_ விமர்சனம் சென்னை நகரிலே தொடர்ச்சியாக சில கொலைகள் நடைபெறுகின்றன. சைக்கோ கொலையாளி ஒருவன் இந்த கொலைகளை செய்வதாக காவல்துறை சந்தேகிக்கிறது. கொலையுண்டவரின் கையை கொலையாளி வெட்டி எடுத்துச் சென்று விடுகிறான். மதுபோதையில் காவல்துறை வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் ரவி தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார். அத்துடன் அவருக்கு திடீரென கண் பார்வை பறிபோகிறது. இந்த சூழ்நிலையில் வசந்த் ரவியின் மனைவி மெஹ்ரின் பிர்சோடாவும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். சைக்கோ கொலையாளி என போலீஸ் சந்தேகப்பட்டு, விசாரணை செய்யும் சுனில், தான் 28 கொலைகளை செய்ததாகவும் ஆனால் வசந்த் ரவியின் மனைவியை தான் கொல்லவில்லை என்றும் கூறுகிறார். கொலைகளை விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டர் கல்யாண், வசந்த் ரவிதான் தன் மனைவியை கொன்று இருப்பார் என சந்தேகம் ஏற்படுகிறது. உண்மையில் நிஜமான கொலையாள...