‘பிளாக்மெயில்’ படத்தை பெரிதும் எதிர்பார்க்கும் நடிகை தேஜூ அஸ்வினி!
"நடிப்பில் புதிய சவால்களை கொண்ட படமாக 'பிளாக்மெயில்' அமைந்தது"- நடிகை தேஜூ அஸ்வினி!
தன்னுடைய இளமை துள்ளலான நடிப்பிற்கு பெயர் பெற்ற நடிகை தேஜூ அஸ்வினி தற்போது வெளியாக இருக்கும் 'பிளாக்மெயில்' படத்தில் நடித்திருக்கிறார். மு. மாறன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத தேஜூ அஸ்வினியை பார்க்க இருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
'படாக் படாக்' பாடலில் ஜிவி பிரகாஷ்குமார்- தேஜூ அஸ்வினி இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த வைரல் ஜோடி தற்போது பெரிய திரையிலும் இணைந்துள்ளது. இந்த முறை இன்னும் தீவிரமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் கதைக்களமாகவும் அமைந்திருக்கிறது. எனர்ஜிடிக் மற்றும் யூத்ஃபுல் கதாபாத்திரத்தில் மட்டுமே இதுவரை பார்த்திருந்த தேஜூ அஸ்வ...









