Sunday, November 29

Author: Raja Senthilnathan

தஞ்சாவூர் மண்ணின் பெருமையை பேசும் ‘சோழநாட்டான்’

தஞ்சாவூர் மண்ணின் பெருமையை பேசும் ‘சோழநாட்டான்’

News
செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மும்பையை சேர்ந்த தமிழ் தொழிலதிபரான மாரியப்பன் முத்தையா தயாரிக்கும் 'சோழநாட்டான்' திரைப்படம் திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. "பட்டுக்கோட்டை" ரஞ்சித் கண்ணா இயக்கும் 'சோழநாட்டான்' முழுக்க ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விஜயகாந்த் நடித்த 'உழவன் மகன்' படத்திற்கு பிறகு ரேக்ளா ரேஸ் பின்னணியில் இப்படம் உருவாகிறது. மதுரை, திருநெல்வேலி புகழ் பாடும் எத்தனையோ படங்கள் வந்துள்ள நிலையில் சோழர்களின் தேசமான தஞ்சாவூர் மண்ணின் தனிச்சிறப்பை திரையில் பறைசாற்றும் விதமாக இந்த திரைப்படம் தயாராகிறது. 'சோழநாட்டான்' திரைப்படத்தில் 'டைனோசர்ஸ்' மற்றும் 'ஃபேமிலி படம்' புகழ் உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது....

சட்டமும் நீதியும் இணைய தொடர் விமர்சனம்

Reviews
சட்டமும் நீதியும் இணைய தொடர் விமர்சனம் ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் 'சட்டமும் நீதியும்',  திரைப்படத்தைவிட வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கும் தொடர் என தாராளமாகச் சொல்லலாம். நீதி மன்ற வளாகத்திலேயே ஒரு முதியவர் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்யும் முதல் காட்சியே கதைக்குள் நம்மை இழுத்துக்கொள்கிறது. ஏன் அந்த நபர் தற்கொலை செய்து கொள்கிறார்? அவருக்கு கிடைக்காமல் போன நீதி என்ன என்பது காட்சிகளாக விரியத் தொடங்குகிறது. வழக்கறிஞரான 'பருத்தி வீரன்'  சரவணன், கேஸ் எதுவும் கிடைக்காமல் நீதிமன்ற வளாகத்திலேயே டீக்கடைக்கு அருகில் நோட்டரி பப்ளிக் என்ற போர்டை வைத்துக்கொண்டு, சக வழக்கறிஞர்களின் ஏளனத்துக்கு ஆளாகிறார். கோர்ட்டில் மட்டும் இல்லை. வீட்டிலும் மகன்கூட மதிப்பதில்லை. ஆனால் சட்டக்கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சரவணனின் திறமைகளை அறிந...
ரெஜினா கசான்ட்ரா நடிக்கும் “தி வைவ்ஸ்” (The Wives)

ரெஜினா கசான்ட்ரா நடிக்கும் “தி வைவ்ஸ்” (The Wives)

News
ரெஜினா கசான்ட்ரா நடிக்கும் "தி வைவ்ஸ்" (The Wives) - மதுர் பந்தார்க்கர் இயக்குகிறார்! Rocket Boys, Jaat, Farzi, Kesari Chapter 2 போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார். இந்த புதிய திரைப்படம் "தி வைவ்ஸ்" எனும் தலைப்பில் உருவாகிறது. உணர்வுமிக்க, சிக்கலான கதாபாத்திரங்களை நம்பிக்கையுடன் சித்தரித்து வரும் ரெஜினா, இந்த படத்திலும் ஒரு முக்கியமான கதாநாயகி வேடத்தில் நடிக்கவுள்ளார். இது அவருடைய திறமைகளை மேலும் வெளிக்கொண்டு வரும் ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் மதுர் பந்தார்க்கர், Fashion, Page 3, Heroine போன்ற படங்களில் பெண்களின் உணர்வுகளையும் வாழ்க்கை பாதைகளையும் மையமாகக் கொண்டு ...
வெளியீட்டுக்கு முன்பே ஹிட்டான’ஜென்ம நட்சத்திரம்’!

வெளியீட்டுக்கு முன்பே ஹிட்டான’ஜென்ம நட்சத்திரம்’!

Articles
'ஜென்ம நட்சத்திரம்' வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன! ஊடகங்களின் பாராட்டுகளும், முன்னோட்டக் காட்சிகளின் சிறப்பான எதிர்வினைகளும் 'ஜென்ம நட்சத்திரம்' படத்துக்கு வணிக வட்டாரத்திலும் திரையரங்க உரிமையாளர்களிடமும் வலுவான வரவேற்பை ஏற்படுத்தியுள்ளன. ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடும் இந்த அதிரடித் திகில் திரைப்படம் ஜூலை 18 (வெள்ளிக்கிழமை) உலகமெங்கும் திரைக்கு வர உள்ளது. சினிமா வட்டாரத்தில், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பலத்த ஓப்பனிங்கை பெறும் என எதிர்பார்ப்பு வளர்ந்துவருகிறது. துல்லியமான அணுகுமுறை, தரமான உள்ளடக்கம், மற்றும் பாணியை மதிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட கதை , இவை அனைத்தும் வெற்றிகரமான திரைப்படத்தின் ரகசிய சூத்திரம். 'ஜென்ம நட்சத்திரம்' குழு, அந்த சூத்திரத்தை கைவசப்படுத்தி விட்டது போலவே தெரிகிறது. 1981-ஆம் ஆண்டு வெளியான அதே பெயரைக் கொண்...
நடிகை ரித்விகா திருமணம்!

நடிகை ரித்விகா திருமணம்!

News
நடிகை ரித்விகா திருமணம்! 'பரதேசி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா 'மெட்ராஸ்' படம் மூலம் பிரபலமடைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றார். ஒருநாள் கூத்து, கபாலி, இருமுகன்,ஓநாய்கள் ஜாக்கிரதை, இரண்டாம் உலகப்போரும் கடைசி குண்டும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து எதார்த்தமாக நடிக்க கூடிய நடிகை என்று பாராட்டு பெற்ற ரித்விகா, தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ரித்விகாவுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது. திருச்சியை சேர்ந்த ஐடி ஊழியர் வினோத் லக்‌ஷ்மண் என்பவரை ரித்விகா மணக்க உள்ளார். இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாகும். சமீபத்தில் நடைபெற்ற ரித்விகா - வினோத் லக்‌ஷ்மண் நிச்சயதார்த்த நிகழ்வில் இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டார்கள். ...
‘காளிதாஸ் 2 ‘படத்தின் டீசர் வெளியீடு!

‘காளிதாஸ் 2 ‘படத்தின் டீசர் வெளியீடு!

News
நடிகர்கள் ரவி மோகன் & ஜீ. வி.பிரகாஷ் குமார் இணைந்து வெளியிட்ட பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' படத்தின் டீசர்! தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் 'காளிதாஸ் 2' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரவி மோகன் - ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற 'காளிதாஸ்' படத்தை தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காளிதாஸ் 2' திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ர...
எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இணைந்து நடிக்கும்  படம் – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இணைந்து நடிக்கும் படம் – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

News
குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ' புரொடக்சன் நம்பர் ஒன்' படத்தின் பூஜை - படப்பிடிப்பு தொடக்கம்! குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. காமெடி நடிகராக பிரபலமான 'ஃப்ராங்க்ஸ்டர்' ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணி...
ராஷ்மிகா மந்தனா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்”!

ராஷ்மிகா மந்தனா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்”!

News
ராஷ்மிகா மந்தனா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” படத்தின் முதல் பாடல் “நதிவே” வெளியாகியுள்ளது! நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஜோடியாக நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” திரைப்படம், கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகி வருகிறது. புகழ்பெற்ற தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இப்படத்தினை வழங்குகிறார். இயக்கும் பணியை நடிகராகவும், இப்போது இயக்குநராகவும் செயல்படும் ராகுல் ரவீந்திரன் மேற்கொள்கிறார். முழுமையான காதல் படைப்பாக உருவாகி வரும் இப்படத்திலிருந்து முதல் இசை வெளியீடாக “நதிவே” எனும் பாடல் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ள இந்த பாடல், மனதைக் கொள்ளை கொள்ளும் இசையும், ஈர்க்கும் குரலும் கொண்ட ஒரு உணர்வுப்பூ...
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிக்கும் சீயான் விக்ரம்!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிக்கும் சீயான் விக்ரம்!

News
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில், 96 பிரேம்குமார் இயக்கும் புதிய படம் !! வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. இந்திய திரைப்பட உலகின் பெருமைமிகு நடிகர் சீயான் விக்ரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, 96, மெய்யழகன் புகழ் இயக்குநர் பிரேம் குமார் இப்படத்தை இயக்கவுள்ளார். உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன் சிறப்பான கதைகளை வழங்கும் திறமை கொண்ட இயக்குநர் பிரேம் குமார், பன்முக திறமை கொண்ட நடிப்புக்காக பெயர் பெற்ற சீயான் விக்ரம் ஆகியோர் இணைந்து தமிழ் சினிமாவிற்கு தனித்தன்மை வாய்ந்த ஒரு சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கின்றனர். இந்த திரைப்படத்தை, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட்டின் தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிக்கிறார். இப்படம், நம் மனதை ஆழமாக தொடும் கதைக்களத்துடன், பரவசமான நடிப்பை கலந்துசேர்த்த...
ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படத்தில் இணையும் கவின் – பிரியங்கா மோகன்!

ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படத்தில் இணையும் கவின் – பிரியங்கா மோகன்!

News
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி! திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில கவின்- பிரியங்கா மோகன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார் . ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரிலான இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்களும், ்படப்பிடிப்பு குறித்த தகவலும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவ...