![]()
சுராஜ் வெஞ்சமூடு_தேவதர்ஷினி தம்பதியின் மகன் கென், பள்ளியில் படிக்கும் போது படிப்பில் கவனம் செலுத்தாமல் யாராவது ஒரு பெண்ணை காதலித்துதான் திருமணம் செய்து கொள்வது என்று தீர்மானித்துக் கொண்டு பள்ளிக்கு தினமும் வந்து செல்கிறார்.
காதலித்த பெண்ணையே கல்யாணம் செய்து கொண்டு அப்படியே செட்டில் ஆகி விட வேண்டும் என்ற கனவுடன் இருந்தாலும் எந்தப் பெண்ணும் அவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
அனைத்துமே ஒருதலை ராகமாக அமைந்த நிலையில், பள்ளியில் படிக்கும் மீனாட்சி தினேஷ் கெவினை காதலிக்கிறார்.
இருவரும் மகிழ்ச்சியுடன் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்த நிலையில் திடீரென மீனாட்சி ஊருக்கு போக வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இப்போது மீனாட்சி இல்லாத சமயத்தில் அதே பள்ளியில் படிக்கும் பிரியான்ஷி என்ற மாணவியும் கென்னை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
பெண்ணும் அந்தப் பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக பழகிக் கொண்டிருக்கிறார் ஊரிலிருந்து திரும்பி வந்த மீனாட்சிக்கு கண் பிரியாணி புதிய நட்பு தெரிய வர என்னை விட்டு பிரிந்து செல்கிறார் பிரியான்சியின் காதலும் பொய் என்று தெரிய வர மனம் உடைந்து போகிறார் கென்.
இதன் பிறகாவது மனம் மாறி படிப்பில் அவர் கவனம் செலுத்துகிறாரா இல்லையா என்பதுதான் யூத் படத்தின் பிற்பகுதி.
நடிகராக தன்னை நிரூவேண்டும். இந்தப் படத்தில் இயக்குனராகவும் தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்
இயக்குனர் சென்னை விட நடிகர் என் தான் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். என் நண்பர்களாக வரும் மூவரும் அட்டகாசமான தேர்வு. படத்தை கலகலப்பாக கொண்டு செல்வது இவர்கள்தான்.
நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக பொழுதை கழிப்பதிலாகட்டும் உணர்ச்சிகரமான காட்சிகளில் கோபம், ஆக்ரோஷம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதில் ஆகட்டும் கென் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.
இளம் நாயகிகளாக வரும் மீனாட்சி தினேஷ், ரியான்க்ஷி மற்றும் மற்றொரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் அனிஷ்மா ஆகியோரின் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது.
இதேபோல் கென் தந்தையாக நடித்திருக்கும் சுராஜ் வெஞ்சமூடு நெகிழ்ச்சியான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்.
தாயார் வேடத்தில் வரும் தேவதர்ஷினியும் மகன் மீது கொண்ட அதீத பாசத்தை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
படத்திற்கு உயிரோட்டமாக அமைந்திருப்பது ஜீவி பிரகாஷின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை.
எந்த பள்ளியில் இப்படி மாணவ மாணவிகளை சேர்ந்து பழக அனுமதிக்கிறார்கள்? எந்தப் பள்ளியில் இப்படி கேன்டீன் இருக்கும் என்பது போன்ற லாஜிக் மீறல்களை எல்லாம் மறந்துவிட்டு பார்த்தால் யூத் இளைஞர்களை கவரும் படமாகத்தான் இருக்கிறது.


