![]()
ஹாலிவுட் இயக்குனர் ராண்டி கென்ட்டிடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்த பிரபு ராம்.சி, வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குநராக தமிழில் அறிமுகமாகிறார்.
சமீபத்தில் இவரை சந்தித்தபோது கூறினார்…..
ரொமாண்டிக் காமெடி வகைப்படங்களின் தீவிர ரசிகன் நான்.
நான் தமிழில் இயக்குநராகும் அறிமுகமாகும் படம் இந்த வகையில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
ரொமாண்டிக் காமெடி படங்கள் உலகளாவிய பார்வையாளர்களை எப்போதும் கவர்ந்திழுக்கும். அந்த வகை ஜாலியான படங்களே மக்கள் கூட்டத்தை முழுவதுமாக திரையரங்குகுள் கொண்டு வந்துவிடும். குறிப்பாக, நல்ல அழகான ஜோடி நாயகன், நாயகியாக நடிக்கும்போது அது இன்னும் கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தி குறைந்தபட்ச வெற்றிக்கு உத்தரவாதத்தைக் கொடுக்க வாய்ப்புண்டு.
பிக் பாஸ் 2 தொடர் மூலம் பார்வையாளர்களன் கவனத்தை பெருமாளவில் ஈர்த்த மஹத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரையும் இணையாக்கி என் முதல் படத்தை உருவாக்குகிறேன்.
வடசென்னை பையன், வசதியான குடும்பப் பின்னணியைக் கொண்ட பெண் இருவரும்தான் பிரதான பாத்திரங்கள். இவர்கள் தங்கள் இயல்பு மற்றும் வாழ்க்கை முறையில் முற்றிலும் மாறுபட்டவர்கள். இவர்கள் இருவருக்குமான ஈர்ப்பு மற்றும் முரண்பாடுகளின் பின்னணிய்ல்தான் இந்தக்கதை நகர்கிறது என்று கூறினார் பிரபு ராம்.சி
வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கவிருக்கும் பெயரிடப்படாத இப்படத்தின் இதர நட்சத்திரங்கள் தேர்வு மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.



