செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் உரிமையாளர் விஜய பிரபாகரன், பி.வி. சிந்து தங்கள் அணியில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும், தனது தந்தை சிறந்த அரசியல் தலைவராகவும், சகோதரர் சினிமாத்துறையிலும் சாதித்துவரும் நிலையில், தனக்கு விளையாட்டுத் துறையின் மீது அதிக ஆர்வம் என அவர் தெரிவித்தார். மேலும், டிசம்பர் மாதங்களில் தொடர்ந்து இயற்கை சீற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு அதுபோல் எதுவும் நடக்காது என நம்பிக்கை தெரிவித்த விஜயபிரபாகரன், இந்த ஆண்டு நடைபெறும், பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரிலும் சென்னை ஸ்மாசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் எனவும், உறுதிபட தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை ஸ்மேஷர்ஸ் அணியின் நட்சத்திர வீராங்கனையான பி.வி. சிந்து பேசுகையில், சென்னை ஸ்மாஷர்ஷ் அணியில் விளையாடுவது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். அதேபோல், கிரிஸ் அட்காக், கேபி அட்காக் ஆகியோருடன் இணைந்து விளையாடுவதும் பிடித்திருப்பதாக கூறிய பி.வி.சிந்து, இந்த முறையும், பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரில் சென்னை ஸ்மேஷர்ஷ் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் எனத் தெரிவித்தார்.