Maria Cast & Crew
*Cast*
SaiShri Prabhakaran
Pavel Navageethan
Sidhu Kumaresan
Vignesh Ravi
Balaji Velan
Sudha Pushpa
Abinaya
*Crew detai
Script & Direction: Hari K Sudhan
Producer: Hari K Harasudhan
Dop: Manishankar G
Editors: Kaamesh K (&) Nishar sharef A
மரியா _ விமர்சனம்
கிறிஸ்துவ மதத்தில் நன் என்று சொல்லப்படும் கன்னியாஸ்திரி ஆகிவிட்ட இளம் பெண் மரியா, தன் உறவுக்கார பெண்ணுடன் தங்க அவள் இருக்கும் வீட்டுக்கு வருகிறார்.
ஒரு பெண் தோழி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் வாடகையை பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வரும் மரியாவின் உறவுக்கார பெண் ஒரு வாலிபனுடன் லிவ் இன் உறவில் இருக்கிறார்.
இந்த ஜோடி இரவு நேரத்தில் அந்தரங்க உறவில் இருக்கும்போது ஏற்படும் சப்தங்கள் மரியாவை வெகுவாக தொந்தரவு செய்கின்றன.
தான் எதையோ இழந்துவிட்டதையும், மனம் அதற்காக ஏங்குவதையும் மரியா உணர்கிறார்.
கன்னியாஸ்திரி என்ற சிலுவையை தான் தேவையின்றி சுமந்து கொண்டிருப்பதாக கருதும் மரியா, அதை இறக்கி வைக்க தீர்மானித்து தன் தாயாரிடம் இந்த முடிவை சொல்கிறார்.
கடுமையாக கோபித்துக் கொள்ளும் தாயார் மரியாவை வீட்டை விட்டு விரட்டி அடிக்கிறார்.
இந்த சூழ்நிலையில் கிறிஸ்துவுக்கு எதிராக செயல்படும் சாட்டானிசம் என்ற சிறிய குழுவினருடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களது நிகழ்வுகளில் பங்கேற்கிறார் மரியா.
மீண்டும் தஞ்சம் வேண்டி உறவுக்கார பெண்ணிடமே வரும் மரியா உறவுக்கார பெண் லிவிங் உறவில் இருக்கும் இளைஞனுடனே உறவு கொள்கிறார்.
இதை கண்டு வெகுண்டெழும் உறவுக்கார பெண் மரியாவை அங்கிருந்து அடித்து விரட்டுகிறார்.
இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் மரியா படத்தின் கதை.
வித்தியாசமான கதையை எடுத்துக்கொண்டு அதை துணிச்சலுடன் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி கே சுதன்.
நாயகி மரியாவாக வரும் சாய் ஸ்ரீ மற்றும் சேட்டன் குழுவினரை இயக்கும் காதல் நவ கீதம் ஆகிய இருவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்
“நானாகவா விரும்பி கன்னியாஸ்திரி ஆனேன்… நீ உன் வாழ்க்கையில் வேண்டியது எல்லாம் அனுபவித்து விட்டு என் விருப்பத்திற்கு மாறாக என்னை கன்னியாஸ்தி ஆக்கிவிட்டாயே…” என்று தன் தாயிடம் மரியா விவாதிக்கும் காட்சி சிறப்பு.
மணிசங்கரின் ஒளிப்பதிவு மிக மிக சுமார் ரகமாக இருப்பதுடன் சில இடங்களில் மோசமாகவும் இருக்கிறது.
இரண்டாவது முறையாக உறவுக்கார பெண் வீட்டுக்கு மரியா வரும்போது வாசலில் நின்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் காட்சியின் ‘லுக்’ தவறாக இருக்கிறது.
பெரிய பொறுப்பில் இருப்பதாக சொல்லப்படும் கதாபாத்திரங்கள் company என்ற சாதாரண ஆங்கில வார்த்தையை மிக மிக மோசமாக உச்சரிக்கின்றனர்.
இதுபோன்ற சில குறைகளை தவிர்த்து இருக்கலாம். விறுவிறுப்பான திரைக்கதை இன்றி நத்தை வேகத்தில் நகரும் காட்சிகளை பெரிதாக நினைக்காமல் படத்தின் உள்ளடக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தி படம் பார்க்கும் ரசிகர்களை வேண்டுமானால் மரியா கவரலாம்.