அஜய் தேவ்கனின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்!

0

 318 total views,  1 views today


அஜய் தேவ்கனின் அடுத்த படம் இந்திய கால்பந்து அணியின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டது – மைதான் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  இன்று இப்படத்தின் படப்பிடிப்பு  தொடங்கி 2020 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

இப்படத்தை ZEE ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து வழங்குகின்றனர.

தேசிய விருது பெற்ற படமான ‘பாதாய் ஹோ’வின் அமித் ரவீந்தர்நாத் சர்மா இப்படத்தை இயக்கயுள்ளார்.  திரைக்கதை சைவின் குவாட்ரோஸ் மற்றும் வசனங்களை  ரித்தேஷ் ஷா எழுதியுள்ளனர்.  “மைதான்” போனி கபூர், ஆகாஷ் சாவ்லா மற்றும் அருணாவா ஜாய் சென்குப்தா ஆகியோர் தயாரிக்கின்றனர்.

 
Share.

Comments are closed.

CLOSE
CLOSE