இந்தியாவின் பிரமாண்ட படங்களில் ஒன்றாக, உலகின் மிகப்பெரும் விளையாட்டான ஃபுட்பாலை மையமாக வைத்து உருவாகும் “மைதான்” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜனவரி 2021 ல் ஆரம்பமாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு லக்னோ, கொல்கத்தா மற்றும் மும்பை பகுதிகளில் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கபட்ட நிலையில் கோவிட் -19 பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுவிட்டது.
படத்தின் முக்கிய பகுதிகள் அடங்கிய 65% படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்டது. மீதியுள்ள பகுதிகளின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கி 2021 ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது. படத்தில் மிக அதிகமான விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் உள்ளது. அதற்கான வேலைகள் ஏற்கனவே லண்டன், கனடா மற்றும் எல் ஏ( லாஸ் ஏஞ்சலீஸ்) பகுதிகளில் நடைபெற்று வருகிறது. VFX பணிகள் நிறைய நேரம் பிடிக்கும் வேலையென்பதால் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட...
அஜய் தேவ்கனின் அடுத்த படம் இந்திய கால்பந்து அணியின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டது - மைதான் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2020 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை ZEE ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து வழங்குகின்றனர.
தேசிய விருது பெற்ற படமான ‘பாதாய் ஹோ’வின் அமித் ரவீந்தர்நாத் சர்மா இப்படத்தை இயக்கயுள்ளார். திரைக்கதை சைவின் குவாட்ரோஸ் மற்றும் வசனங்களை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளனர். "மைதான்" போனி கபூர், ஆகாஷ் சாவ்லா மற்றும் அருணாவா ஜாய் சென்குப்தா ஆகியோர் தயாரிக்கின்றனர்.
...