காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’!
காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Zee Studios வழங்க, MIG Production & Studios இணைந்து தயாரித்துள்ளது.
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுக...








