Thursday, November 26

Blog

பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்” – நடிகர் ரவி மோகன்!

பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்” – நடிகர் ரவி மோகன்!

News
“பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்” - நடிகர் ரவி மோகன்! வில்லனாக அறிமுகமாகும் நடிகர் ரவி மோகனின் ’பராசக்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பல பிளாக்பஸ்டர் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் படங்களைக் கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நடிகர் ரவி மோகன் ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பற்றி ரவி மோகன் பகிர்ந்து கொண்டதாவது, "’பராசக்தி’ சாதாரண படம் அல்ல! எண்ணற்ற கடின உழைப்பாளிகளின் அர்ப்பணிப்பால் உருவான தலைசிறந்த படைப்பு இது. என் மீது நம்பிக்கை வைத்து மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். என் சினிமா பயணத்தின் இந்த தருணத்தில் நான் ...
மீண்டும் ஒரு படத்தை இயக்கும் பாக்யராஜ்!

மீண்டும் ஒரு படத்தை இயக்கும் பாக்யராஜ்!

News
மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளேன் - 50வது வருடத்தில் அறிவித்த கே.பாக்யராஜ்! திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகரான கே. பாக்யராஜ் அவர்கள் 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி, இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் மக்கள் தொடர்பாளர்களான டைமன் பாபு, சிங்காரவேல் மற்றும் ரியாஸ் K அஹ்மத் ஆகியோர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு சால்வி அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு நிகழ்ச்சிக்கு வந்த பத்திரிகையாளர் அனைவருடனும் பாக்யராஜ் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் கே. பாக்யராஜ் அவர்கள் பேசுகையில், அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவில் 50 ஆண்டுகள் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. என்னுடைய நண்பர்கள், எனது தாயார் என அனைவரும் எ...
‘ஹாட் ஸ்பாட் 2much ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

‘ஹாட் ஸ்பாட் 2much ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

News
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் 'ஹாட் ஸ்பாட் 2 மச்' படத்தின் முன்னோட்டம்! நடிகை பிரியா பவானி சங்கர் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஹாட் ஸ்பாட் 2much ' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - ஆர்யா ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹாட் ஸ்பாட் 2much எனும் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், அஸ்வின் குமார், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா,ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, 'ஆதித்யா' கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி - ஜோசப் ...
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
Beyond Pictures நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெயவர்தன் தயாரிப்பில், இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு..! சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ப்ரோமோவுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் முழு படப்பிடிப்பும் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததைப் படக்குழுவினர் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடினர்; அதே உற்சாகத்துடன் திரைக்கு கொண்டு வருவதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். Beyond Pictures நிறுவனத்திற்காக ஜெயவர்தன் தயாரித்துள்ள இந்தப் படம், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாகும் (Production No.1). அது அனைத்து வயதினரையும் கவரும் ஒரு முழுமையான ‘ஃபீல்-குட்’ பொழுதுபோக்கு படமாக ‘ஹேப்பி ராஜ்’ உருவாக்கப்பட்டுள்ளது. மரியா இள...
“‘பராசக்தி’ எல்லோருக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும்” – நடிகர் அதர்வா!

“‘பராசக்தி’ எல்லோருக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும்” – நடிகர் அதர்வா!

News
“வரலாற்றின் ஒரு பகுதியில் இருந்து உருவான ‘பராசக்தி’ எல்லோருக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும்” – நடிகர் அதர்வா முரளி! வசீகரமும், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி நடிப்பதில் ஆர்வம் கொண்டவருமான நடிகர் அதர்வா முரளி பல்வேறு வெற்றிப்படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் இருந்து தனது மனதுக்கு நெருக்கமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “ஆகாஷ் பாஸ்கரன் சாரை இயக்குநராக எனக்கு முன்பே தெரியும். தற்போது அவர் படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ‘பராசக்தி’ கதையையும் அதில் என்னுடைய கதாபாத்திரம் குறித்தும் என்னிடம் முதலில் சொன்னவர் ஆகாஷ்தான். ‘ப...
பெங்களூர் மெட்ரோவில் ஒரு நட்சத்திர பிறந்தநாள் கொண்டாட்டம்!

பெங்களூர் மெட்ரோவில் ஒரு நட்சத்திர பிறந்தநாள் கொண்டாட்டம்!

Uncategorized
பெங்களூர் மெட்ரோவில் முதன்முறையாக ஒரு நட்சத்திர பிறந்தநாள் கொண்டாட்டம்  – ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை ! “பெங்களூர் மெட்ரோவில் பிறந்தநாள் கொண்டாட்ட மரியாதை பெற்ற  முதல் நடிகர் – ராக்கிங் ஸ்டார் யாஷ் !! பெங்களூர் நகரம் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்று நிகழ்வை சமீபத்தில் கண்டது. இந்திய சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும்  படைப்புகளில் ஒன்றாக உருவாகிக் கொண்டிருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படத்தின் மையமாக திகழும் நடிகர்  யாஷ் உடைய பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் பெங்களூர் மெட்ரோவை முழுமையாக ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்ட மேடையாக மாற்றியுள்ளனர். வரும் ஜனவரி 8 அன்று நடிகர்  யாஷ்  பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில்,  நகரத்தின் உயிர்நாடியாக விளங்கும் பெங்களூர் மெட்ரோ, முதன்முறையாக ஒ...
அபூர்வமான சினிமா அனுபத்தைத் தரப் போகும் காந்தி டாக்ஸ்”!

அபூர்வமான சினிமா அனுபத்தைத் தரப் போகும் காந்தி டாக்ஸ்”!

Uncategorized
Zee Studios வழங்கும் “காந்தி டாக்ஸ்” ( ‘Gandhi Talks’ ) – விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடிப்பில் A.R. ரஹ்மான் இசையில் 30 ஜனவரி 2026 அன்று வெளியாகிறது !!* Zee Studios ரசிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வழக்கத்திற்கு மாறான திரைப் படைப்பான “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் வரும் 30 ஜனவரி 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நவீன இந்திய சினிமாவில் அரிதாகக் காணப்படும் ஒரு மௌனத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ள “காந்தி டாக்ஸ்”, வசனங்கள் ஏதுமின்றி, மௌனமே கதையை சொல்லும், மிக வலுவான ஒரு துணிச்சலான படைப்பாக உருவாகியுள்ளது. சினிமா பெரும்பாலும் பிரமாண்டம் மற்றும் ஒலியால் உருவாக்கப்படும் இக்காலகட்டத்தில், “காந்தி டாக்ஸ்” அதிலிருந்து மாறுபட்டு, உணர்ச்சி மற்றும் அமைதியைத் தனது மொழியாக தேர்ந்தெடுத்துள்ளது. இந்தப் படம், தனத...
‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக்!

‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக்!

News
யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்திலிருந்து, மெலிசா (Mellisa) பாத்திரத்தில், ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது ! யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது. அந்தப் பயணத்தில், முக்கியமான திருப்பமாக, மெலிசா என்ற கதாபாத்திரத்தில் ருக்மிணி வசந்த் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். கம்பீரமும் அதிகாரமும் கொண்ட, அசைக்க முடியாத உறுதியுடன் நிற்கும் மெலிசாவாக திரையில் தோன்றுகிறார். இந்த படம், இயக்குநர் கீது மோகன்தாஸின் தனித்துவமான கற்பனை உலகில், நடிகர் யாஷுடன் ருக்மிணி வசந்த் இணைவது, முக்கியமான கூட்டணியாக அமைந்துள்ளது. தனித்துவமான நடிப்பு திறமைக்கு பெயர்பெற்ற ருக்மிணி...

Jawa Yezdi Motorcycles’ top-selling Yezdi Adventure and Roadster now available on Amazon and Flipkart

News
Jawa Yezdi Motorcycles’ top-selling Yezdi Adventure and Roadster now available on Amazon and Flipkart Chennai: Jawa Yezdi Motorcycles brings its bold new launches of the year, the 2025 Yezdi Adventure and the 2025 Yezdi Roadster, to Amazon and Flipkart. So far, available only in showrooms and clocking record festive sales compared to last year, Yezdi’s most popular motorcycles are now only a click away on India’s largest e-commerce platforms. On the heels of high festive demand, the latest additions to the Yezdi line-up are set to become more accessible in key markets, reinforcing the brand’s connection with riders who live and breathe classic motorcycling. With all its new models online, the company is capitalising on a strong online debut last year to sharpen its digital distribution r...
PVR Cinemas மீது  புகார்!

PVR Cinemas மீது புகார்!

News
‘ஹால் (Haal)’ திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் திரையிடல் மறுப்பு – PVR Cinemas மீது CCKTDFD-க்கு அதிகாரப்பூர்வ புகார்! *தமிழ்நாட்டில் மலையாள திரைப்படமான ‘ஹால் (Haal)’-க்கு திட்டமிட்ட முறையில் திரையிடல்கள் மறுக்கப்பட்டதாக, PVR Cinemas – தமிழ்நாடு நிர்வாகம் மீது அதிகாரப்பூர்வ புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.* புகார் அளித்துள்ளவர், தயாரிப்பாளர் சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினராகவும், CCKTDFD அமைப்பின் செயலில் உள்ள விநியோகஸ்தர் உறுப்பினராகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத் துறையின் நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து முழுமையான அறிவுடன் செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். ‘ஹால்’ திரைப்படம் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள PVR திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டு, பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும், வர்த்தக ரீதியாக திருப்திகரமான வசூலையும் பெற்று...
CLOSE
CLOSE