Sunday, November 29

Blog

ஐபி கிளைம்ப் (IP Climb) சேவையை தொடங்கிய ஃபிப்செயின் டெக்னாலஜி நிறுவனம்!

ஐபி கிளைம்ப் (IP Climb) சேவையை தொடங்கிய ஃபிப்செயின் டெக்னாலஜி நிறுவனம்!

News
சர்வதேச படைப்பாளிகளுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பு: ஐபி கிளைம்ப் (IP Climb) சேவையை தொடங்கிய ஃபிப்செயின் டெக்னாலஜி நிறுவனம்! படைப்பு கருவாவது முதல் உருவாவது வரையும் அதை தாண்டியும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் உரிமைதாரர்களின் நலனை காப்பதே ஐபி கிளைம்ப் சேவையின் நோக்கம்!! அதி நவீன தொழில்நுட்பம் மூலம் திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் பெரும் மாற்றத்தையும் வருவாய் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்ட ஃபிப்செயின் டெக்னாலஜி (Fipchain Technology) நிறுவனம், தனது புரொடியூசர் பஜார் (ProducerBazaar.com) சேவையின் மூலம் இந்திய திரையுலகில் உள்ளடக்க வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து தனது சேவைகளை விரிவுப்படுத்தும் ஃபிப்செயின் டெக்னாலஜி, ஐபி கிளைம்ப் (IP Climb) எனும் புதிய சேவையை தொடங்கி உள்ளது. படைப்புகள் மற்றும் உள்ளடக்கத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ள இன...
சென்னை  ஃபைல்ஸ் முதல் பக்கம் _ விமர்சனம்

சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் _ விமர்சனம்

Reviews
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் _ விமர்சனம் மதுரையில் வாழ்ந்து மறைந்த பிரபல மர்மக்கதை ஆசிரியர் ஒருவரின் வாழ்க்கை சம்பவங்களை தொடராக எழுதுவதற்கு ஒரு பத்திரிகை முடிவு செய்கிறது. இதற்காக ஆசிரியர் குழுவை சேர்ந்த சில்பா மஞ்சுநாத், நாவலாசிரியரின் மகன் வெற்றியை சந்தித்து பேசுகிறார். சில்பா மஞ்சுநாத்துக்கு உதவ சென்னைக்கு வருகிறார் வெற்றி. வந்த இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவின் அறிமுகம் ஏற்படுகிறது. கொலை ஒன்றை துப்பறியும் பணியில் இருந்த தம்பி ராமையாவுக்கு துப்பறியும் கதாசிரியர் மகன் வெற்றி உதவ முன் வருகிறார். கொலை ஒன்றுடன் நிற்காமல் தொடர்கிறது. மேலும் பல கொலைகள் தொடர்ந்து நடக்கவே சீரியல் இல்ல யார் என்பதை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரமாகிறது. இந்த சூழலில் போட்டித் தேர்வுக்கு படித்து வந்த தம்பி ராமையாவின் மகள்,  வணிக வளாகம் ஒன்றின் மேல் தளத்திலிருந்து குதித்து தற்கொ...
வாராஹி அம்மனின் வரலாறு!

வாராஹி அம்மனின் வரலாறு!

News
இன்று தலைப்பு வெளியீடு நடைபெற்றுள்ள பான் இந்திய திரைப்படம் ‘சமரி – தி லெஜெண்ட் ஆஃப் வாராஹி’, வாராஹி அம்மனின் வரலாறு மற்றும் பெருமைகளை உலகம் முழுவதும் பரவச் செய்யும் நோக்கில் உருவாகிறது. இந்த பிரம்மாண்ட படைப்பை குளோபல் பிக்சர்ஸ் சார்பில் அழகர்ராஜ் ஜெயபாலன் தயாரிக்கிறார். ‘எக்கோ’ மற்றும் ‘பல்ஸ்’ படங்களின் இயக்குநர் நவின் கணேஷ் இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார். பெரும் நட்சத்திர பட்டாளமும், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இவர்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இந்த பான் இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்குகிறது....
சரண்டர் _ விமர்சனம்

சரண்டர் _ விமர்சனம்

News
சரண்டர் _ விமர்சனம் சென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் ரைட்டர் ஆக பணியாற்றும் லால் விரைவில் ஓய்வு பெற இருக்கிறார். அதே நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராக தர்ஷன் பணியாற்றுகிறார். தேர்தலுக்கு மிகச் சில நாட்களே இருக்கும் நிலையில், காவல்துறை அறிவுறுத்தலின்படி உரிமத்துடன் கூடிய துப்பாக்கிகளை சொந்த உபயோகத்திற்காக வைத்திருப்பவர்கள் காவல் நிலையத்தில் சரண்டர் செய்து வருகின்றனர். நடிகர் மன்சூர் அலிகான் அதுபோல் தன் துப்பாக்கியை சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார். யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் துப்பாக்கி திடீரென காணாமல் போகிறது. தேர்தல் செலவுக்காக லோக்கல் தாதா ஒருவர் மூலம் அனுப்பப்படும் 10 கோடி ரூபாய் பணம் காணாமல் போகிறது. இந்த இரண்டு விஷயங்களும் எந்த புள்ளியில் இணைகின்றன என்பதை இயக்குனர் கௌதமன் கணபதி விறுவிறுப்பான திரைக்கதை மூலம் வித்தியாசமான திரில்லராக திரையில் வடித்த...
‘கிராண்ட் ஃபாதர் ‘ ( GRAND FATHER) படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘கிராண்ட் ஃபாதர் ‘ ( GRAND FATHER) படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

News
குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'கிராண்ட் ஃபாதர் ' படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) படக் குழுவினர் வாழ்த்து தெரிவித்து, அப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ' கிராண்ட் ஃபாதர்' ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடித்த...
உசுரே _ விமர்சனம்

உசுரே _ விமர்சனம்

Reviews
உசுரே _ விமர்சனம் ஆந்திரா, தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சித்தூரில் நடப்பதாக சித்தரிக்கப்படும் 'உசுரே' படத்தின் கதை ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாயகன் டீஜய் அருணாசலம் வீட்டுக்கு எதிர் வீட்டிற்கு தன் தாய் மந்த்ராவுடன் குடி வருகிறார் நாயகி ஜனனி. தன் மகளை யாராவது சாதாரணமாகப் பார்த்தாலே கன்னத்தில் 'பளார்' விடும் கண்டிப்பான தாயான மந்த்ராவை மீறி ஜனனியை காதலிக்கிறார் டீஜய். ஆரம்பத்தில் இந்தக் காதலை ஜனனி ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், டீஜய் தன்மீது கொண்டிருக்கும் ஆத்மார்த்தமான காதலைப் புரிந்து கொண்டு ஜனனியும் காதலிக்க தொடங்குகிறார். மகளின் காதல் மந்த்ராவுக்கு தெரிய வர அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் ஆச்சரியங்களை மட்டுமல்ல பல அதிர்ச்சிகளையும் கொடுக்கிறது. 70 களிலும் 80 களிலும் வந்த திரைப்படங்களின் கதையைப் போல் சாதாரணமாக சென்று கொண்டிருந்த 'உ...

“கடுக்கா” திரைப்படத்தின் டீசர் வெளியானது!

News
நடிகர் விஜய் கௌரிஷ் ஹீரோவாக அறிமுகம் ஆகும் "கடுக்கா" திரைப்படத்தின் டீசர் இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில் நடிகர் விஜய் கௌரிஷ், ஸ்மேகா, ஆதர்ஷ், கொங்கு மஞ்சுநாதன், மணிமேகலை ,சுதா மற்றும் பலர் நடித்துள்ளனர். கடுக்கா திரைப்படத்தின் பாடல்களை நிலவை பார்த்திபனின் வரிகளில் இசை அமைப்பாளர் கெவின் டிகோஸ்டா இசையமைத்துள்ளார். சதீஷ்குமார் துரைக்கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மே மாதம் தேனிசை தென்றல் தேவா அவர்களின் குரலில் "பொல்லாத பார்வை" என்ற லிரிக்கல் வீடியோ பாடல் வெளியாகி, வித்தியாசமான முறையில் பத்திரிகை சந்திப்பில் பாடலின் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலம் அடைந்த நிலையில், இப்போது டீசர் வெளியிட்டு மக்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. ஏற்கனவே "கடுக்கா" திரைப்படத்தின் போஸ்டரை இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர், தயாரிப்பாளர் எல்.கே.சுதீஷ், இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்தி...
போகி _ விமர்சனம்

போகி _ விமர்சனம்

News
போகி _ விமர்சனம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் திரைப்படம் போகி. எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத மலை கிராமம் ஒன்று. அங்கு வசிக்கும் மக்கள் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால்கூட, தூளி கட்டி படுக்க வைத்து பல கிலோ மீட்டர்கள் கீழே இறங்கி அடிப்பகுதியில் உள்ள நகரத்தில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும். இந்தப் பின்னணியில் தன் தங்கை சுவாசிகாவை நகரத்தில் உள்ள கல்லூரியில் படிக்க வைத்து டாக்டராக்கி தனது மலைவாழ் மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறார் நபி நந்தி. ஆனால் விதி இந்த அண்ணன் தங்கை வாழ்க்கையில் விளையாடி விடுகிறது. ரகசிய கேமராக்கள் மூலம் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து வெளிநாடுகளுக்கு விற்கும் கூட்டத்தின் வக்கிரமான காம வியாபாரத்திற்கு பலியாகிறார் சுவாசிக்கா. தங்கையின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன் நபி நந்திக்கு இந்த உண்மை தெரிய வர, சமூக விரோத கும்பலை ...
53 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த மகாஅவதார் நரசிம்மா’!

53 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த மகாஅவதார் நரசிம்மா’!

News
'மகாஅவதார் நரசிம்மா' முதல் வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது! இதயங்களை தூண்டும் வகையிலும், கலாச்சாரத்தை எழுப்பும் வகையிலும் வெளியான 'மகாஅவதார் நரசிம்மா' முதல் வாரத்தில் இந்தியாவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய 'மகாஅவதார் நரசிம்மா' இந்தியாவில் வெளியான ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. இது வணிக ரீதியிலான வெற்றியை மட்டுமல்ல.. நாடு முழுவதும் ஆழமாக எதிரொலிக்கும் பிரத்யேக கலாச்சார அலையையும் குறிப்பிடுகிறது. இந்தப் படத்தை வித்தியாசப்படுத்துவது அதன் மன்னிப்பு கேட்காத சனாதனி எனும் மையமாகும். இந்து தத்துவம் - இந்து தர்மம் மற்றும் பண்டைய மதிப்பீடுகள் மீது ஒளியை போல் பிரகாசிக்கும் ஒரு கதை.. காட்சி ரீதியாக சக்தி வாய்ந்...
உலகளாவிய விளம்பர பணிகளை தொடங்கிய ஹ்ரித்திக் ரோஷன்!

உலகளாவிய விளம்பர பணிகளை தொடங்கிய ஹ்ரித்திக் ரோஷன்!

News
'யஷ் ராஜ் ஃபிலிம்ஸ்-இன் வார் 2 பாடலான 'ஆவன் ஜாவன்' பாடலுக்கு இந்த உலகம் நடனமாட வேண்டும் 'என உலகளாவிய விளம்பர பணிகளை தொடங்கிய ஹ்ரித்திக் ரோஷன்! யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள வார் 2 படத்தின் முதல் பாடல் 'ஆவன் ஜாவன்' தற்போது வெளியாகியுள்ளது . இது ஒரு கவர்ச்சிகரமான காதல் பாடல், இதில் சூப்பர் ஸ்டார்களான ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி தங்கள் மிகவும் அழகான தோற்றத்தில் தோன்றியுள்ளனர். இந்த பாடல் தற்போது ஹ்ரித்திக் மற்றும் கியாராவின் கெமிஸ்ட்ரி மற்றும் காதல் காட்சிகள் காரணமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், ஹ்ரித்திக் ரோஷன் ஒரு வீடியோவை வெளியிட்டு, "ஆவன் ஜாவன் என்ற காதல் பாடலுக்காக உலகம் நடனமாட வேண்டும் "என்று ஒரு உலகளாவிய விளம்பர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் . இந்த பாடல் எளிமையாக இருப்பதால் அனைவரும் இந்த போட்டியில் பங்கேற்கலாம் என்று குறிப...
CLOSE
CLOSE